Friday, March 4, 2022

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் மயில் சிலையை மாற்றியது ஏன்?

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் இறைவனிடம் தன் சாபம் போக அன்னை கற்பாகாம்பாள் மயில் வடிவில் தவம் செய்த இடம்; இந்தக் கோவிலின் மயில் வாயில் பூ வைத்து இருக்கும்.

மயில் பெருமளவில் முருகன் கோவில்களில் உள்ளவை வாயில் பாம்பு வைத்து இருக்கும்.

2004ல் மாற்று மயில் சிலையையும் வாயில் பாம்பு வைத்தபடி செய்தமையால் சிக்கினர்.
 சிலைகள் மாயமான காலகட்டத்தில் அறநிலையத் துறை ஆணையராக இருந்த தனபாலன், ஸ்தபதி முத்தையா, கோயில் நிர்வாக அதிகாரியாக இருந்த திருமகள் (தற்போதைய கூடுதல் ஆணையர்) உட்பட சிலர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. திருமகள் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

தமிழக இந்துசமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள சென்னை மயிலாப்பூர் கபாலீஸ் வரர் கோயிலுக்கு கடந்த 2004 ஆகஸ்ட்டில் கும்பாபிஷேகம் நடத் தப்பட்டது. அதற்கு முன்னதாக திருப்பணிகள் செய்யப்பட்டபோது, புன்னைவன நாதர், ராகு, கேது சிலைகள் சேதம் அடைந்திருப்ப தாக கூறப்பட்டது. அந்த சிலைகள் மாற்றப்பட்டு, புதியசிலைகள் வைக் கப்பட்டன. அறநிலையத் துறை சார் பில் இப்பணி மேற்கொள்ளப் பட்டது. 

ஆனால், கோயில் சிலைகளை மாற்ற அர்ச்சகர்கள், பக்தர்கள் கடும்எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில், இரவோடு இரவாக யாருக்கும் தெரியாமல் 3 சிலைகளும் மாற்றப்பட்டன.

ஆகம விதிப்படி, அகற்றப்படும் பழைய சிலைகளுக்கு பூஜை செய்து, மண்ணில் புதைத்துவிட வேண்டும். ஆனால், அவ்வாறு செய்யாமல், அதிகாரிகள் துணையு டன் 3 சிலைகளும் வெளிநாட்டுக்கு கடத்தப்பட்டு, பல கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டதாக கூறப்படுகிறது. 

இதுதொடர்பாக வந்த புகாரின் பேரில், கோயில் அதிகாரிகளிடம் அறநிலையத் துறை ஆணையர் ஜெயா விசாரணை நடத்தினார். இதில், கோயில்சிலைகள் மாய மானது உறுதிசெய்யப்பட்டது.

சிலைகள் மாயமான காலகட் டத்தில் அறநிலையத் துறை ஆணையராக இருந்த தனபாலன், ஸ்தபதி முத்தையா, கோயில் நிர்வாக அதிகாரியாக இருந்த திருமகள் (தற்போதைய கூடுதல் ஆணையர்) உட்பட சிலர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. திருமகள் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இந்த வழக்கு குறித்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கூறியதாவது:

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் மாயமான புன்னைவன நாதர், ராகு, கேது சிலைகள் 1,600 ஆண்டுகள் தொன்மையானவை. இதுபோன்ற புராதன சிலைகளுக்கு வெளிநாடுகளில் நல்ல மதிப்பு இருக்கிறது. எனவே, இந்த சிலை களை வெளிநாடுகளுக்கு கடத்தி, விற்பனை செய்திருக்க வாய்ப்பு உள்ளது.

புராதனமான இந்த சிலைகளை அகற்ற, கோயிலில் இருந்த பரம் பரை அர்ச்சகர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அவர்களை பணியில் இருந்து நீக்கிவிடுவதாக அதிகாரிகள் மிரட்டியுள்ளனர்.

No comments:

Post a Comment

காலில் செருப்பு, நெருப்பு இல்லத அடுப்பு பொங்கல் போட்டோ ஷூட் செய்த தமிழர் விரோத்கள்- மனிதர்களா

 காலில் செருப்பு, நெருப்பு இல்லத அடுப்பு பொங்கல் போட்டோ ஷூட் செய்த தமிழர் விரோத்கள்- மனிதர்களா