Friday, May 20, 2022

பண்டைத் தமிழர் உணவான பன்றிக்கறி மருத்துவ ரீதியில் நல்ல உணவு.

தமிழர்கள் வாழ்வில் பன்றிக்கறி முக்கிய உணவு என சங்க இலக்கியம் தெளிவாக காட்டுகிறது.

இயற்கை ஆர்வலர்கள் தெளிவாக பன்றி வளர்ப்பு சுற்றுச்சூழல் பாதிப்பு மிகவும் குறைவு என்கின்றனர்.
இறைச்சி உண்பதில் பன்றிக்கறி மருத்துவ ரீதியில் நல்ல உணவு.




ஊன் கலந்து சமைத்த சோறு:
சோறு சமைக்கும் போது அத்துடன் மான்கறி, பன்றிக்கறி, ஆட்டிறைச்சி, மீனிறைச்சி போன்றவற்றைச் சேர்த்துச் சமைத்து உண்ணும் வழக்கம் பண்டு தமிழகத்தில் இருந்தது.
”பொன்னறைந்து அன்ன நுண்ணேர் அரிசி
வெண்ணெறிந்து இயற்றிய மாக்கண் அமலை “(மலை.-அடி.-440-442)
எனும் பகுதி வெள்ளி போன்ற வெண்மையான சோற்றுக்கட்டியின் இடையிடையே வெள்ளாட்டை வெட்டிச் சமைத்த கறித் துண்டுகள் ஆங்காங்கு அடர்ந்த வண்ணத்துடன் தெரிந்த தோற்றத்தை கண்முன் கொண்டுவருகின்றன. இது கட்புல உருக்காட்சியாக அமைந்துள்ளது.
“முள்அரித்து இயற்றிய வெள்ளரி வெண்சோறு
………………………………………………………………..
திண்டோள் நன்னர்க்கும் அயினி சான்ம்“-(மலை.-அடி-465-468)
என்பதால் முள்ளைக் கழித்து வெள்ளிய மீன்தசையோடு கலந்து ஆக்கின வெண்சோறு நன்னன் முதலிய மன்னரும் உண்ணத் தகுந்த மேன்மையான உணவு என்னும் கருத்தைப் பெறுகிறோம். மீன்தசையின் வெண்மையும், சோற்றின் வெண்மையும் சேர்ந்து அதன் சிறப்பை மேம்படுத்துவதுடன் வண்ணப்புல உருக்காட்சியையும் தோற்றுவிக்கின்றன.
விலங்கிறைச்சியைச் சேர்த்துச் சோறு சமைத்து உண்டமை ‘ஊன்துவை
அடிசில்’ என்ற தொடரால் பதிற்றுப்பத்தின்(பா-45) மூலமும் தெளிவாகிறது.

சுட்டு உண்ணல்:
இறைச்சியை நேரடியாக நெருப்பில் சுட்டும் உண்டனர். அப்படிச் சுடுங்கால் புகைநெடி பண்டத்தில் ஏறாதபடி சுட்டனர். புனத்தைக் காக்கும் கானவரின் அம்பு பட்டுக் குருதி சோரக்கிடந்த பன்றியைப் பக்குவமாக மயிர்போகச் சீவி; உலர்ந்த மூங்கில் உரசிப் பிடித்த நெருப்பில் சுட்டுண்ண பரிசில் பெற்ற கூத்தன்; தான் ஆற்றுப்படுத்தும் கூத்தனை அறிவுறுத்துகிறான்.
“........................................ஏனம் காணின்
முனிகழை இழைத்த காடுபடு தீயின்
நனிபுகை கமழாது இராயினிர் மிசைந்து “-(மலை.-அடி.-247-249).
இவ்வடிகளில் நடைமுறைச் சிக்கல் இடம்பெறும் பாங்கு நினைந்து இன்புறத்தக்கது. பன்றியைச் சுடும் மணம் நம் மூக்கையோ மனத்தையோ எட்டவில்லை; ஆனால் விறகடுப்பிலும், கரியடுப்பிலும் சமைத்த காலத்தில் என்றாவது தவறுதலாக அமையும் புகைநெடி ஏறிய உணவின் நுகர்புல உருக்காட்சி மனதில் எழுகிறது.

No comments:

Post a Comment

அஜ்மீர் தர்கா சுற்றிக் காட்ட லைசன்ஸ் பெறும் காதிம்கள் மட்டுமே

  Ajmer Dargah to introduce licensed Khadims for first time in 75 years; move sparks massive opposition The Khadims of Ajmer Sharif Dargah a...