Sunday, May 22, 2022

ஜி ஸ்கொயர் நிறுவனத்தை மிரட்டியதாக சாதிக்பாஷா கூட்டாளி கெவின் கைது சவுக்கு சங்கர், மாரிதாஸ் மீதும் வழக்கு

 ஜி ஸ்கொயர் நிறுவனத்தை மிரட்டியதாக சாதிக்பாஷா கூட்டாளி கெவின் கைது: சவுக்கு சங்கர், மாரிதாஸ் மீதும் வழக்கு   https://tamil.indianexpress.com/tamilnadu/man-held-for-allegedly-threatening-realtor-fir-against-savukku-maridhas-457486/

 

குற்றம் சாட்டப்பட்ட கெவின் மீது ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. எஃப்ஐஆர், அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர், யூடியூபர் மாரிதாஸ் மற்றும் பிரபல தமிழ் இதழின் நிருபர், ஆசிரியர், பங்குதாரர்களின் பெயர்களும் இடம்பெற்றுள்ளன

'ஜி ஸ்கொயர்' நிறுவனத்தை மிரட்டிய சாதிக்பாஷா கூட்டாளி கெவின் கைது

https://www.dinamalar.com/news_detail.asp?id=3036363   மே 23, 2022 சென்னை: ஜி ஸ்கொயர் கட்டுமான நிறுவனத்தை மிரட்டி மாதம்தோறும் 50 லட்சம் ரூபாய் வசூலிக்க முயன்ற மறைந்த சாதிக்பாஷா கூட்டாளி கைது 

 

சென்னையை தலைமையிடமாக கொண்டு 'ஜி ஸ்கொயர்' என்ற கட்டுமான நிறுவனம் செயல்படுகிறது. இந்நிறுவனம் சார்பில் பல ஆயிரம் ஏக்கர் நிலம் வாங்கி கட்டுமான நிறுவனங்களுக்கு விற்கப்படுகிறது. இந்நிலையில் ஜி ஸ்கொயர் நிர்வாகி புருஷோத்தம் குமார் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அது மயிலாப்பூர் காவல் நிலைய போலீசாரின் விசாரணைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

புகாரில் கூறியிருப்பதாவது: என்னிடம் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் கெவின் ௪௦ என்பவர் பேசினார். அப்போது 'உங்கள் நிறுவனம் குறித்து என்னிடம் ஏராளமான தகவல்கள் உள்ளன; அனைத்தும் வில்லங்கமானவை. இதுபற்றி பிரபல வார இதழ் ஒன்றில் செய்தி வர உள்ளது. அதற்கு முன் உங்கள் பார்வைக்கு அனுப்பி வைக்கிறேன். இந்த செய்தி பிரசுரமாகி விடும்.'இனி செய்திகள் பிரசுரமாகாமல் இருக்க மாதம்தோறும் எனக்கு 50 லட்சம் ரூபாய் மாமூல் தர வேண்டும். மறுத்தால் தொடர்ந்து செய்தி வெளியிடப்படும்' என மிரட்டினார்.அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

  யூடியூபர் மாரிதாஸ்வெளியிட்ட காணொளிகள் 

 

போலீசாரின் தொடர் விசாரணையில் கெவின் செங்கல்பட்டு மாவட்டம் கோவிலம்பாக்கம் பகுதியில் தங்கி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் நேற்று கெவினை பிடித்து பல மணி நேரம் விசாரித்தனர். அதில் அவர் மாமூல் கேட்டு மிரட்டல் விடுத்தது உறுதியானது. இவர் '2 ஜி' ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் அமைச்சர் ஆ.ராசாவின் நெருங்கிய நண்பர் சாதிக்பாஷாவின் கூட்டாளி என தெரிய வந்தது. தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் சாதிக்பாஷா நடத்தி வந்த 'கீரின் ஹவுஸ் புரோமோட்டர்ஸ்' என்ற நிறுவனத்தில் கெவின் பணியாற்றி உள்ளார்.

அதன்பின் கெவின் தனியாக கட்டுமான நிறுவனம் துவங்கி தி.நகரில் அலுவலகம் திறந்து ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். மேலும் பொது மக்களிடம் முதலீடு பெற்று 2 கோடி ரூபாய் மோசடி செய்தது தொடர்பாக 2016ல் கெவினை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்; இதில் ஜாமின் பெற்றுள்ளார். வங்கி ஒன்றில் 10 கோடி ரூபாய் கடன் வாங்கி மோசடி செய்து இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதுபோன்று ஏழு மோசடி வழக்குகள் கெவின் மீது இருப்பதாக கூறப்படுகிறது.


 

கெவின் மனைவி சுகந்தி மீதும் மோசடி வழக்கு உள்ளது. தற்போது ஜி ஸ்கொயர் நிறுவனத்தை மிரட்டி பணம் பறிக்க முயன்ற வழக்கில் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.

 

   

 

 

 
முன்னணி வார இதழ், சவுக்கு சங்கர், மாரிதாஸ் மீது வழக்குப்பதிவு!
கட்டுமான நிறுவனம் அளித்த புகாரின் அடிப்படையில் முன்னணி வார இதழ், சவுக்கு சங்கர், மாரிதாஸ் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது
தமிழ் நாட்டின் முன்னணி உள்கட்டமைப்பு நிறுவனமான ஜி ஸ்கொயர் ரியல்டர்ஸ் அளித்த புகாரின் அடிப்படையில், வாரம் இருமுறை வெளிவரும் இதழான ஜூனியர் விகடன், அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர், தமிழ் யூடியூபர் மாரிதாஸ் ஆகியோர் மீது மிரட்டல் மற்றும் மிரட்டி பணம் பறித்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் சென்னை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
ஆளும் கட்சியான திமுகவுக்கு தொடர்புடையவர்களுடன் நெருக்கமாக இருப்பதால், ஜி ஸ்கொயர் நிறுவனம் அனுகூலங்களைப் பெறுவதாக ஜூனியர் விகடன் இதழ் கட்டுரை ஒன்றை வெளியிட்டதைத் தொடர்ந்து அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஊடகங்களை அடக்கும் முயற்சியே இதுபோன்ற கிரிமினல் வழக்குப்பதிவுகள் என்று கண்டனம் தெரிவித்துள்ள விகடன் இதழ், இதுபோன்ற மிரட்டி பணம் பறிக்கும் முயற்சி நடக்கவில்லை என்று மறுப்பு தெரிவித்துள்ளது.
ஜூனியர் விகடன் மீது வழக்குப்பதிவு செய்ததற்கு சென்னை பத்திரிக்கையாளர் மன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. “கெவின் என்பவர் மிரட்டியதாக ஜி ஸ்கொயர் அளித்த புகாரின் பேரில் காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. விகடன் குழுமத்தை அணுகி விஷயங்களை ஜி ஸ்கொயர் நிறுவனத்தால் தெளிவுபடுத்த முடியும். ஆனால், புகார் அளிக்கப்பட்ட விதமும், மாநகர காவல்துறையின் எதிர்வினையும் பத்திரிகையாளர்களுக்கு விடுக்கப்படும் மிரட்டலா என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. முதல்வர் உடனடியாக இதில் தலையிட்டு ஊடக சுதந்திரத்தை காக்க வேண்டும்.” என்று சென்னை பத்திரிக்கையாளர் மன்றம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
ஜி ஸ்கொயர் நிர்வாகி புருஷோத்தம் குமார் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த புகாரில், ‘ஜூனியர் விகடன் பத்திரிகைக்கு நெருக்கமானவர் என்று கூறிக் கொண்டு கெவின் என்பவர் தனது முதலாளி ராமஜெயத்தை தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு, ஜி ஸ்கொயர் நிறுவனத்தை பற்றியும், அதன் நிறுவனர் மற்றும் மேலான்மை இயக்குநரான உங்களை (ராமஜெயம்) பற்றியும் பெய்யான மிகைப்படுத்தப்பட்ட கட்டுரையை வெளியிட இருப்பதாகவும், அதனை வெளியிடாமல் இருக்க ரூ.50 லட்சம் பணம் கேட்டு மிரட்டியதாகவும், பணம் தராவிட்டால் சவுக்கு சங்கர், மாரிதாஸ் மூலம் சமூக வலைதளத்தில் பொய்யான கூற்றை பரப்புவேன் என மிரட்டியதாகவும்’ கூறப்பட்டுள்ளது.
“இந்த புகாரின் அடிப்படையில் கெவின் மீது E-1 மயிலாப்பூர் காவல் நிலையத்தில் மிரட்டி பணம் பறிக்கும் நோக்கம் உட்பட பல பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் வீட்டில் பதுக்கி வைத்திருந்த Air pistol, தகவல் தொடர்பு மற்றும் மின்னனு சாதனங்கள் கைப்பற்றப்பட்டு, நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக” சென்னை காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனாலும், கெவினுடன் எந்த தொடர்பும் இல்லை என்று விகடன் மறுப்பு தெரிவித்துள்ளது. ஜி ஸ்கொயர் நிறுவனம் முதலில் அவதூறு நோட்டீஸ் அனுப்பியபோது, கெவின் விவரங்களைக் கேட்டதாகவும், இதுகுறித்து தாங்கள் கேட்ட கேள்விக்கு எந்த பதிலும் வரவில்லை என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
லஞ்ச ஒழிப்புத்துறையின் முன்னாள் ஊழியரும், அரசியல் விமர்சகருமான சவுக்கு சங்கர் மற்றும் யூடியூபர் மரிதாஸ் ஆகியோரது பெயர்களும் எப்ஐஆரில் சேர்க்கப்பட்டுள்ளது. பணம் கொடுக்க மறுத்தால் சமூக ஊடகங்களில் செல்வாக்காக இருக்கும் இவர்கள் இருவர் மூலமும் நிறுவனம் பற்றி அவதூறான செய்திகளை பரப்புவேன் என்று கெவின் மிரட்டியதாக ஜி ஸ்கொயர் நிறுவனம் அளித்துள்ள புகாரில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இதுகுறித்து சவுக்கு சங்கர் கூறுகையில், “ஜி ஸ்கொயர் பற்றி பேசும் எவரையும் அமைதிப்படுத்தும் நோக்கத்தில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.” என்று கூறியுள்ளார். விகடன் குழுமத்தின் சட்டப்பிரிவினர் கூறுகையில், “ஜி ஸ்கொயர் நிறுவனம் முதலில் அவதூறு நோட்டீஸ் அனுப்பி கெவின் விவரங்களை கேட்டது. ஏன் கேட்கிறார்கள் என்பது பற்றிய விவரங்களை அளித்தால்தான் அடுத்தக்கட்ட சட்ட நடவடிக்கையை தொடங்க முடியும் என்பதால், அதுகுறித்து ஜி ஸ்கொயர் நிறுவனத்திடம் பதில் கேட்டோம். ஆனால், அவர்கள் எவ்வித பதிலும் அளிக்கவில்லை. இப்போது விகடன் குழுமத்தின் மீது ஒரு பொய்யான புகார் கொடுக்கப்பட்டுள்ளது. கட்டுரையுடன் எந்த தொடர்பும் இல்லாத எம்.டி மற்றும் பிற இயக்குநர்கள் எஃப்.ஐ.ஆரில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதனை சட்டப்படி எதிர்கொள்வோம்” என்று தெரிவித்துள்ளனர்.
நன்றி : samayam tamil
இப்போது எனது கேள்வி:-
"சவுக்கு சங்கரையும், மாரிதாசையும் பயன்படுத்தி உங்கள் மீது அவதூறு பரப்புவேன்"- என்று ஒருவேளை கெவின் கூறியதாகவே ஒரு வாதத்துக்காக வைத்துக் கொள்வோம்.
அதற்கு எப்படி மாரிதாசையும், சவுக்கு சங்கரையும் கைது செய்ய முடியும்?
ஒருவர் பெயரை - அவருடைய அனுமதியோ தகவலோ இல்லாமல் இன்னொருவர் பயன்படுத்துகிறார் என்றால் - அந்தப் பெயருக்கு உரியவரை எல்லாம் கைது செய்வார்களா?


1. ஜெயிலுக்கு போறேன்… ஜெயிலுக்கு போறேன் என்று கூவிக் கொண்டிருக்கும் சவுக்கு நோக்கம் என்ன?
2. ஜூவி மீது எப்.ஐ.ஆர். போட்டுட்டாங்கோன்னு போராட துடிக்கும் பத்திரிகையாளர்கள் விசாரித்தது என்ன?
ஜூனியர் விகடனில் என்ன நடந்தது…?என்ன நடக்கிறது என்பதெல்லாம் முதலில் பத்திரிகா தர்மவான்கள், அதாங்க பத்திரிகையாளர்கள் என்ன விசாரித்து தெரிந்துக்கொண்டார்கள் என்பது முதலில் அறிவோம்.
ஜி-ஸ்கொயர் என்ற ரியல் எஸ்டேட் கம்பெனி, தமிழ்நாட்டில் வாங்கி குவிக்கும் நிலத்தை பற்றி கட்டுரை எழுதுகிறது ஜூனியர் விகடன்.
தப்பே இல்லை. .. சத்தியமான உண்மை அது. முதல்வர் ஸ்டாலினின் மருமான் சபரீசனே இந்த ஜி-ஸ்கொயர் கம்பெனியை நடத்தி வரும் பாலா என்ற திருப்பூர் பேபி எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் மாஜி உரிமையாளரான ராமஜெயத்துக்கும், அண்ணாநகர் எம்.எல்.ஏ.வின் மகன் கார்த்திக்கிற்கும்
கற்பக விருட்சம் !!!
அட்சய பாத்திரம் !!!
தங்கச்சுரங்கம்!!!
இதை தட்டிக் கேட்க துணிந்த ஜூனியர் விகடனை பாராட்டியே தீரவேண்டும்.
ஆனால்?
ஆனால்?
ஆனால்?
அந்த கட்டுரைக்கான செய்தியை திரட்டி, பிரிண்ட் ஆகும் முன்பே ஜூனியர் விகடனின் ‘பிளாக்மெயில்’ நிருபர் சையது அபுதாகீரும், அந்த பிளாக் மெயிலுக்கு மூளையாக இருந்து கொள்ளையடித்துக்கொண்டிருக்கும் ஜூனியர் விகடனின் ஆசிரியர் தைஸ்ட் கலைச்செல்வனும் என்ன செய்கிறார்கள்?
கம்ப்யூட்டரில் லே அவுட் செய்த நகலை கெவின் (பிளாக்மெயில் செய்து கைது செய்யப்பட்டவர்) அனுப்பி, ஜி-ஸ்கொயர் நிறுவனத்தின் உரிமையாளர் பாலாவை மிரட்டுகிறார்கள்.
முதல் கட்டுரை, முதல்வர் ஸ்டாலின் சகோதரி செல்வியும் அவரது கணவர் செல்வமும் பத்திரப்பதிவு துறையில் செய்த ரகளை. அதில் கொஞ்சமாக பாலாவையும் ஜி-ஸ்கொயர் நிறுவனத்தையும் பற்றி எழுதுகிறார்கள்.
அது சரி?யார்றா அந்த கெவின்? என்று கேள்வி கேட்கத்துடிக்கும் பத்திரிகா தர்மவான்களே, இந்தாங்க. கவனமா படிங்கப்பூ. விகடன் கம்பெனிக்கு விளம்பர மூலம் வர வேண்டிய தொகையை வசூலித்து தரும் ஏஜெண்ட்டாக நியமிக்கப்பட்டவர் இந்த கெவின். அதற்கான அத்தாட்சி கடிதத்தை ஜூனியர் விகடன் நிறுவனமே வழங்கி இருக்கிறது.
இதன் பேரில், ஜூனியர் விகடனில் வேலை பார்க்கும் தைஸ்ட் கலைச் செல்வன், சையது அபுதாகீர், கெவின் ஆகியோர் இணைந்து கொள்ளை யடிக்கும் படலத்தை சில ஆண்டுகளாக அரங்கேற்றி வருகிறார்கள். இதில், ஆரம்பம் முதலே இணைந்துக்கொண்டு, ஒன்றுமே தெரியாதது போல ஒளிந்துகொண்டிருக்கும் இன்னொரு ‘கிரிமினல்’ அப்பாஸ். இந்த அப்பாஸ், விகடனின் பப்ளிகேஷன் நிறுவனத்தை கவனித்துக்கொண்டு கொள்ளையோ கொள்ளை அடிப்பவர்,
இப்படி கூட்டணி போட்டுக்கொண்ட இந்த ’’ப்போர் போர்ஜரி டீம்’’ (4 கொள்ளையர் கள்) தான் ஜி-ஸ்கொயர் பாலாவை ஜனவரி மாதம் மிரட்டுகிறது.
அந்த அழைப்பில் வந்த வாய்ஸ் மெஜேஜ்களை பாலா சேகரித்துக்கொள்கிறார். இந்த கும்பலில் ஆபரேஷன் பேர்வழி கெவின் என்ன கேட்கிறார். ‘’இந்தா பார், அடுத்த இதழில் (23.01.22) வரும் அட்டைப்பட கட்டுரை. இதில், முதல்வர் ஸ்டாலினின் சகோதரி செல்வி- செல்வம் பற்றிய கட்டுரை. இதில் உன்னை லேசாக தொட்டு இருக்கிறோம். இனிமே, இப்படி செய்தி வரவேண்டாம்ன்னா, 50 லட்சம் ரூபாய் கொடு. இந்த செய்தி ஸ்லோ செய்துவிடுவேன். மாசா மாசம் 10 லட்சம் கொடுத்தா, இனிமேலும் வராம பார்த்துக்குவேன்’’ என்று மிரட்டுகிறார் இந்த கெவின்.
ஆனால், ஜி-ஸ்கொயர் பாலா யார்? விடாகொண்டராச்சே. பணம் கொடுக்க மறுக்கிறார். அடுத்த இதழில் சொன்னது போலவே (30.01.22 தேதியிட்ட இதழில்) ‘’மாப்பிள்ளை இடம் வாங்கச் சொன்னார்…. மிரட்டப்படும் நில உரிமையாளர்கள்’’ என்று பாலா படம் போட்டு கட்டுரை.
இது தொடர்பாக, 03.02.2022 அன்றே, ஜி-ஸ்கொயர் பாலா, திமுக எம்பியும் வக்கீலுமான வில்சன் மூலம் நோட்டீஸ் அனுப்புகிறார். இதன் பிறகாவது, ஜூனியர் விகடன் ஓனர் சீனிவாஸ் என்ன செய்தார்? கெவினுக்கும் நம்ம கம்பெனிக்கும் என்ன சம்பந்தம்? அவன் ஏன் பணம் கேட்டு மிரட்டுகிறார்? அதுவும் ஜூனியர் விகடனில் கவர் ஸ்டோரியாக வரப்போகும் நகலை வாட்ஸ் அப் மூலம், 18ம் தேதியே (இதழ் முடிக்கும் நாளில்) அனுப்ப இவர் கைக்கு அது எப்படி போனது? என்ற ஓட்டைகளை கண்டுபிடித்து அடைத்திருந்தால், இந்த பிரச்னை அன்றே முடிந்து போயிருக்கும்.
இந்த பிளாக்மெயில் ஜர்னலிஸ்த்துக்கு சீனிவாஸருக்கு தொடர்பு இருக்கிறது என்று கூறவில்லை. அவர் உண்மையிலே, ஒரு புலனாய்வு பத்திரிகை செய்ய வேண்டிய பணியை சுதந்திரமாக செய்ய தனது டீமுக்கு அதிகாரம் கொடுத்திருக்கிறார் என்றே வைத்துக்கொள்வோம். ஆனால், தனது எடிட்டோரியல் டீம் மீது இப்படி குற்றச்சாட்டு வந்ததுமே, அதற்கான ஆவணங்களை தேடி பெற்று ஒரு விசாரணை நடத்தி இருக்க வேண்டாமா?
இந்த மோசடிக்கு மூளையாக இருந்தவர்கள் இரண்டு பேர். ஒருவர் தைஸ்ட் கலைச்செல்வன் –ஜூனியர் விகடனின் கட்டுரைகளை முடிவு செய்பவர். அடுத்து, சையது அபுதாகீர். இவர் தான் எல்லா இப்போதைய ஜூனியர் விகடனின் கெடுதலுக்கும் சூத்திரதாரி.
ஒரு வேளை, சீனிவாஸர்ர்ர்ர்ர் இப்படி சொல்லக்கூடும். ’’எங்கள் நிறுவனத்துக்கும், கெவினுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை’’ என்று அவர் தைரியமாக பேட்டி அளிப்பாரா?? அளித்து பார்க்கட்டுமே! கெவினுக்கும் விகடனுக்கும் என்ன தொடர்பு என்ற அந்த அம்பலத்தை அவிழ்த்து காட்டத் தயார். விகடனுக்கு விளம்பரதாரர்கள் கொடுக்க வேண்டிய பணத்துக்காக, எத்தனை கம்பெனிகளுக்கு போன் செய்து, ‘’நான் வருகிறேன். பணத்தை ஏற்பாடு செய்யுங்கள். எம்.டி. பேசச்சொன்னார்’’ என்று பேசி பணம் வாங்கி வந்த ரிக்கார்டு இருக்கிறது. கால் டீடெயில் இருக்கிறது.
அட அதை விடுங்கோண்ணா. சீனிவாஸ்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் சார்ர்ர்ர்ர் ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
உங்க நிருபர் சையதுக்கும், பப்ளிகேஷன்ஸ் இன்சார்ஜ் அப்பாஸூக்கும் 5 டிஜிட் தொகையை கெவின் அனுப்பி இருக்கிறார். இரண்டு பேருக்கும் ஆக்சிஸ் வங்கியில் பிப்ரவரி -2022-முதல் வாரத்தில் கெவின் தனது வங்கியில் இருந்து அவர்கள் வங்கிக்கு 5 டிஜிட்
5 டிஜிட்
5 டிஜிட் தொகைங்கண்ணோ….
அப்படியின்னா கெவினும் உங்கள் எடிட்ட்டோரியல் டீமுக்கும் என்ன கள்ளத்தொடர்பு ????????????????
அந்த பணம் கெவின் அனுப்பி இருக்காரே. அதைப்பற்றி விசாரியுங்கள்.
ஆவணத்தை எடுத்துப்பாருங்கள். (அதையும் நாங்களே எடுத்து விடணுமா. விடறோம். விடறோம்)
பத்ரிகா தர்மவான்களே இதையும் நீங்களும் தோண்டி துருவி எடுக்கறது. இது தொடர்பாக, 3 லட்டர் விகடன் ஓனர் சீனிவாஸர்ர்ர்ர்ர்ருக்கு வந்ததே! இதில் மோசடி மண்ணன் சையத் அபுதாகீர் மீது ஏதோ நடவடிக்கை எடுப்பதாகச் சொல்லி, அவரை விகடனில் வேறு இதழுக்கு மாற்றிவிட்டார். ஆனால், சையது அபுதாகீர் அட்டூழியம் தொடர்கிறதே. அவர்தான் தொடர்ந்து கவர் ஸ்டோரி முடிவு செய்கிறார். அவருக்கு தான் பயந்து தைஸ்ட் கலைச்செல்வன் வாய்ப்பு கொடுக்கிறார். இந்த சையது அபுதாகீர் செய்த பித்தலாட்டம் ஒன்றா இரண்டா.??
அரசியல் பிரமுகரை கையில் போட்டுக்கொண்டு பெண்களை தனி அறைக்கு வரவழைத்து ஜல்சா செய்கிறாரே. அந்த விவரமும் நம்ம அலுவலத்திற்கு வந்ததே சார்….\\\! அமைச்சர் எ.வ.வேலுவை மிரட்டி பணம் கேட்டார் . மறுத்ததுமே, அவர்களைப்பற்றி, ‘அதிகாரம்-அந்தரங்கம்’ன்னு பிளாக்மெயில் தொடர் எழுதினார் சையது அபுதாகீர். அதிகாரம்-அந்தரங்கம் என்ற பெயரில் கட்டுரை எழுதப்போவதாகச் சொல்லி, பலரையும் மிரட்டி மாமூல் வாங்கினார்ன்னு ஒரு அறிக்கை வந்ததே. எல்லோரையும் கிழித்து தொங்கப் போடும் சவுக்கு சங்கருக்கும் அது தெரியவந்ததே? (ஏன் சங்கர் சார், அதை பற்றி மூச்சே விடுவதில்லை. உங்கள் வீட்டுக்கே அந்த ஆவண்க்கள் எல்லாம் அனுப்பி வைத்தமே. எங்களை நட்டாற்றில் விட்டு ஒதுங்கியது ஏன்)))))))
அதுமட்டுமா, தனது அண்ணன் மகளை காதலித்த சிவகங்கை இஸ்லாமிய வாலிபரை கொலை செய்வதாக மிரட்டினார் சையது அபுதாகிர். இது தொடர்பாக, அந்த வாலிபர் கொடுத்த புகாரின் பேரில், சிவகங்கை மாவட்ட குழந்தைகள் நல அதிகாரிகள் விசாரணை நடத்தியதே. அந்த கலெக்டர் நடத்திய புகாரின் விவரங்களும் விகடன் சீனிண்ணீணீவாசஸ்ருக்கு வந்ததே.
அப்போதாவது, இந்த சீனிவாஸ்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ர்ர்ர்ர்ர்ர் ர்ர்ர்ர்ர் ர்ர்ர் ர்ர்ர்ர்ர்ர்ர் முழித்துக்கொள்ளக்கூடாதா?
இது கூட பரவாயில்லை சீனிவாஸ்ர்ர்ர்ர்ர்ர் சார் .. உங்கள் அலுவலகத்தில் இரண்டு பெண் ஊழியர்களை (பெயர் வெளியிட தயார், ஆனால் அந்த குடும்பம் பாதிக்கும்) மிரட்டி படுக்கைக்கு அழைத்தவர்கள் அப்பாஸூம், சையது அபுதாகிரும். ஊரில் இருக்கும் பெண்கள் பாதிக்கப்பட்டால், கண்ணீர் கட்டுரைகள் எழுதும் ஜூனியர் விகடனா் சீனிவாஸ்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ரே.. ஒரு விசாகா கமிட்டி அமைத்து, உங்கள் பெண் ஊழியர்கள் விசாரித்துப் பாருங்கள். அதில் வரும் உண்மைகளை நீங்களே ஒரு தொடராக எழுத கைதுடிக்கும் ; மனசு வெடிக்கும் ; இத்தனை மோசடி கும்பல்களை பற்றி தெரிந்து இருந்தும், அவர்களை வைத்துக்கொண்டு ஏன் சார், நல்ல-தரமான-மக்களின் நாடி துடிப்பான ஜூனியர் விகடனை மோசடி கும்பல் கூடி விகடனாக்கிவிட்டீர்களே சீனிவாசர் சார்! இந்த பத்திரிகைக்காக எத்தனை நல்ல உள்ளங்கள் உழைத்திருக்கிறது. காத்திருக்கிறது என்பதை உங்களை விட யாருக்கு சார் அதிகம் தெரியும்.
சரி போவட்டும்..;;
இந்த சவுக்கு சங்கர்.
ஆனாலும் சங்கரு நீ எல்லாரையும் பொளந்துக்கட்டி அடிக்குற.
புகழ்ல திளைக்குற.
கல்லாவும் நல்லா கட்டுற.
நல்லா இருந்துட்டுப் போ.
எப்படியோ எல்லா அலுவலகத்துக்குள் நுழைந்து பேட்டி எல்லாம் யூ டியூபில் வர அளவுக்கு வந்துட்ட. பாராட்டுக்கள். ஆளும்கட்சியின் அடாவடிகளை போட்டு தாக்குற. அண்ணாமலையை ரவூண்டு கட்டி அடிக்கிற. அதுக்கும் பாராட்டலாம்னு தோணுது. ஆனா, ஜெயிலுக்கு போய் இன்னும் பேமஸ் ஆகி, கட்சி தொடங்கி, ஆட்சிய பிடிக்கலாம்ன்னு நெனைக்கிறீயா?
ஆமா, இந்த கெவின் மேட்டர்ல என்ன நடந்தது என்று உன்னால் கண்டுபிடிக்க முடியாதா. எல்லா வக்கீலும் உன் பாக்கெட்டில் வைத்துக்கொண்டு இருந்து விட்டு ‘’ஏய் நான் ஜெயிலுக்கு போறேன். ஜெயிலுக்கு போறேன்’னு ஏன் கூவிக்கிட்டு இருக்கறீங்களே சவுண்டு சங்கர்ர்ர்ர்ர்ர்ர்ர்! இந்த புகார் மேல ஏன் எப்.ஐ.ஆர். போட்டாங்கன்னு உங்க தோஸ்த் வக்கீல்கிட்டே விசாரிக்கவே இல்லயா. அது மகா மட்டமான எப்.ஐ.ஆர்.தான்.
உன் பேரையும் யூ டியுப் மாரிதாசையும் சேர்த்ததுதான் சென்னை போலீஸ் செய்த கேவலம். கொஞ்சமாச்சும் அறிவும், சட்ட ஆலோசனையும் செய்யற அதிகாரிங்க இருந்தா, இதை செய்வாங்களா? உன் பேரையும் மாரிதாஸ் பேரையும் சொல்லி கெவின் மிரட்டினார்ன்னு சேர்த்துட்டு, இப்போ சென்னை போலீஸ் நாறிக்கிட்டு இருக்கு. அவிங்களுக்கு தூக்கம் போச்சு. ஆனா அந்த எப்.ஐ.ஆர்.ல உன்னை கூப்பிட்டு விசாரிச்சாங்களா? இல்ல மாரிதாசை தான் கூப்பிட்டு விசாரிச்சாங்களா?
ஒரு மண்ணும் இல்ல. ஆனால், ‘சோர்ஸஸ்’ன்னு போட்டு ‘சவுக்கு சங்கரை கைது செய்யபோறாங்கன்னு’’’’ ஏக ரவுஸ்., இது தேவையா!
நீ சபரீசனை கிழி. சபரிக்கு காவடி தூக்குற பாலாவை கதறவிடு. ஓட விடு. ஆனா, பிளாக்மெயில் பேர்வழியான சையது, அப்பாஸு, தைஸ்ட் கலைச்செல்வன் செய்யுற மோசடிகளுக்காக நீ வடிவேலு மாதிரி
போலீஸ் ஜீப்ல வாலண்டியரா வந்து ஏறி குந்திக்காதே.
அடுத்து ;;;;;;
இம்பார்டெண்ட் மேட்டர்ஸ் .. ச்சீ..சீனிவாஸர் சார் , உங்க பேரையும் உங்க மனைவி பேரையும் இந்த எப்.ஐ.ஆர்ல சேர்த்தது அபத்தம் மட்டுமல்ல, அசிங்கத்தின் உச்சம். ஒரு பத்திரிகை ஓனரை எப்படி டீல் செய்யனும்ன்னு கூட தெரியாத மூளை கெட்டுப்ப்போன அதிகாரிங்க. அதுக்கு அவிங்களும் நீங்களும் சண்டைப்போடுங்க. ஆனா, மோசடி கும்பல் வலையில இருந்து முதல்ல வெளியே வாங்க சார் ப்ளீஸ்.
அதுக்கு அப்புறமா, பத்திரிகா தர்ம்வான்களே, ஏதோ ஜூனியர் விகடனார் மீது கேஸ் போட்டுட்டாங்கோன்னு ஆர்ப்பாட்டம், பெல்பாட்டம், குதியாட்டம்ன்னு ஆடாதீங்க.
இதுவரைக்கும் நடந்ததை விலாவாரியா சொல்லி இருக்கிறோம். இதை விசாரியுங்க. ஆனா, மோசடி கும்பலின் அம்பலத்தை விசாரிக்கும் போலீசின் நடவடிக்கையை முடக்கிடாதீங்க. இது பத்திரிகா தர்மத்துக்கு ஆகாது. ஆனா, பொய் கேஸ் போட்டா, ஆளும்கட்சியான திமுகவையும் விடாதீங்க. போலீசையும் விடாதீங்க. இது பொய் கேஸ் இல்லன்னு போகப்போக புரியும். சில ஆடியோக்கள் வெளியே வரும். அப்புறமா உங்க ஸ்டிரைக்கை செய்ங்க.
அப்புறம்,
ஜி-ஸ்கொயர் பாலா எப்படி எல்லாம் நிலத்தை வாங்கினாருன்னு இன்னும் ஓங்கி ஓங்கி அடியுங்க. ஆனா, அவர் கொள்ளையடிக்குறான்னு சொல்லி, அவரையே மிரட்டி பணத்தை வாங்கினா????? அவருக்கும் பத்திரிக்கை காரங்களுக்கும் என்ன வித்தியாசம்? அசிங்கமில்லையா !
நல்லா விசாரிங்க. - அப்புறமா போராடுங்க !
©️-✍️
வாராகி, செய்தியாளர் முகநூல்

No comments:

Post a Comment

காலில் செருப்பு, நெருப்பு இல்லத அடுப்பு பொங்கல் போட்டோ ஷூட் செய்த தமிழர் விரோத்கள்- மனிதர்களா

 காலில் செருப்பு, நெருப்பு இல்லத அடுப்பு பொங்கல் போட்டோ ஷூட் செய்த தமிழர் விரோத்கள்- மனிதர்களா