Saturday, May 28, 2022

கருணாநிதி சிலை திறப்பு விழா- தமிழ்த்தாய் வாழ்த்து -அவமதிப்பு??

 தமிழ்த் தாய் வாழ்த்து பாடும் போது எழுந்து நேராக நின்று மரியாதை செய்ய வேண்டும்;  ஆனால் முதல்வர் உரிய மரியாதை கொடுக்காது   பின் பக்கம்  கை வைத்து நின்றது சரியான வழி என ஏற்க இயலாது.
 தமிழர் துறவி முன் அறிவிப்பு இன்றி  தமிழ்த் தாய் வாழ்த்து பாடிட‌ முழு மரியாதையோடு கண்மூடி தியானத்தோடு மரியாதை செய்ததை பல தமிழர் விரோத கும்ப்லகள் அருவருப்பாய் பொய்யாக பழித்தவர்கள் தற்போது வாய் திறக்காவிடில் தாங்கள் சமூக விரோதமாக தூண்டிவிடவே அப்படி பேசினோம்;
  
தமிழ் மீது எங்களுக்கு எந்த மரியாதையும் இல்லை என ஒத்துக் கொள்கின்றனர்.

கலைஞர் சிலை திறப்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்தின்போது அமர சென்ற துரைமுருகன்

 - By Noorul Ahamed Jahaber Ali Published: Saturday, May 28, 2022, 
சென்னை: கருணாநிதி சிலை திறப்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடத் தொடங்கியபோது அமர சென்ற அமைச்சர் துரைமுருகனை பின்னால் நின்ற அதிகாரி தடுத்து நிறுத்தினார். 
 சென்னை அண்ணா சாலையில் உள்ள ஓமந்தூரார் அரசினர் தோட்டம் அருகே அமைக்கப்பட்ட 16 அடி உயர கருணாநிதியின் வெண்கல சிலையை குடியரசு துணைத் தலைவர் வெங்கய்யா நாடு திறந்துவைத்தார்.
 இந்த அரசு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கருணாநிதியின் குடும்பத்தினர்,  அமைச்சர்கள், திமுக முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 
 முன்னதாக இந்த விழாவில் தொடக்கத்தில் தேசிய கீதமும், அதனை தொடர்ந்து தமிழ்த்தாய் வாழ்த்தும் பாடப்பட்டது. தேசிய கீதம் பாடப்பட்டபோது மேடையில் அமர்ந்திருந்த இந்திய குடியரசு துணை தலைவர் வெங்கய்யா நாயுடு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், தலைமைச் செயலாளர் இறையன்பு ஆகியோர் எழுந்து நின்று மரியாதை செலுத்தினர். 
அதனை தொடர்ந்து சில வினாடிகள் இடைவெளியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது.  நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரியாமல் இருக்கையில் அமர சென்றார். அப்போது அவர் பின்னால் நின்றுகொண்டிருந்த அதிகாரி அவரை தடுத்து நிறுத்தினார்.
 உடனே சுதாரித்து நின்றாலும், தடுமாற்றத்துடனே 2 முறை பின்னால் சென்று நாற்காலியில் கைவைத்தார் துரைமுருகன். 

3 டன் களிமண் மற்றும் மற்றும் 2 டன் வெண்கலத்தால் தயாரிக்கப்பட்டு உள்ள இந்த சிலையை சிற்பி தீனதயாளன் வடிவமைத்துள்ளார். 
ரூ.1.17 கோடி மதிப்பில் கருணாநிதி சிலை திறக்கப்பட்டுள்ளது. 

கருணாநிதியின் தொல்காப்பிய பூங்கா நூலில் தமிழ் பிழைகள் - தமிழ் கொலை

முதலமைச்சராய் இருந்த போது கருணாநிதியின் தொல்காப்பிய பூங்கா நூல் வெளியானது. (நன்றி ஆரியத் தமிழன் நரசிம்மன் சுவாமி)
 கருணாநிதி நூல் முழுக்க 'தமிழறிஞர் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழ் இலக்கணப் பிழைகள் இலக்கணக் கொலை   தொல்காப்பிய பூங்காவில் களைகள்' என நூலாய்  வெளியிட்டார், கருணாநிதி நூலில் காமக் கவர்ச்சிப் படங்கள் உள்ளதையும் விமர்சித்தார்

பேராசிரியர் செ.வீரபாண்டியன்இங்கே காட்டுவது - 'தொல்காப்பிய பூங்காவில் களைகள்'  நூலாசிரியரின் வாழ்வானது, வரலாற்றுசான்றாகி விட்டது. வைரமுத்து போன்ற இன்னும் பல பிரபலங்களுக்கு, தமிழ் மீது  நேர்மையான அக்கறை இருந்திருந்தால்;

'தொல்காப்பிய பூங்காவில் களைகள்' நூல் எழுதிய தமிழ் அறிஞர் நக்கீரன்(http://www.connemara.tnopac.gov.in/cgi-bin/koha/opac-detail.pl?biblionumber=350802 );

சாகும் வரை, தமது ஆர்வலர்களின் பாதுகாப்பில் வாழ்ந்திருக்க வேண்டியநெருக்கடியானது, அவருக்கு வந்திருக்குமா?
https://tamilsdirection.blogspot.com/2018/06/normal-0-false-false-false-en-us-x-none.html









No comments:

Post a Comment

Pakistan' Major Exports -Terrorism, Donkeys & Beggars

  After terrorism and donkeys, beggars are Pakistan's latest export Ninety per cent of beggars detained in West Asian countries are from...