Monday, May 23, 2022

சென்னை அண்ணாநகர் வி.ஆர்.மாலில் டிஜே மந்திரா கோரா நிகழ்ச்சி மது விருந்தில் கலந்த இளைஞர் அதிக போதையில்பலி

அண்ணாநகரில் மது விருந்தில் கலந்து கொண்ட இளைஞர் பலி   May 22, 2022

சென்னையின் மையப்பகுதியில் அமைந்துள்ள உள்ள் ஒரு மாலில் பிரேசில் நாட்டைச் சேர்ந்த பிரபல புகழ்பெற்ற நபர் மந்திரா கோரா டி.ஜே நிகழ்ச்சி நடத்துவதாக கூறி ஆன்லைன் மூலம் 1500 ரூபாய்க்கு டிக்கெட் விற்பனை செய்துள்ளனர்.

இந்த மாலின் நான்காவது தளத்தில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு ஆடல் பாடலுடன் 21 வயது கீழ் உள்ளவர்களுக்கும் மது விருந்து அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதற்கு முறையாக அனுமதி வாங்கவில்லை என்றும், மதுவிருந்து நடப்பதாகவும் அண்ணாநகர் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனே திருமங்கலம் போலீசார், அண்ணாநகர் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கண்காணித்தனர்.

அப்போது இதில் இந்தியாவின் பல பகுதிகளில் இருந்து சுமார் 900 இளைஞர்கள்மற்றும் பெண்கள் கலந்து கொண்டது தெரிய வந்தது. மேலும் இதில் 21 வயதுக்கும் குறைவான ஆண் பெண்ணிற்கும் மது அளிக்கப்பட்டதும், எந்த ஒரு அனுமதியும் பெறாமல் இந்நிகழ்ச்சியை நடத்தியதால் போலீசார் நிகழ்ச்சியை நிறுத்தினர்.

மேலும் போலீசார் அனைவரையும் மாலில் இருந்து அப்புறப்படுத்தினர். 844 விலை உயர்ந்த மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக தமிழ்நாடு மதுவிலக்கு சட்டப்பிரிவின் கீழ் அண்ணாநகர் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். நிகழ்ச்சி நடத்திய விக்னேஷ் சின்னதுரை, மார்க், பாரத் மற்றும் சிலர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

இந்நிலையில் இந்த மது விருந்தில் பங்கேற்ற மடிப்பாக்கத்தை சேர்ந்த தனியார் ஐடி நிறுவன ஊழியர் பிரவீன் என்பவர் உயிரிழந்து உள்ளார்.போலீசார் முதற்கட்ட விசாரணையில் உயிரிழந்த இளைஞர் போதைப்பொருள் பயன்படுத்தியதாக தகவல் தெரிவித்து உள்ளனர்.

No comments:

Post a Comment

மதுரையில் மாநகராட்சி இளம் பெண் ஊழியரிடம் 4 வருடம் உல்லாசமாக இருந்து குழந்தை பிறந்த பின் கழட்டிவிட்ட திருமணமான பாஸ்டர் மீது புகார்.

மதுரையில் பாஸ்டர் செய்த வேலை.. "கணவன் மனைவியாய் வாழ்ந்தோமே".. கமிஷனர் ஆபீசுக்கு ஓடிய மாநகராட்சி பெண்  By Hemavandhana Updated: Wed...