Wednesday, March 2, 2022

தமிழகத்தில் இருந்த *"பழங்குடியினர்" அந்தணர்களே





*ஜெய்ஸ்ரீராம்* 
*அந்தணர்கள் கைபர் போலன் கணவாய் வாழியாக வந்தவர்கள்  எனக்கூறுபவர்கள்  இனியாவது திருந்தட்டுமே.*  
*உண்மையான "தமிழன்" அறிந்து கொள்ள வேண்டிய உண்மைகள்*… இதோ..! 
*தெரிந்து கொள்வது அவசியம்*…
*அந்தணர்கள் யார்?*
*அந்தணர்கள் கடமைகள் என்னவாக இருந்தது?*
*அந்தணர்கள் என்ன அணிந்து இருந்தார்கள்*? 
*அந்தணர்கள்  எப்படி முருகப்பெருமானை பாடினார்கள்?* 
*சங்க தமிழில் "வேதம்" என்ற வார்த்தை* பயன்படுத்தப்பட்டு உள்ளதா? 
எப்படியெல்லாம் "வேதம்" பயன்படுத்தப்பட்டுள்ளது?  
என்று சங்க இலக்கியங்களில் ஒன்றான *"திருமுருகாற்றுப்படை"* நமக்கு விளக்கி சொல்கிறது*
தமிழ், சமஸ்க்ரிதம், வேதம் - தமிழர்கள் மூச்சாக இருப்பதை, திராவிட கழகங்கள் போற்றும் *“புறநானூறு, மதுரை காஞ்சி”* போன்ற  சங்க இலக்கியங்களே காட்டுகிறது. 
தமிழ் சங்க இலக்கியத்தில், "வேதம்" என்ற சொல்லை "புறநானூறு, மதுரை காஞ்சி" போன்றவை சொல்கிறது.
வேதம் - எழுத்து வடிவில் இல்லாமல், குரு வாயால் சொல்லி, அதை  சிஷ்யர்கள் திரும்ப சொல்லி சொல்லி மனப்பாடம் செய்ததால், 
*"மாயா வாய்மொழி" என்று பரிபாடல்* சொல்கிறது. 
வேதம் - எழுத்து வடிவில் இல்லாமல், குரு வாயால் சொல்ல, அதை  சிஷ்யர்கள் கவனத்துடன் காதால் கேட்டே மனப்பாடம் செய்ததால், "கேள்வி" என்றும் வேதத்தை பரிபாடல் சொல்கிறது. 
வேதத்தை, "கேள்வி"க்கு ஈடாக "ஸ்ருதி" என்று சமஸ்க்ரிதம், சொல்கிறது.
*பரிபாடல், "கெடு இல் கேள்வி" (தோஷமற்ற நூல் வேதம்) என்று வேதத்துக்கு சான்றிதழ் கொடுக்கிறது*.
சமஸ்க்ரிதத்தில், ரிக் வேதத்தில், "நித்யா வாக்" (இறப்பற்ற வேதம்) என்றும் வேதத்தை சொல்கிறது.
அழியாத வேதம், வெளியோட்டமாக கர்மாவை செய்ய சொல்வது போல தோன்றினாலும், பரமாத்மாவை துதிக்கிறது.
நேரடியாக பரமாத்மாவை பற்றி சொல்ல தயங்கி, மறைத்து பேசுவதால், வேதத்துக்கு "மறை" என்றும் சொல்கிறது தமிழ் மொழி. 
தத்துவங்களை மறைத்து பேசுவதால், வேதத்துக்கு "மறை" என்று சொல்கிறது தமிழ் மொழி.
*பரிபாடல், வேதம் என்ற சொல்லுக்கு ஈடாக "மறை" என்றும் சொல்கிறது.*
புறநானூறு.., வேதத்தில் "வேள்விகள் சொல்லப்பட்டு இருக்கிறது" என்று சொல்கிறது.
*"வேத வேள்வி தொழில் முடித்ததுவும்"* (வேதத்தில் சொல்லப்பட்ட விதிப்படி வேள்வியை செய்யும்) என்று *புறநானூறு* சொல்கிறது
அதே போல, 
சங்க இலக்கியமான *மதுரை காஞ்சி*.. "வேதத்தை எப்படி சொல்வார்கள் அந்தணர்கள்?" என்று சொல்கிறது.
*"தாதுண் தும்பி போது முரன்றாங்கு ஒதல் அந்தணர் வேதம் பாட"* (வண்டு ரீங்காரம் செய்வது போல (in resonance), அந்தணராகள் வேதம் சொல்வார்கள் என்று சொல்கிறது)
சங்க இலக்கியமான மதுரை காஞ்சி சொல்வதை போல தான், பல ஆயிரக்கணக்கான வருடங்கள் ஆகியும், இன்றும் தமிழ் அந்தணர்கள் வேதத்தை ஓதுகிறார்கள் என்று பார்க்கும் போது, இந்த அந்தணர்கள் சங்க இலக்கியத்தின் சத்தியத்தை நிரூபிப்பது போல உள்ளது. 
*வாழ்க தமிழ் பழங்குடி அந்தணர்கள்*.
உலக வாழ்க்கை, சம்பாத்தியம் போன்றவற்றில் ஈடுபடாமல், வேதத்தை ஓதும் பெரும் பொறுப்பை அந்தண சமூகம் ஏற்று இருந்தது என்ற தொடர்பை சங்க இலக்கியம் 'அந்தணர் அருமறை', 'அந்தணர் வேதம்' போன்ற வாக்கு மூலம், சங்க இலக்கியம் நமக்கு  சொல்கிறது. 
வேதத்தை ஓதும் இந்த அந்தணர்கள் யார்? 
அந்தணர்கள் பண்பாடு எப்படி இருந்தது? 
என்று சங்க இலக்கியமே சொல்கிறது.
சங்க இலக்கியமான, திருமுருகாற்றுப்படையில் இதற்கான பதில் வருகிறது…
"இரு மூன்று எய்திய இயல்பினின் வழாஅது…" 
என்று தொடங்கும் பாடலில், 'அந்தணர்களுக்கு 6 கடமைகள் உண்டு' என்று சொல்கிறது.
வேதத்தில் உள்ள தர்ம சாஸ்திரம் அந்தணர்களுக்கு (ப்ராம்மணர்களுக்கு) சொல்லும் அதே 6 கடமைகளை, சங்க இலக்கியமான, திருமுருகாற்றுப்படையும் சொல்கிறது.
அந்தணர்களின் 6 கடமைகள் என்ன?: 
*ஓதல்* (அத்யயனம் - வேதத்தை கற்பது), 
*ஓதுவித்தல்* (அத்யாபனம் - வேதத்தை கற்று வைத்தல்) , 
*வேட்டல்* (யஜனம் - வேள்வியை நடத்துதல்) , 
*வேட்பித்தல்* (யாஜனம் -வேள்வியை மற்றவருக்கு நடப்பித்தல்), 
*ஏற்றல்* (ப்ரதிகிரஹம் - தானத்தை ஏற்றுக்கொள்ளுதல்), 
*ஈதல்* (தானம் - தானம் கொடுத்தல்), 
ஆகிய 6உம்  அந்தணர்கள் விடக்கூடாத கடமைகள் என்று சங்க இலக்கியம், தர்ம சாஸ்திரம் சொன்னபடியே சொல்கிறது.
சங்க இலக்கியமான, திருமுருகாற்றுப்படையில் 6 கடமைகள் என்று தானே சொல்லி உள்ளது.  அது தர்ம சாஸ்திரம் சொன்ன இந்த 6 கடமையை தான் சொல்கிறது என்று எப்படி சொல்ல முடியும்?' 
என்ற கேள்விக்கு பதிலை, மற்றொரு சங்க இலக்கியமான, *பதிற்றுபத்து* 
*"ஓதல், வேட்டல், அவை பிறர்ச் செய்தல், ஈதல், எற்றல் என்று ஆறு புரிந்து ஒழுகும் அறம் புரி அந்தணர்..'*
என்று தெளிவாக அந்தணர்களின் 6 கடமைகள் என்ன? என்று பதில் சொல்கிறது.
மேலும், 
"இருவர் சுட்டிய" என்ற பதம் மூலம், 'இந்த அந்தணனை, பெற்ற தாய்-தந்தையர்கள் தூய்மையான நடத்தை உடையவர்களாக இருந்தார்கள்' என்று கொண்டாடுகிறது.
பழங்குடியினருக்கு என்று சலுகைகள் அரசாங்கம் கொடுக்கிறது... 
ஆனால், பழங்குடி யார்? என்று அரசாங்கம் சங்க இலக்கியங்களை படித்ததாக தெரியவில்லை.
சங்க இலக்கியமான "திருமுருகாற்றுப்படை", அந்தணர்களே தமிழகத்தில் இருந்த "பழங்குடியினர்" (தொல்குடி) என்று தெளிவாக சொல்கிறது.  
அதிலும், 
இந்த அந்தணர்கள் பல ரகங்களில் இருக்கிறார்கள். (சாம வேதம் அறிந்தவர், ரிக் வேதம் அறிந்தவர், யஜுர் வேதம் அறிந்தவர், அதர்வண வேதம் அறிந்தவர், இரண்டு வேதங்கள் (த்விவேதி) அறிந்தவர், மூன்று வேதங்கள் ஒரு சேர அறிந்தவர் (த்ரிவேதி), நான்கு வேதமும் அறிந்தவர் (சதுர்வேதி)) என்று சொல்கிறது.
சங்க இலக்கியமான திருமுருகாற்றுப்படை,  “பலவேறு தொல்குடி அந்தணர்கள் இருந்தார்” என்று தெளிவாக சொல்கிறது. 
*"இருமூன்று எய்திய இயல்பினில் வழாஅது இருவர் சுட்டிய பல்வேறு தொல்குடி"* 
என்ற பாடலில், 
அந்தணர்களுக்கு 6 கடமைகள் உண்டு. 
அவர்கள் பெற்றோர்கள் உயர்ந்த பண்புகள் கொண்டு இருந்தார்கள். 
இந்த அந்தணர்கள் ஆதியில் இருந்தே வாழ்ந்து வரும் *தொல்குடியினர்* 
*என்று சான்றிதழ் கொடுக்கிறது*. 
*வாழ்க திருமுருகாற்றுப்படை..*
மேலும், "முத்தீ" என்று சொல்லுமிடத்தில், இந்த அந்தணர்கள், 'மூன்று விதமாக தீயை வளர்ப்பவர்கள்' என்றும் சொல்கிறது.
யாகம் செய்ய நாற்சதுரம், முக்கோணம், வில் வடிவம் என்ற அமைப்பில் அமைத்து,
*கார்ஹ-பத்தியம்,*
 *ஆகவனீயம்,*
*தக்ஷிணாக்னியம்*
 என்ற மூன்று வேள்வி தீ அக்னிஹோத்ரியான  பிராம்மணர்கள் வீட்டில் எப்பொழுதும் எரிந்து கொண்டே இருக்கும். இதையே *'முத்தீ'* என்று திருமுருகாற்றுப்படையில் சொல்லப்படுகிறது.
இதே சொல்லை, "மூத்தீ மறையாவான்" என்று *இரண்டாம் திருவந்தாதியில், பூதத்தாழ்வார்* பயன்படுத்துகிறார் என்று பார்க்கலாம்.
மேலும், சங்க இலக்கியமான "திருமுருகாற்றுப்படை", "இருபிறப்பாளர்" என்று சொல்லுமிடத்தில், 'அந்தணர்கள், இரு முறை பிறக்கிறார்கள்' என்றும் சொல்கிறது.
பிராம்மண குழந்தைகள், "காயத்ரி மந்த்ர" உபதேசம் பெறும் போது, இரண்டாவது பிறவி கொள்கிறார்கள் என்று சொல்வதுண்டு. 
இதையே சங்க இலக்கியமும் நமக்கு ஊர்ஜித படுத்திக்கிறது.
இது மட்டுமல்ல, 
சங்க இலக்கியமான *திருமுருகாற்றுப்படை, "மூன்று புரி நுண்ஞாண்"* என்று சொல்லும் போது, "இந்த அந்தணர்கள், மூன்று நூல்கள் சேர்ந்த பூணூலை அணிந்து உள்ளார்கள்" என்று அந்தணர்களின் அடையாளத்தை காட்டுகிறது.
மேலும், சங்க இலக்கியமான திருமுருகாற்றுப்படை, "உச்சிக்கூப்பிய கையினர்" என்று சொல்லுமிடத்தில், "இந்த *அந்தணர்கள்,* *முருகப்பெருமான் சந்நிதியில் கையை* *தலைக்கு மேல் உயர்த்தி நமஸ்கரித்து* *நிற்கின்றனர்"* என்று அவர்களின் முருக பக்தியை காட்டுகிறது.
கையை தலைக்கு மேலே உயர்த்தி, முருகப்பெருமானை நமஸ்கரித்து கொண்டு மட்டும் இருக்கவில்லையாம் இந்த அந்தணர்கள்.
இந்த அந்தணர்கள், அருமறைக் கேள்வி என்ற வேத மந்திரங்களை (மிகவும் சத்தமாக சொல்லாமல்) நாக்கும் வாயும் அசைய, ஜபம் போல அழகாக முருகப்பெருமானை நோக்கி பாடினார்கள், என்று *"அருமறைக் கேள்வி நாஇயல் மருங்கில் நவிலப் பாடி"* என்று பாடுகிறது.
மேலும், 
அந்தணர்கள் எப்படி வாழ்ந்தார்கள்? 
அவர்கள் வீடு எப்படி  இருந்தது? 
என்று மற்றொரு சங்க இலக்கியமான *"பெரும்பாணாற்றுப்படை"* நமக்கு சொல்கிறது.
*செழுங் கன்று யாத்த சிறுதாட் பந்தர்* (இந்த அந்தணர்கள் வீட்டில் புஷ்டியான கன்றுகள் வீட்டின் வாசலில் சிறு பந்தல் போட்டு நின்று கொண்டிருக்குமாம்)
*பைஞ்சேறு மெழுகிய* (மேலும், அந்தணர்கள் வீடே, பசுஞ்சாணியால் தரை மெழுகப்பட்டு இருக்குமாம்.) 
*படிவ நல்நகர்* (மேலும் தெய்வத்துக்கு பூஜைகள் செய்ய ஒரு அறை வைத்து இருப்பார்களாம்).
*மனை உறை கோழியொடு ஞமலி துன்னாது* (மேலும், அந்தணர்கள், கோழி, நாய் வளர்க்க மாட்டார்கள்).
*வளைவாய்க் கிள்ளை மறை விளி பயிற்றும்* (மேலும், அந்த வீட்டில் உள்ள அந்தணர்கள் வேதம் சொல்லி சொல்லி, அந்த வீட்டில் உள்ள *கிளிகள்* திரும்ப சொல்லுமாம்).
*மறை காப்பாளர் உறைபதிச் சேப்பின்* (இப்படிப்பட்ட, வேதத்தை காப்பாற்றி வரும் இந்த அந்தணர்களின் வீட்டுக்கு சென்றால்).
*பெருநல் வானத்து வடவயின் விளங்கும்*
*சிறுமீன் புரையும் கற்பின் நறுநுதல்*
*வளைக்கை மகடூஉ வயின்அறிந்து அட்ட* 
*சுடர்க்கடை பறவைப் பெயர்ப்படு வத்தம்*
(மிக பெரிய வானத்தில் ஜொலிக்கும் அருந்ததி நக்ஷத்திரம் போன்ற கற்புக்கரசியான அந்தண பெண், கைகள் வலைகள் குலுங்க, ராஜ ஹம்சம் என்ற அன்னபறவை பெயர் கொண்ட ராசான்னம் என்ற ஆஹுதிக்கு ஏற்றதான அரிசியை மட்டுமே, பதம் அறிந்து சோறு சமைத்து வைத்து இருக்கிறாள்).
*சேதா நறுமோர் வெண்ணெயின் மாதுளத்து*
*உருப்புற பசுங்காய்ப் போழொடு கறி கலந்து* 
*கஞ்சக நறுமுறி அளைஇ பைந்துணர்* (கருவேப்பிலை, மிளகு கலந்து சமைக்கப்பட்ட காய்கறியோடு, மாவடு ஊறுகாய் தொட்டு கொண்டு, மாதுளம் பழம் சேர்த்த *மோர் சாதத்தை அந்தணர்கள் சாப்பிடுகிறார்கள்)*
இவ்வாறு, அந்தணர் வீடும், அந்தணர் உணவு முறையும் எப்படி இருந்தது? என்று சங்க இலக்கியமான "பெரும்பாணாற்றுப்படை" நமக்கு தெளிவாக  சொல்கிறது.  
*இன்றுவரை பிராம்மணர்களை  "தயிர்* *சாதம்" என்று கிண்டலாக பேசுகிறார்கள்.* 
*சங்க காலத்தில்* *இருந்தே இன்று வரை* *உள்ள இந்த பழக்கத்தை கொண்ட பிராம்மண* *சமுதாயத்துக்கு "இவர்களே ஆதிகுடி* (பழங்குக்குடி)" என்ற *சான்றிதழை கிண்டல் என்று நினைத்து கொண்டு சிலர் பேசுகிறார்கள்*. 
தமிழ்நாட்டின் *"ஆதி குடிமகன் பிராம்மணன்"* என்று சொல்கிறோம் என்று புரியாமலேயே, *ப்ராம்மணனை கேலி செய்வதாக நினைத்து, பெரும்பாணாற்றுப்படை சொல்லும் அந்தணர் பழக்கம் இன்றும் உள்ள பிராம்மண சமுதாயத்துக்கு சான்றிதழ் கொடுத்து வலு சேர்க்கிறார்கள்*.
*ஜெய்ஸ்ரீராம்*

No comments:

Post a Comment

‘France earns $400-$500B annually from Africa as colonial tax’

  Zahid Oruj: ‘France earns $400-$500B annually from Africa as colonial tax’ Foreign policy April 18, 2024   13:18 https://report.az/en/fore...