Thursday, May 19, 2022

பெண் பாதிரி. மரியா செல்வம் மோசடி- வெளிநாடு வேலை வாங்கி தருவதாக : பிஷப்.காட்ப்ரே நோபில்- போலீசில் புகார்

வெளிநாடுகளில் வேலை வாங்கி தருவதாக மோசடி: கிறிஸ்தவ பெண் பாதிரி Rev.மரியா சிஸ்டர் மீது பிஷப்.காட்ப்ரே நோபில் (அருவருப்பாய் பேசும் புரோக்கர் பாதிரி மோகன் சி லாச்ரஸ் நெருங்கிய உறவினர்)  போலீசில் புகார் https://www.youtube.com/watch?v=QjgHheGZOyo

 

  https://www.dinamalar.com/news_detail.asp?id=3033683 திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்தவர் பேராயர்.காட்ப்ரே வாஷிங்டன் நோபில்;  இவர், சென்னை பெரியமேடு காவல் நிலையத்தில் அளித்த புகார்:சென்னை அண்ணா நகரைச் சேர்ந்த மரியா சிஸ்டர் என்பவர், என் மொபைல் போன் எண்ணிற்கு தொடர்பு கொண்டார். 'நீங்களும் பேராயர், நானும் மத போதகர். உங்கள் மூத்த மகனுக்கு, கிரீஸ் நாட்டில், மெடிட்டேரியன் ஷிப்பிங் கம்பெனியில் வேலை வாங்கி தருகிறேன்' என, கூறினார். 

அங்கு, மே 2க்குள் வேலையில் சேர வேண்டும் எனக் கூறி, வங்கி கணக்கு வாயிலாகவும், பெரியமேடு பகுதியில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் வைத்தும், 8.50 லட்சம் ரூபாய் வாங்கினார். 'விசா' வந்தபாடில்லை. இதனால், இவர் தெரிவித்த கம்பெனியின் இணையதள பக்கத்தை பார்த்தேன். அதில், 'வேலை வாங்கித் தருவதாக, எங்கள் கம்பெனியின் பெயரைச் சொல்லி யாரும் பணம் கேட்டால் தர வேண்டாம்' என, எச்சரிக்கப்பட்டு இருந்தது.

பின், அந்த கம்பெனி நிர்வாகிகளை தொடர்பு கொண்டபோது, மரியா சிஸ்டர் எங்களிடம் வழங்கிய பணியாணை போலி என தெரியவந்தது. பணத்தை திரும்ப கேட்டபோது, கொலை மிரட்டல் விடுக்கிறார்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து, போலீசார் விசாரித்தனர். அப்போது, 'மரியா சிஸ்டர் என்பவரின் பெயர் மரியா செல்வம், 42. இவர், இலங்கையைச் சேர்ந்தவர். மத போதகராக செயல்பட்டு, 'சர்ச்'சுகளுக்கு வருவோருக்கு, வெளிநாடுகளில் வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்வதையே தொழிலாக செய்து வந்தார்' என்பது தெரிய வந்தது. இவர் மீது மோசடி உட்பட, ஐந்து பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.

புகாருக்கு உள்ளான மரியாசெல்வத்தால், தேனி மாவட்டத்தைச் சேர்ந்த முனியாண்டி என்பவர் ரூ.18.5 லட்சம் இழந்ததாகவும், இதனால் அவர் அங்குள்ள ஆட்சியர் அலுவலகத்தில் 2019-ம் ஆண்டு தீக்குளித்து இறந்ததாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்தும் போலீஸார் விசாரணை மேற் கொண்டுள்ளனர். 

https://www.dailythanthi.com/News/Districts/2019/02/15030930/Theni-Collector-officeFire-With-that-kept-Worker-Death.vpf
வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்தவர், பணத்தை திருப்பிக் கொடுக்காததால் தேனி கலெக்டர் அலுவலக வளாகத்தில் தீக்குளித்த தொழிலாளி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தேனி, ஆண்டிப்பட்டி அருகே உள்ள க.விலக்கு அன்னை இந்திரா நகரை சேர்ந்தவர் முனியாண்டி (வயது 62). கூலித்தொழிலாளி. இவர், தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று முன்தினம் வந்தார். கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள பூங்கா பகுதிக்கு சென்ற அவர், திடீரென தான் வைத்திருந்த பைக்குள் இருந்து கேனை எடுத்து அதில் இருந்த பெட்ரோலை ஊற்றி தீ வைத்து கொண்டார். 

உடலில் தீப்பற்றி எரிந்த நிலையில் அவருடைய அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து தீயை அணைத்தனர். ஆனால் அதற்குள் முனியாண்டியின் உடல் முழுவதும் தீயில் கருகியது. உயிருக்கு போராடிய அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
 இந்த சம்பவம் குறித்து தேனி போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், முனியாண்டி தனது மகன் பாலமுருகன் (25) மற்றும் உறவினர்கள் கோவிந்தராஜன், அழகுராஜன் ஆகியோருக்கு வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறிய மனுவேல் மகள் மரியசெல்வம் என்பவரிடம் சுமார் ரூ.18 லட்சம் கொடுத்ததாகவும், அவர் பணத்தை பெற்றுக் கொண்டு வேலை வாங்கித் தராமல் ஏமாற்றியுள்ளார்.

இதுகுறித்து மாவட்ட கலெக்டர் அலுவலகம், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் ஆகிய இடங்களில் முனியாண்டி புகார் செய்து இருந்தார். இந்த புகார் தொடர்பாக மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். ஆனால் இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யாமல் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வந்ததாக கூறப்படுகிறது. 

நேற்று முன்தினம் புகார் தொடர்பான விசாரணைக் காக பாலமுருகன், கோவிந்தராஜன், அழகுராஜன் ஆகியோர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் அலுவலகத்துக்கு வந்தனர். அவர்களுடன் வந்த முனியாண்டி கலெக்டர் அலுவலக வளாகத்துக்கு சென்று விரக்தியில் தீக்குளித்ததாக தெரியவந்தது. 
முனியாண்டி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் குறித்து தேனி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த முனியாண்டி நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் அன்னை இந்திரா நகர் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 
முனியாண்டியின் உறவினர்கள் பலர் மருத்துவமனைக்கு வந்து இருந்தனர். இதற்கிடையே மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் கம்பம் ராமகிருஷ்ணன் தலைமையில் அக்கட்சியின் நிர்வாகிகள் பலர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு வந்து தீக்குளித்து தற்கொலை செய்த முனியாண்டியின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினர். 
வேலை வாங்கி தருவதாக மோசடி செய்யப்பட்டது தொடர்பாக புகார் அளித்தும் வழக்குப்பதிவு செய்யாமல் போலீசார் இழுத்தடித்ததே அவர் மனம் உடைந்து தற்கொலை செய்து கொள்வதற்கு காரணமாக அமைந்து விட்டதாக உறவினர்கள் குற்றம்சாட்டினர்

No comments:

Post a Comment

காலில் செருப்பு, நெருப்பு இல்லத அடுப்பு பொங்கல் போட்டோ ஷூட் செய்த தமிழர் விரோத்கள்- மனிதர்களா

 காலில் செருப்பு, நெருப்பு இல்லத அடுப்பு பொங்கல் போட்டோ ஷூட் செய்த தமிழர் விரோத்கள்- மனிதர்களா