சென்னைக்கு பெண்/தலித் மேயர் -"நீதிமன்ற ஆணைப்படி"-மத்திய அரசின் புது சட்டங்களுக்கு உட்பட்டது
சென்னைக்கு தலித் மேயர் என்பது இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் இருந்து வரும் விஷயம் . மேயர் பதவி மூன்றாண்டுகள் இருந்த காலத்தில் ஒவ்வொரு ஏழாம் ஆண்டும் பட்டியலினத்தவர் ஒருவர் அங்கே மேயராக்க படுவார் .இதில் மத சிறுபான்மையினர் இட ஒதுக்கீடும் இருந்தது குறிப்பிட தக்கது.
பட்டியலினம் மக்கள் தொகையை கணக்கில் வைத்து அதை உறுதி செய்திருந்தார்கள். அப்படிதான் சிவசன்முகம் பிள்ளை ,தந்தை சிவராஜ் போன்றோர் அந்த பதவியை அலங்கரித்தார்கள்.1970 களுக்கு பின்பு இந்த முறை திமுக அரசால் மாற்றி அமைக்க பட்டது .அதிலிருந்து தலித் ஒருவருக்கு பதவி கொடுக்கும் விஷயம் நிறுத்தப்பட்டது.
நடுவில் நிறைய வழக்குகள் எல்லாம் நடந்து,விசிக வும் சட்ட போராட்டத்தை முன்னெடுத்து பல ஆண்டுகள் கழித்து கிடைத்த நீதிமன்ற தீர்ப்பின் படி தற்போதய திமுக அரசு சென்னை மாநகராட்சியை மீண்டும் பட்டியலினத்தவருக்கு ஒதுக்கியது.
தற்போதய சட்டத்தின் படி பத்து வருடத்திற்கு ஒரு முறை பட்டியலின மேயர் வர வேண்டும்.
அடுத்து பெண்களுக்கு ஊராட்சிமன்ற தேர்தலில் 33 சதவிகிதம் இட ஒதுக்கீடு கொண்டு வந்தது முன்னாள் முதல்வர் கருணாநிதி. அதை முன்னாள் முதல்வர் ஜெயலிதா 2016 ஆம் ஆண்டு 50 சதவிகிதம் என்று ஆக்கினார் .அதுவும் மத்திய அரசின் புது சட்டங்களுக்கு உட்பட்டு.
அதிலும் 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி பெண்கள் அதிகளவில் இருக்கும் சென்னை மாநகராட்சி பெண்களுக்கு ஒதுக்கப்பட்டது.
இது இரண்டிலும் தற்போதய தமிழக ஸ்டாலினுக்கு என்ன பங்கு இருக்கிறது என்கிற கேள்வியை இங்கே முன்வைக்கிறேன்.
இரண்டாவது பிரதிநிதித்துவம் என்பது ஒடுக்கப்பட்ட சமூகத்தில் வாய்ப்பு மறுக்கப்பட்ட ஆளுமை மிக்க ,திறமை மிக்க மனிதர்களை ,ஜனநாயக உரிமை படி தேர்ந்தெடுப்பது.
ஒரு குறிப்பிட்ட வார்டு அல்லது தொகுதி திடீரென்று பெண்ணுக்கு ஒதுக்கீடு செய்யும்போது .அந்த தொகுதியில் காலம் காலமாய் செல்வாக்கும் பதவியும் அனுபவித்து வரும் குடும்பத்தில் இருந்து அவசரத்துக்கு எந்த அரசியல் செயல்பாடும்,சமூக செயல்பாடும் இல்லாத பெண்ணை நிற்க வைத்து ,பணத்தை செலவு செய்து ஜெயிக்க வைத்து ,மறைமுக தேர்தலின் மூலம் ஒரு பதவியை கொடுப்பது எந்த விதத்தில் சமூக நீதி?
இது tokenism இல்லையா? இதற்கு எதற்கு இந்த கூப்பாடு?
No comments:
Post a Comment