பொமு 175 வாக்கில் செதுக்கப் பட்டது அதில் உள்ளது உள்ளபடி படித்தால்
காணிய நாநதா அஸிரிய ஈகுவ அன கே தமமம
ஈததா அ நேடுஞசாழியன பாணாஅன காடால அன
வழததாய கோடடூபிததா அபாளி ஈய
அன்றைய தமிழ் நிலை இது தானா?
அல்லது வடமொழி சமண முனிவர் வடமொழிக்காய் உருவாக்கிய பிராமி எழுத்தை ஓலையில் கீறித் தர செதுக்குவோர் சில பல தவறுகளும் இருக்கலாம். இன்றைக்கு நாம் பொது வழியில் இப்படி இருந்திருக்கலாம் என அறிஞர்கள் தருவதை தான் பார்க்கிறோம், கல்வெட்டில் உள்ளது மேல் உள்ளது தான்.
இது வரை தமிழ் பிராமியில் வந்துள்ள அனைத்து கல்வெட்டுகளையும் தொகுத்தால் ஒரு தாளின் இரண்டு பக்கம் மட்டுமே வருகிறது
கல்வெட்டுச் செய்திகள்[தொகு]
பெரும்பாலும் இக் கல்வெட்டுச் செய்திகள் அனைத்துமே பாறைக் குகைகளில் சமண முனிவர்கள் அமர்ந்து கொள்ளவும், படுத்து உறங்கவும், பாறைகளைச் செப்பனிட்டு வழவழப்பாக அமரும் வண்ணம் செய்து கொடுத்ததையே கூறுகின்றன[1].
- கல்வெட்டு 1
- நந்த ஸிரிகுவன் என்ற சமண முனிவருக்குச் சங்க காலப் பாண்டிய மன்னன் நெடுஞ்செழியன் பணியாள் கடலன் வழுதி என்பவர் பாளிய் (சமணர் இருக்கை) அமைத்துக் கொடுத்துள்ளார்.
- கல்வெட்டு 2
- நெடுஞ் செழியனுடைய சகலனாகிய, இளஞ்சாடிகனின் தந்தை சடிகான் கணிய நந்தாஸிரியருக்கு பள்ளியைத் தர்மம் செய்துள்ளார்.
- கல்வெட்டு 3
- வெள் அறைய் என்னும் ஊரிலுள்ள, வணிகக்குழுவைச் சேர்ந்த அந்தை அஸீதன் என்னும் ஒரு முத்து வணிகன் கணிய நதாஸிரியருக்கு பிணஉ (சன்னல், கயிறுகட்டு, பிளவு) கொடுத்ததைக் கூறுகிறது.
- கல்வெட்டு 4
- நத்தி என்ற சமண முனிக்கு பாறையைக் கொட்டிக் கொடுத்துள்ளதைக் கூறுகிறது.
- கல்வெட்டு 5
- சந்திரிதன் கொடுபித்தோன்.
- கல்வெட்டு 6
- இந்தப் பாறையைக் கொட்டிக் கொடுத்தவர் வெள் அறை என்னும் ஊரிலுள்ள வணிகக் குழுக்கள் ஆவர்.
No comments:
Post a Comment