Sunday, June 12, 2022

அருப்புக்கோட்டை அரசுகேட்டரிங் மற்றும் நர்சிங் கல்லூரி சேர்மன் தாஸ்வின் ஜான் கிரேஸ் மாணவியிடம் நிர்வாண நிலையில், ஆபாசமாக பேச கைது

விருதுநகர் அருப்புக்கோட்டை தெற்குத்தெருவில் தனியார் கேட்டரிங் மற்றும் நர்சிங் கல்லூரி சேர்மன் தாஸ்வின் ஜான் கிரேஸ் என்பவர் கடந்த 6 மாதத்திற்கு முன்னாள் அதே கல்லூரி மாணவியிடம் வீடியோ காலில் நிர்வாணமாக பேசி ஆபாசமாக நடந்து கொண்ட வீடியோ தற்போது மாணவிகளிடம் பரவியதாக தகவல்!
அருப்புக்கோட்டை--அருப்புக்கோட்டையில் தனியார் நர்சிங் மற்றும் கேட்டரிங் கல்லுாரி மாணவியிடம், மொபைல்போன் வீடியோ காலில் நிர்வாண நிலையில், ஆபாசமாக பேசிய கல்லுாரி சேர்மன் தாஸ்வின் ஜான் கிரேஸ்,கைது செய்யப்பட்டார்.
 
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையில், தனியாருக்கு சொந்தமான அரசு நர்சிங் மற்றும் கேட்டரிங் கல்லுாரி உள்ளது. கல்லுாரி சேர்மனாக, கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த தாஸ்வின் ஜான் கிரேஸ், 40, என்பவர் உள்ளார்.தற்போது, அருப்புக்கோட்டை, டெலிபோன் ரோட்டில் வசிக்கும் இவர், பா.ஜ., சிறுபான்மை பிரிவு கிழக்கு மாவட்ட முன்னாள் தலைவராக இருந்தார்.இவர், ஆறு மாதங்களுக்கு முன், கல்லுாரியில் பயிலும் மாணவியிடம் வீடியோ காலில் நிர்வாணமாக, ஆபாசமாக பேசியுள்ளார்.
 அவர் பேசிய வீடியோ பதிவு, மாணவர்களிடம் வேகமாக பரவியது. நேற்று கல்லுாரிக்கு வந்த மாணவியர், கல்லுாரி வாசல் முன் அமர்ந்து, சேர்மனை கைது செய்ய கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.மாணவியரிடம் விசாரணை நடத்திய பின், தாஸ்வின் ஜான் கிரேசை போலீசார் கைது செய்தனர். அவர் மீது மேல் நடவடிக்கை எடுக்கவும், படிப்பிற்கு உத்தரவாதம் அளிக்கவும், கல்விக்கட்டணத்தை திருப்பி தரவும் கோரி, மாணவியர் பழைய பஸ் ஸ்டாண்ட் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். 

டி.எஸ்.பி., சகாய ஜோஸ், தாசில்தார் அறிவழகன், இன்ஸ்பெக்டர் பாலமுருகன் பேசியதை தொடர்ந்து மறியல் கைவிடப்பட்டது. விருதுநகர் ரோட்டில், 2008ல் துவங்கப்பட்ட இக்கல்லுாரி, 2017ல் விதிகளை பின்பற்றவில்லை எனக்கூறி அரசால் 'சீல்' வைக்கப்பட்டது. மீண்டும் அனுமதி பெற்று, தெற்கு தெருவில் இயங்குகிறது. திருச்சி உள்ளிட்ட வெளிமாவட்டங்களைச் சேர்ந்த 250 மாணவர்கள் படிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் தனியார் நர்சிங் மற்றும் கேட்டரிங் கல்லூரி ஒன்றின் தாளாளர் கல்லூரி மாணவியிடம் வீடியோ காலில் நிர்வாணமாக பேசியதாக பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளாகி கைது 
https://www.dinamalar.com/news_detail.asp?id=3051235

https://www.dailythanthi.com/News/State/aruppukottai-nursing-college-incharge-porn-video-talk-to-college-student-720377?infinitescroll=1

https://www.bbc.com/tamil/india-61775603?at_medium=custom7&at_custom4=A17B52B6-EA42-11EC-92CE-A8C296E8478F&at_custom1=%5Bpost+type%5D&at_campaign=64&at_custom2=facebook_page&at_custom3=BBC+Tamil

அருப்புக்கோட்டை தெற்கு தெருவில் அரசு நர்சிங் மற்றும் கேட்டரிங் என்னும் தனியார் கல்லாரி செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரியின் தாளாளராக இருப்பவர் தாஸ்வின் ஜான் கிரேஸ்.கடந்த ஆறு மாதங்களுக்கு முன் அதே கல்லூரியைச் சேர்ந்த ஒரு மாணவியிடம் வீடியோ காலில் நிர்வாணமாக ஆபாசமாக பேசியதாக மாணவி தரப்பில் குற்றம்சாட்டப்படுகிறது. அந்த வீடியோ தற்போது அந்த கல்லூரியில் பயின்று வரும் மாணவிகளிடம் திடீரென பரவியதால் கல்லூரி மாணவிகள் பெற்றோர் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

மேலும் நேற்று கல்லூரியும் மூடி இருந்ததால் கல்லூரிக்கு வந்த மாணவிகள் கல்லூரி வாயிலில் தர்ணாவில் ஈடுபட்டனர். அதனை தொடர்ந்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர். தாஸ்வின் ஜான் கிரேஸை நகர் காவல்நிலைய போலீசார் நேற்று கைது செய்தனர்.

8 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு

வீடியோ காலில் மாணவியிடம் நிர்வாணமாக பேசியதாகக் கைதாகியுள்ள தாஸ்வின் ஜான் கிரேஸ் மீது, அந்த மாணவி அருப்புக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில், அவர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம், தகவல் தொழில்நுட்ப சட்டப்பிரிவு 67 , இந்திய தண்டனைச் சட்டம் 354 (A), 354(b) ,354(c) ,506(1) , உள்ளிட்ட எட்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

எனினும் கல்லூரி மாணவிகள் தங்களின் படிப்புக்கும் எதிர்காலத்திற்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும் எனவும் கல்லூரி கட்டணத்தையும் சான்றிதழ்களையும் திரும்பி தர வலியுறுத்தி திடீரென பழைய பேருந்து நிலையம் செல்லும் சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அதிகாரிகளின் சமாதானத்தை ஏற்று மாணவிகள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

 மாணவிக்கு நிர்வாண வீடியோ கால் செய்த புகாருக்கு உள்ளான முன்னாள் சிறுபான்மை பிரிவு மாவட்ட தலைவரை கட்சியில் இருந்து நீக்கியது பாஜக.

No comments:

Post a Comment

பாதிரியார், கன்னியாஸ்திரிகள் ஆசிரியர் பணி சம்பளத்துக்கு வரி சுப்ரீம் கோர்ட் திட்டவட்டம்

பாதிரியார், கன்னியாஸ்திரிகள் ஆசிரியர் பணி சம்பளத்துக்கு வரி -சுப்ரீம் கோர்ட் திட்டவட்டம் புதுடில்லி, நவ.8- தமிழகத்தில் உள்ள அரசு உதவி பெறும்...