Thursday, May 19, 2022

இந்தியா டுடே ராஜீவின் கொலை வாழ்வாங்கு வாழ்ந்தவர் நடுகல்

 அந்த நாட்களில் இந்தியா டுடே ஒவ்வொரு மாதமும் ஐந்தாம் தேதியும் 21ஆம் தேதியும் வெளியாகிக் கொண்டிருந்தது. சில சமயங்களில் ஒரு நாள் தள்ளி வெளியாகும். ராஜீவ் காந்தி கொல்லப்பட்ட மே 21ஆம் தேதி வெளியான இதழின் அட்டைப்படத்தில், கருத்துக் கணிப்பின் முடிவுகளே வெளியிடப்பட்டிருந்தன. "இ. காங்கிரஸ் - முன்னணி வகிக்கிறது" என்ற வாசங்கள் இடம்பெற்றிருந்தன.

ராஜீவ் குறித்த செய்திகள் இதற்கு அடுத்த இதழான ஜூன் 5 - 20 தேதியிட்ட இதழில்தான் வெளியாகின. அது தமிழ் இந்தியா டுடேவின் 20வது இதழ். "நான் இளைஞன். எனக்கும் கனவு ஒன்று உண்டு" என்ற வாசகங்கள் அதில் இடம்பெற்றிருந்தன. ஓவல் வடிவில் ராஜீவின் புகைப்படம் அதில் இடம்பெற்றிருந்தது.
அந்த நாட்களில் இந்தியா டுடேவுக்கு மாநிலத்தின் பல பகுதிகளிலும் பெரும் வரவேற்பு இருந்தது. இதழ் வரும் தினத்தன்று மதுரை ரயில் நிலையத்திற்கே போய், ஏஜென்ட்களிடம் நேரடியாக இதழ்களை வாங்கினார்கள்.
எதிர்பார்த்தபடியே இந்த இதழ் மிகப் பெரிய ஹிட். ராஜீவின் கொலை, அவரது இறுதிச் சடங்குகள், அவருடைய தனிப்பட்ட வாழ்க்கை, காங்கிரஸ் கட்சியின் எதிர்காலம் என ஒரு முழுமையான புத்தகத்தைப் போல வெளியாகியிருந்தது அந்த இதழ். மொத்தம் 96 பக்கங்கள். ஆனால், விலை வெறும் ஆறு ரூபாய்தான். அந்த காலகட்டத்தில் மற்ற இதழ்களின் விலை குறைவுதான் என்றாலும், இந்தியா டுடேவில் இருந்த இந்த விலையை மிகக் குறைவானது எனத் தோன்றச் செய்தது.
இந்த ராஜீவ் சிறப்பிதழில் ஒரு புள்ளிவிவரம் தரப்பட்டிருந்தது. அதன்படி பார்த்தால், ஏற்றுமதி 199 சதவீதமும் பங்கு வெளியீடு 193 சதவீதமும் அதிகரித்திருந்தன. தொழில் உற்பத்தி 59 சதவீதம் வளர்ச்சி அடைந்திருந்ததாகக் குறிப்பிடப்பட்டது.
இருந்தாலும், ராஜீவ் தனது பிரச்சாரங்களில் இந்த வளர்ச்சி குறித்துப் பேசாமல், 'ராம ராஜ்ஜியம்' அமைப்பது குறித்துப் பேசிக்கொண்டிருந்தார்.
2,00,000 பிரதிகள் அச்சிடப்பட்ட அந்த இதழை இப்போது எடுத்துப் பார்த்தாலும் ஆச்சரியமாக இருக்கிறது. அந்த இதழின் சில பக்கங்கள் கீழே.

1991இல் இதே மே மாதம் 21ஆம் தேதி முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி அமதிப் பூங்காவாக இருந்த தமிழ் நாட்டில் கொல்லப்பட்டார்...
பாராளுமன்றத்திற்கு முதல் கட்ட தேர்தல் முடிந்து, இரண்டாவது கட்ட தேர்தல் பிரச்சாரத்திற்காக வந்திருந்த போது இந்த துர்சம்பவம் நடந்தேறியது.
முடிவுகள் வந்த பின் தெரிந்தது -
அவர் கொல்லப்படுமுன் நடந்தமுதல் கட்ட தேர்தலில், காங்கிரசுக்கு எதிராக 5.7% வாக்குகள் சென்றன என்றும்...
அவர் கொல்லப்பட்ட பின் நடந்த இரண்டாம் கட்ட தேர்தலில் 1.6% வாக்குகள் காங்கிரசுக்கு சாதகமாக அமைந்தன என்றும்...
முடிவில் 244 இடங்களை பெற்ற காங்கிரஸ் - கூட்டணி ஆட்சி அமைத்தது.
அடுத்த பெரிய கட்சியாக வந்தது பாஜக @ 120 இடங்கள்!
ராஜீவ் கொல்லப்படாவிட்டால், காங்கிரஸ் முற்றிலும் வலுவிழந்து, பாஜக ஆட்சி அமைந்திருக்கலாம்.
1991இல் அமைய வேண்டிய இந்தியர்கள் ஆட்சியை 2014க்கு தள்ளிப் போட்டனர் வெளிநாட்டு சக்திகள்.
கொலையாளி பேரறிவாளனை இத்தருணத்தில் வெளியே விட்டிருப்பது, வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவது போலிருக்கும்.
ராஜீவ் காந்தியோடு இறந்தவர்களது குடும்பத்தினர் இன்னும் சோகத்தில் இருக்கிறார்கள்.
சோனியா - ராகூல் - பியங்கா யாருக்கும் ராஜீவ் கொலையில் கோபம் தெரியவில்லை, "மன்னித்துவிட்டோம்" என்கிறார்கள்.
ராஜீவ் கொலையால் யார் லாபம் அடைந்தது?

History Revisited: How political parties fared in 1991 Lok Sabha election
https://zeenews.india.com/lok-sabha-general-elections-2019/history-revisited-how-political-parties-fared-in-1991-lok-sabha-election-2193229.html?fbclid=IwAR0I4h2_N9lnC9siL36H97xcrUkh1G-9VA5d6iSpB-xWefkbBsX2Wq1mO50
INKredible India: The story of 1991 Lok Sabha election - All you need to know https://zeenews.india.com/lok-sabha-general-elections-2019/inkredible-india-the-story-of-1991-lok-sabha-election-all-you-need-to-know-2193613.html?fbclid=IwAR1936pByHrjuy1T5rP0_4wHA_plY7EjV7KM1-XtekysmEItmyRkYhTf8Ug

1991 Indian general election
https://en.wikipedia.org/wiki/1991_Indian_general_election?fbclid=IwAR3z4_ouxty3d8hWrfPdyk47hiHR8yLKuqm9PMdGE_71ya9I4TIoj0Y2A84
Krishnan SK, Guru Deva and 15 others
1 comment
2 shares


கோட்டமங்கலத்தில் வரலாற்றுச்சின்னம் – வீரக்கம்பம்

து.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை
 https://kongukalvettuaayvu.blogspot.com/2014/01/blog-post_27.htm                           

         நடுகல் வழிபாடு, தமிழகத்தில் பழங்காலந்தொட்டு இருந்து வருகிறது. வீரச்செயல் புரிந்து இறந்துபட்ட வீரர்களுக்கு நடுகல் எடுத்து, அதில் அவனுடைய உருவத்தைச்சிற்பமாக வடித்து, மாலை அணிவித்துப் படையல் இட்டு வழிபடுவது மரபு.  நடுகற்களில் காணப்படும் வீரர்கள், தங்கள் கிராமங்களில் கால்நடைகளைக் காவல் காக்கும் கடமையில் ஈடுபட்டிருக்கும்போது, கால் நடைகளைத்தாக்க வருகின்ற புலி, கரடி, பன்றி ஆகிய விலங்குகளை எதிர்த்துப் போரிடும்போது, அவ்விலங்குகளைக் கொன்ற பின்னர் அவர்களும் இறக்க நேரிடும். அவ்வாறு இறந்துபடும் வீரர்களுக்கு நினைவுச்சின்னமாக வீரக்கல் எனப்படும் நடுகல் எடுக்கப்பட்டது. இதேபோல், ஒரு கிராமத்தின் ஒரு குழுவைச்சேர்ந்த மக்களின் கால் நடைகளை, மற்றொரு ஊரின் குழுவினர் (வீரர்கள்) போரிட்டுக் கவர்ந்து செல்வதும், அவற்றை மீட்கும் முயற்சியாகப் போரிடுவதும் தொறுப்பூசல் எனக் கல்வெட்டுகளில் குறிக்கப்படுகிறது. தொறுப்பூசலில் இறந்துபடும் வீரர்களுக்கு எடுக்கப்பட்ட நடுகற்கள் தமிழகத்தில் நிறையக்காணப்படுகின்றன.
      சில நடுகற்களில், வீரனுடைய மனைவியும் சிற்பமாகக் காட்டப்படுவதுண்டு. வீரனுடைய மனைவி, தன் கணவனின் இறப்பைத்தொடர்ந்து அவளும் தீயில் பாய்ந்து மாண்டு போவதையே இது குறிக்கும். இத்தகைய கல், மாசதிக்கல் எனப்படும். பெரும்பாலும் ஒற்றைக் கல்லிலேயே இச்சிற்பங்கள் வடிக்கப்படும். சில ந்டுகற்களில், மூன்று அடுக்குகளாகச் சிற்பங்கள் செதுக்கியிருப்பார்கள். முதல் அடுக்கில், வீரன் விலங்கோடு போரிடும் காட்சியும், இரண்டாவது அடுக்கில், உடன்கட்டை ஏறி உயிர் நீத்த வீரனின் ம்னைவி சொர்க்கம் போவதுபோன்ற காட்சியும், மூன்றாவது அடுக்கில், வீரன் சிவலிங்கத்தை வழிபடுவது போன்ற காட்சியும் காணப்படும். (வீரன் சிவலோகம் அடைந்தான் என்பதன் குறியீடு).

      மிகவும் அரிதாக, நான்கு பக்கங்களுடைய தூண் வடிவில் அடுக்குநடுகல் சிற்பமும் காணப்படுவதுண்டு. அவ்வகை தூண் நடுகல் சிற்பம் ஒன்று, திருப்பூர்-உடுமலைச் சாலையில், குடிமங்கலத்தை அடுத்துள்ள கோட்டமங்கலத்தில் கண்டறியப்பட்டுள்ளது.  தஞ்சையில் இயங்கும் தமிழகத்தொல்லியல் கழகத்தைச் சேர்ந்த கல்வெட்டு ஆராய்ச்சியாளர்களான, விழுப்புரம் சி.வீரராகவன்  மங்கையர்க்கரசி, கோவை து.சுந்தரம்  ஆகியோர் உடுமலைப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டபோது இந்தத் தூண் நடுகல்லைக்கண்டறிந்தனர். கோட்டமங்கலம் வல்லக்கொண்டம்மன் கோயிலை ஒட்டியுள்ள ஊர்ப்பகுதியில் இந்தத் தூண் நடுகல் காணப்படுகிறது. ஊர் மக்கள் இதை “ மாலக்கோயில் “ என அழைக்கின்றனர். ஏறத்தாழ, 8 அடி உயரமும், 2 அடி அகலமும், ¼ அடி கனமும் கொண்டு பிரமாண்டமாக நிற்கும் இந்த அடுக்கு நடுகல் தூணில் 9 அடுக்குகள் உள்ளன. இவ்வடுக்குகள், போட்டோக்களுக்கு சட்டம் அமைத்ததுபோல் நேர்த்தியாகச் செவ்வக வடிவில் பிரிக்கபட்டுள்ளன. தூணின் நான்கு முகங்களிலும் உள்ள எட்டு விளிம்புகளும் புடைப்பு அமைப்பில் வேலைப்பாடுகளுடன் காணப்படுகின்றன. தூணின் உச்சி, ஒரு கோயில் கருவறை விமானம்போல் அழகுற அமைக்கப்பட்டுத் தெய்வச்சிற்பங்களைக் கொண்டுள்ளன.
      தூணுக்கு இருபுறமும், இரண்டு தனிக்கல்லில் அரசர்களின் உருவில் சிற்பங்கள். அரசர்களின் அருகில் அவர்களது மனைவியர் உருவங்கள்.  இவையும் நடுகல் சிற்பங்களே.  இவர்கள், இப்பகுதியிலிருந்த பாளையப்பட்டு  நாயக்கர்களாக இருக்கக்கூடும்.

     தூணின் நான்கு முகங்களில் மைய முகத்தில், உச்சியில் நடராசர் சிற்பம், அதன் கீழே உள்ள அடுக்குகளில் வியாக்கிரபாத முனிவர் (புலிக்கால் முனிவர்) சிவனை வழிபடும் சிற்பம், கஜலட்சுமி, குழலூதும் கண்ணன், சிவலிங்கத்தின் மீது பசு பால் சொரியும் சிற்பம், பல்லக்கேறி வீரர்கள் செல்லும் காட்சியில் சிற்பம் போன்ற பல சிற்பங்கள். தூணின் மற்ற முகங்களில், யானை,குதிரை ஆகியவற்றின் மீது வீரர்கள் அமர்ந்து போரிடும் காட்சி, வில்லேந்தி வீரர்கள் போரிடும் காட்சி ஆகிய பல்வேறு சிற்பங்கள் உள்ளன. இவை தவிர வரிசையாக வீரர்கள் மற்றும் பெண்கள் (உடன்கட்டை ஏறிய மனைவியர்களாக இருக்கக்கூடும்) ஆகிய சிற்பங்கள் காணப்படுகின்றன. பெண்கள் வில்லேந்திப் போரிடும் காட்சியில் அமைந்த சிற்பங்கள் என,  நூற்றுக்கும் மேற்பட்ட உருவங்கள் தூணில் காணப்படுவதை ஆய்ந்து நோக்கும்போது, ஒரு போர்ச்சூழலில் இறந்து போன பெரும் வீரர்களுக்கும், அவர் மனைவிமார்க்கும், பாளையப்பட்டுக் குறு நில மன்னர் நிலையில் இருந்தவர்க்கும் எடுக்கப்பட்ட மிகப்பெரிய  நினைவுக்கல்லாக இதைக் கருத வேண்டும். தூணின் உயரம், பெரும் வடிவம், நூற்றுக்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் சிற்பங்கள், சிற்பங்களின்   நேர்த்தியான வேலைப்பாடுகள், அதன் ஒட்டுமொத்த பிரமாண்டம், பக்கத்திலே உள்ள வேலைப்பாடுகள் மிகுந்த தனிச் சிற்பங்கள் ஆகியவற்றை நோக்கும்போது மிகவும் முக்கியமான நிகழ்வு கருதி இந்த நினைவுத்தூண் எழுப்பப்பட்டிருக்கவேண்டும் என்பதையும், நினைவுத்தூண் எழுப்பியவரும் ஒரு முக்கியத்துவம் நிறைந்த பெரிய பதவியில் இருந்த தலைவராகத்தான் இருந்திருக்கவேண்டும் எனவும் கருதலாம். இக்கருத்தை, இவ்வூர்ப் பெரியவர்கள் கூறும்-மரபு வழியில் காப்பாற்றி வைத்திருக்கும்-செய்திகள் உறுதிப்படுத்துகின்றன.
 
      நினைவுத்தூண் அமைந்துள்ள இந்த மாலக்கோயிலில் வழிபாடு நடத்துபவர்கள் இங்குள்ள “ பாலவாரு “  குலத்தவர். இவர்கள், ராஜ கம்பள நாயக்கர் வழி வந்தவர்கள்.
ராஜ கம்பள நாயக்கர் மொத்தம் ஒன்பது வகையினர் இருப்பதாகச் சொல்கிறார்கள். இவர்களுக்குக் குலதெய்வம் வல்லக்கொண்டீசுவரி என்னும் வல்லக்கொண்டம்மன் ஆகும். இந்தப் பாலவாரு குலத்தினர் திருமணச் சம்பந்தம் வைத்திருப்பது சில்லண்ணவார் குலத்தில். இந்தப் பாலவார் மக்கள், இந்த மாலக்கோயிலில் வாரத்துக்கு இருமுறை திங்கள், வெள்ளி ஆகிய நாள்களில் பொங்கலிட்டு வழிபாடு நடத்துகின்றனர். ஆண்டுக்கொருமுறை, மாசி மாதம் மகாசிவராத்திரியன்று இரவு 12 மணியளவில் வல்லக்கொண்டம்மனுக்குத் திருக்கல்யாணம்  நடத்தி, அன்னதானம் செய்து சிறப்பாகக் கொண்டாடுகிறார்கள். குலதெய்வப்பாடல்களாக இங்குள்ள மூதாட்டிகள் பாடும் நாட்டுப்பாடல்களில் போர் பற்றிய செய்திகளும், பாளையப்பட்டுத் தலைவர்களின் பல்வேறு பெயர்களும் காணப்படுவதாகச் சொல்கிறார்கள்.

      மேலே கூறப்பட்ட மரபு சார்ந்த செய்திகளை உறுதிப்படுத்துவதுபோல், தூணின் மைய முகத்தில் அமைந்துள்ள புடைப்பு விளிம்புகளில், கல்வெட்டு எழுத்துகள் காணப்படுகின்றன. ஆராய்ச்சியாளர்கள் மூவரும், இந்த எழுத்துகளை ஆய்ந்து படித்து அதில் உள்ள செய்திகளை அறிந்தனர்.
கல்வெட்டு வரிகள் கீழே உள்ளவாறு படிக்கப்பட்டன.

                      சிறீமுக வருடம் ஆடி மாதம் 8 தேதி ஏகாதெசி
              பெற்ற திங்கள் கிளமை னாள்
              பாலவாரில் காம நாயக்கர் மகன்
              வல்லைக்கொண்டம நாயக்கர் உண்டாக்கின
              வீரகம்பம்.


தமிழ் வருடமான ஸ்ரீமுக ஆண்டில், ஆடி மாதம் எட்டாம் தேதி ஏகாதசி நாளன்று, பாலவார் குலத்தைச்சேர்ந்த காம நாயக்கர் மகன் வல்லக்கொண்டம நாயக்கர் என்பார் இந்த நினைவுச்சின்னமான வீரகம்பத்தை நிறுவினார் என்பது கல்வெட்டுச்செய்தி.

      கல்வெட்டில் வரும் “ பாலவார் “ என்னும் சொல், இந்த நினைவுச்சின்னத்தை வழிபட்டு வரும் இவ்வூர் பாலவார் மக்களே என்று உறுதி செய்கிறது. ” வீரகம்பம்  என்பது வீரக்கல் அல்லது நடுகல், தூண் ( கம்பம் ) வடிவில் எழுப்பப்பட்டதை உறுதி செய்கிறது. ஸ்ரீமுக ஆண்டு, கி.பி. 1693, கி.பி. 1753 ஆகிய இரண்டு ஆண்டுகளுக்கும் பொருந்தி வரும் ஆண்டாகும். கி.பி. 1693-ஆம் ஆண்டு, பாளையக்கார நாயக்கர்களின் காலத்தை ஒட்டிவருவதால் இந்த வீரகம்பமானது, பாலவார் நாயக்க வம்சத்தைச் சேர்ந்த வல்லைக்கொண்டம நாயக்கர் என்பவரால் எடுப்பிக்கப்பட்டது எனக்கொள்ளலாம். இவர் பெயரும், இக்குலத்தவரின் குலதெய்வமான வல்லக்கொண்டம்மனுடன் இயைந்து போவதைப்பார்க்கிறோம். மேலும், கி.பி. 1693-ஆம் ஆண்டுக்காலகட்டத்தில் கம்மவாரு, கொல்லவாரு ஆகிய பாளையக்கார நாயக்கர்கள் மதுரை நாயக்க அரசர்களுக்குக் கீழ்ப்படிந்து ஆட்சி செய்து வந்தனர் என்பதைக்கொண்டு இக்கல்வெட்டு மற்றும் இந்த வீரகம்பத்தின் காலம் கி.பி. 1693 எனக்கொள்வதில் தவறில்லை.

      குலதெய்வ வழிபாடு நடத்துவதன் மூலம், பாலவார் குல மக்கள் இந்த வரலாற்றுச் சிறப்புடைய தூண் நடுகல்லைப் பாதுகாத்து வருகிறார்கள் என்பதோடு தொடர்ந்து பாதுகாப்பார்கள் என்பது திண்ணம்.
சேவூர் போலீஸ் நிலையத்தில் பழமையான 3 நிலை நடுகல்; தமிழர்களின் வீரம், தியாகத்தை வெளிப்படுத்துகிறது
https://www.dailythanthi.com/News/Districts/2018/12/03021752/The-oldest-3-level-trekking-at-Sevur-police-station.vpf

 தினத்தந்தி டிசம்பர் 3, 
தமிழர்களின் வீரம் மற்றும் தியாகத்தை எடுத்துரைக்கும் வகையில் சேவூர் போலீஸ் நிலையத்தில் பழமையான 3 நிலை நடுகல் இருக்கிறது.
சேவூர், திருப்பூர் வரலாற்றுச்சுவடுகள் மைய வரலாற்று ஆய்வாளர் முடியரசு கூறியதாவது:– செம்பியன் கிழானடி நல்லூர் என வரலாறு கூறும் செழிப்பு மிகுந்த நகரமாக சேவூர் விளங்கியது. 
சே என்றால் எருது என்பது பொருள். சேவூர் என்பது ஆவினங்கள் நிறைந்த மேய்ச்சல் பகுதியாக ஒரு காலத்தில் விளங்கியது. தற்போது சிறுமுகை மற்றும் சத்தி பகுதியிலிருந்து தொடங்கும் வனப்பகுதி அக்காலத்தில் சேவூர் வரையிலும் இருந்தது. விலங்குகள் ஆவினங்களை தாக்கிய போது அவற்றை எதிர்த்துப் போரிட்டுக் கொன்ற அல்லது தன் உயிரை இழந்த வீரர்களுக்கு நடுகல் எடுக்கும் வழக்கம் வீரத் தமிழர்களின் மரபாக இருந்தது. 
அத்தகைய வீரனின் நடுகல் ஒன்றை சேவூர் போலீஸ் நிலையத்தில் உள்ளது. அதைப் பற்றிய ஆய்வினை திருப்பூர் வரலாற்றுச் சுவடுகள் ஆய்வு மையம் மேற்கொண்டது. சேவூர் கிராம நிர்வாக அலுவலகம் அருகே கைவிடப்பட்ட நிலையில் இருந்த நடுகல்லானது 2015–ம் ஆண்டு எஸ்.பி அமித்குமார் முயற்சியால் சேவூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது. அப்போது இது போர்களை விளக்கும் நடுகல் என அறியப்பட்டது.
 
 
இந்த வீர நடுகல்லானது மூன்று நிலைகளை குறிக்கும் நடுகல் ஆகும். புலிப்பட்டான் கல் மற்றும் சதிக்கல் இரண்டுக்கும் பொதுவாக அமைக்கப்பட்ட சிறப்பான நடுகல் வகையை சார்ந்தது. இந்த நடுகல்லின் கீழ்வரிசையில் ஒரு வீரன் வில்லுடன் புலியை தாக்குவது உள்ளது. அவன் மனைவி அருகில் காணப்படுகிறாள். இது முதல் நிலையாகும். இதில் புலியுடன் நடந்த போரில் இறந்த வீரனும் அதனால் சிதையேறும் அவ்வீரனின் மனைவியும் காட்சிப்படுத்தப்பட்டு உள்ளனர். இரண்டாம் நிலையானது வீரமரணம் எய்திய வீரனையும் உடன்கட்டை ஏறிய அவனது மனைவியையும் சாமரம் வீசும் தேவகன்னிகைகள் வானுலகம் அழைத்துச் செல்லும் நிலை அழகுற காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. 
மூன்றாம் நிலையானது வீரனும் அவனது மனைவியும் சிவலோகத்தை அடைகிறார்கள். சிவலிங்க உருவமும் ரி‌ஷப உருவமும் காட்சியளிக்கிறது. வீரனின் ஆன்மா சிவலிங்கத்திற்கு மாலை அணிவிக்கும் காட்சி உள்ளது. இவ்வாறு வீரனும் அவன் மனைவியும் சிவனடி சேர்கிறார்கள். இதுவே இறுதி நிலையாக உள்ளது. இவ்வாறான சிறப்பான நடுகற்கள் நாயக்க மன்னர்கள் காலத்தில் நடப்பட்டன. இவ்வாறு அவர் கூறினார்.

https://www.dailythanthi.com/News/Districts/2018/12/03021752/The-oldest-3-level-trekking-at-Sevur-police-station.vpf


 இந்த நடுகல்லை கீழிருந்து பார்வையிட்டு மேல் நோக்கி முடிக்கவும். 


1.ஆநிரை கவரல் சண்டையில் இருவர்  குத்துப்படுகின்றனர்.

2.இருவரையும் தேவலோக மாதர்கள் தாங்கி அழைத்துச் செல்கின்றனர்.

3. இறுதியாக தேவலோக அமரர்களாகி அமர்வதோடு காட்சிகள் முடிகிறது.

பெரும்பான்மையான நடுகற்கள்  யாராவது ஒருவருக்காக நடப்பட்டிருக்கும். இருவருக்கு சேர்த்து ஒரு நடுகல் இருப்பதை முதல்முறையாக பார்க்கும் வாய்ப்பு.

இடம்; கல்லேஷ்வரர் கோவில்.

பாகலி, கருநாடகம்.  படம்: Saravanakumar Ramachandran


"கொந்தவாலி" என்ற கிராமம் மாஹாராஷ்டிரா பூனேவில் உள்ளது அங்குள்ள நடுகற்கள்தான் கீழுள்ள படத்தில் உள்ளவை.#வீரகல்லு #வீரக்கல் என்று அழைக்கிறார்கள்.கன்னடத்திலும் இப்படித்தான் சொல்கிறார்கள் அங்கும் இந்த முறை உண்டு. குஜராத்தில் தூண்களை அமைப்பார்கள். தமிழகத்தில் உசிலம்பட்டி/தருமபுரி பகுதிகளில் நடுகற்கள் அதிகம் உள்ளது.இந்த கலாச்சாரம் பரவி விரிந்த பொது கலாச்சாரம் என்பதை புரிந்து கொள்ளாத வரை அரசியல் விடிமோட்சம் இல்லை.

போரில் இறந்த வீரர்களுக்கு நடுகல் வைத்து வழிபடுவது தனித்தமிழ் கலாச்சாரம் என்ற பொய்யை திட்டமிட்டு பரப்பி இன்று வரை அது கிளிப்பிள்ளை போல சொல்லப்படுகிறது.

 தீப்பாய்ந்து பட்டான் வகை நடுகல் 

"கீழ்குந்தெ" எனப்படும் (கங்க அரசன் நிதிமார்கா தொட்ட ஹுண்டி நடுகல் கல்வெட்டு) 

தமிழகத்தில் தனது சிரத்தை தானே அரிந்து கொள்ளும் அரிகண்டம் இன்னொரு நபர் மூலம்  தலையை வெட்டி யெடுக்கும் சாவாரபலி, தமது உடம்பை 9 பாகங்களாக வெட்டிக் கொள்ளும் நவகண்டம், மூங்கில் மரத்துடன் தலையை சேர்த்து கட்டி வெட்டுண்ட தலை மூங்கில் மரத்தில் தொங்கும்  "தூங்கு தலை" முறை (கர்நாடகத்தில் சிடிதல)போன்ற இம்முறைகளில் மட்டுமின்றி கர்நாடகத்தில் மேலும் பல முறைகளில் ஆத்மபலி சடங்கு நடைபெற்றதை அறியமுடிகிறது.

அக்காலத்தில் தமது அரசன் போர்களத்தில் வெற்றி வாகை சூடவும், மற்றும் நோயின்றி வாழவும் தமது உயிரினை கடவுளர்க்கு காணிக்கையாக படைப்பதை பெரும் வீரச்செயலாக கருதினர்.

ஆத்மபலி (உயிர்கொடை) தெய்வத்திற்காகவும்,மத நம்பிக்கை பொருட்டும் நிகழ்வதுண்டு. 

அக்காலத்தில்  அரசனுக்கும், நாட்டுக்காகவும், ஊர் நலனுக்காக தம் இன்னுயிரை ஈந்த வீரர்களுக்கு அவரது உறவினர்கள் நடுகல் எடுப்பித்து வழிபட்டனர். இறந்த வீரனுக்கு நிலம் தானமாக வழங்கப்பட்டது. அதனை உதிரப்பட்டி நிலம் என அழைத்தனர்.

கர்நாடக கல்வெட்டுகள் "நெத்தரு கொடுகெ" என இதனை குறிக்கிறது. 

இத்தகு நடுகல் வீரர்கள் பற்றிய குறிப்புகளை தமிழ் செவ்வியல் இலக்கியங்களான தொல்காப்பியம், சிலப்பதிகாரம், கலிங்கத்துப்பரணி, புறநானூறு குறிப்பிடப்படுவது போன்றே அக்கால கன்னட சாஹித்யங்கள் பலவும் சான்றுகள் பகர்கின்றன. 

ஆதிகவி பம்பா இயற்றிய விக்ரமார்ஜூனியம்,ஜன்னாவின் அனந்தநாதபுராணம், பந்துவர்மாவின் ஹரிவம்சபூதயா ஆகிய நூல்களில் ஆத்மபலி,நடுகல் வழிபாடு பற்றி கூறுகிறது. 

"இரவு இருக்கும் வரை மின்னி மறையும் விண்மீன்களை போல தங்கள் இறையான அரசன் இவ்வுலகில் இருக்கும் வரை உயிர் வாழ்ந்த மெய்காப்பாளர் படையினர் ஆபத்துதவிகள், தென்னவன், வேலைக்காரபடை, கைகோளர்படை, என அக்கால தமிழகத்தில் இருந்தது போன்றே கர்நாடகத்திலும் இத்தகைய உயிர்கொடை வீரர்கள் இருந்தனர். அவர்கள் எரே வேசா,(எரே-தலைவன் வேசா-ஆணை) வேலவாளி(வேல-காலம் வாளி-கடமை,பொறுப்பு)கருடா, மனெ மகன், பிரிய புத்ரா, பிரேமாலயசூதன் என பல பெயர்களில் கன்னட மொழி கல்வெட்டுகள் குறிக்கிறது.

இம்மையில் தங்கள் அரசனுக்கு சேவை செய்வது போன்றே மறுமையிலும் விண்ணுலகில் பணி செய்ய வேண்டி உடன் உயிர் துறக்கும் இவர்களை கன்னட பழம் இலக்கியங்களில் "துலிலாள்"  "வேலவதிகா" எனவும் விளிக்கிறது.

இந்த உயிர் கொடையாளர்களின் அறம், வீரம், அர்பணிப்பு  அரசபற்று ஆகிய பண்புகளை வெளிப்படுத்தும் முகமாக பல்வேறு முறையில் உயிர் பலி மரபினை பின்பற்றினர். 

உயரமான மலை முகட்டிலிருந்து விழுந்து உயிர்துறப்பது" மன்னர் இறந்த பின்னர் அவர் உடலை தமது மடியில் கிடத்தி உயிருடன் மண்ணுக்குள் புதைக்கபடும் முறைக்கு "கீழ்குந்தெ" எனப்படும் (கங்க அரசன் நிதிமார்கா தொட்ட ஹுண்டி நடுகல் கல்வெட்டு) உயிருடன் தோலை உரித்து கொள்வது, பாய்தோடும் புனித நதி பிரவாகத்தில் மூழ்கி உயிர் துறத்தல்

(சாளுக்கிய அரசன் ஆகவமல்லன்) தீயில் பாய்ந்து உயிர் துறப்பது என இவ்வகையான முறையில் தீப்பாய்ந்து பட்டான் என்ற அபூர்வ வகை நடுகல் 

நடுகல் அமைப்பு-: 

    4 அடி உயரமும் 2 அடி அகலமும் கொண்ட சதுர வடிவிலான பலகை கல்லில் மூன்றடுக்கு நிலை நடுகல்

கீழிருந்து மேலாக-:

முதல் நிலையில் உயிர்பலி வீரன் மார்புக்கு நேராக இரு கரங்களை மடக்கி  சேவித்த வாறு நின்ற நிலை. அடுத்து எரிகின்ற அக்னி குண்டத்தில் பாய்வது போன்று காட்சி படுத்தப்பட்டுள்ளான்.

இரண்டாம் நிலையில் தீயில் பாய்ந்து உயிர் துறந்த வீரனின் ஆன்மா இரு தேவகன்னியர்களின் கரம் பற்றி விண்ணுலகம் செல்லும் காட்சி 

மூன்றாம் நிலை இருமருங்கும் தேவகன்னியர் கரங்களில் வெண் சாமரமேந்தி ஆடல் கோலத்தில் காட்சியளிக்க நடுவே ஆத்மபலி வீரன் இருக்கையில் சுகாசனத்தில் அமர்ந்து அபயஹஸ்தம் காட்டியவாறு வடிக்கப்பட்டுள்ளான். இடையே கல்வெட்டு சிதைந்த நிலையில் உள்ளது .

இத்தகு தீப்பாய்ந்து பட்டான் நடுகற்கள் 10நூற்றாண்டுக்கு பிறகான காலக்கட்டத்தில் காணக் கிடைப்பதில்லையென கன்னட நடுகல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

-----------------------------------------Epigraphy - கல்வெட்டியல்.


No comments:

Post a Comment