Saturday, May 21, 2022

ராஜிவ் கொலை நிகழ்வு இந்தியா டுடே

1991இல் இதே மே மாதம் 21ஆம் தேதி முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி அமதிப் பூங்காவாக இருந்த தமிழ் நாட்டில் கொல்லப்பட்டார்...
பாராளுமன்றத்திற்கு முதல் கட்ட தேர்தல் முடிந்து, இரண்டாவது கட்ட தேர்தல் பிரச்சாரத்திற்காக வந்திருந்த போது இந்த துர்சம்பவம் நடந்தேறியது.
முடிவுகள் வந்த பின் தெரிந்தது -
அவர் கொல்லப்படுமுன் நடந்தமுதல் கட்ட தேர்தலில், காங்கிரசுக்கு எதிராக 5.7% வாக்குகள் சென்றன என்றும்...
அவர் கொல்லப்பட்ட பின் நடந்த இரண்டாம் கட்ட தேர்தலில் 1.6% வாக்குகள் காங்கிரசுக்கு சாதகமாக அமைந்தன என்றும்...
முடிவில் 244 இடங்களை பெற்ற காங்கிரஸ் - கூட்டணி ஆட்சி அமைத்தது.
அடுத்த பெரிய கட்சியாக வந்தது பாஜக @ 120 இடங்கள்!
ராஜீவ் கொல்லப்படாவிட்டால், காங்கிரஸ் முற்றிலும் வலுவிழந்து, பாஜக ஆட்சி அமைந்திருக்கலாம்.
1991இல் அமைய வேண்டிய இந்தியர்கள் ஆட்சியை 2014க்கு தள்ளிப் போட்டனர் வெளிநாட்டு சக்திகள்.
கொலையாளி பேரறிவாளனை இத்தருணத்தில் வெளியே விட்டிருப்பது, வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவது போலிருக்கும்.
ராஜீவ் காந்தியோடு இறந்தவர்களது குடும்பத்தினர் இன்னும் சோகத்தில் இருக்கிறார்கள்.
சோனியா - ராகூல் - பியங்கா யாருக்கும் ராஜீவ் கொலையில் கோபம் தெரியவில்லை, "மன்னித்துவிட்டோம்" என்கிறார்கள்.
INKredible India: The story of 1991 Lok Sabha election - All you need to know
https://zeenews.india.com/lok-sabha-general-elections-2019/inkredible-india-the-story-of-1991-lok-sabha-election-all-you-need-to-know-2193613.html
ராஜீவ் கொலையால் யார் லாபம் அடைந்தது?
History Revisited: How political parties fared in 1991 Lok Sabha election
https://zeenews.india.com/lok-sabha-general-elections-2019/history-revisited-how-political-parties-fared-in-1991-lok-sabha-election-2193229.html?fbclid=IwAR0I4h2_N9lnC9siL36H97xcrUkh1G-9VA5d6iSpB-xWefkbBsX2Wq1mO50


 
ராஜீவ் குறித்த செய்திகள் இதற்கு அடுத்த இதழான ஜூன் 5 - 20 தேதியிட்ட இதழில்தான் வெளியாகின. அது தமிழ் இந்தியா டுடேவின் 20வது இதழ். "நான் இளைஞன். எனக்கும் கனவு ஒன்று உண்டு" என்ற வாசகங்கள் அதில் இடம்பெற்றிருந்தன. ஓவல் வடிவில் ராஜீவின் புகைப்படம் அதில் இடம்பெற்றிருந்தது.
அந்த நாட்களில் இந்தியா டுடேவுக்கு மாநிலத்தின் பல பகுதிகளிலும் பெரும் வரவேற்பு இருந்தது. இதழ் வரும் தினத்தன்று மதுரை ரயில் நிலையத்திற்கே போய், ஏஜென்ட்களிடம் நேரடியாக இதழ்களை வாங்கினார்கள்.
எதிர்பார்த்தபடியே இந்த இதழ் மிகப் பெரிய ஹிட். ராஜீவின் கொலை, அவரது இறுதிச் சடங்குகள், அவருடைய தனிப்பட்ட வாழ்க்கை, காங்கிரஸ் கட்சியின் எதிர்காலம் என ஒரு முழுமையான புத்தகத்தைப் போல வெளியாகியிருந்தது அந்த இதழ். மொத்தம் 96 பக்கங்கள். ஆனால், விலை வெறும் ஆறு ரூபாய்தான். அந்த காலகட்டத்தில் மற்ற இதழ்களின் விலை குறைவுதான் என்றாலும், இந்தியா டுடேவில் இருந்த இந்த விலையை மிகக் குறைவானது எனத் தோன்றச் செய்தது.
இந்த ராஜீவ் சிறப்பிதழில் ஒரு புள்ளிவிவரம் தரப்பட்டிருந்தது. அதன்படி பார்த்தால், ஏற்றுமதி 199 சதவீதமும் பங்கு வெளியீடு 193 சதவீதமும் அதிகரித்திருந்தன. தொழில் உற்பத்தி 59 சதவீதம் வளர்ச்சி அடைந்திருந்ததாகக் குறிப்பிடப்பட்டது.
இருந்தாலும், ராஜீவ் தனது பிரச்சாரங்களில் இந்த வளர்ச்சி குறித்துப் பேசாமல், 'ராம ராஜ்ஜியம்' அமைப்பது குறித்துப் பேசிக்கொண்டிருந்தார்.
 




  

No comments:

Post a Comment

மதுரையில் மாநகராட்சி இளம் பெண் ஊழியரிடம் 4 வருடம் உல்லாசமாக இருந்து குழந்தை பிறந்த பின் கழட்டிவிட்ட திருமணமான பாஸ்டர் மீது புகார்.

மதுரையில் பாஸ்டர் செய்த வேலை.. "கணவன் மனைவியாய் வாழ்ந்தோமே".. கமிஷனர் ஆபீசுக்கு ஓடிய மாநகராட்சி பெண்  By Hemavandhana Updated: Wed...