Tuesday, May 17, 2022

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் முஸ்லிம் படையெடுப்பு போது அதிசயம். எம்ஜிஆர் வியந்த சம்பவம்!

முஸ்லிம் படையெடுப்பு போது மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடந்த அதிசயம்!  MGR வியந்த சம்பவம்!

மாலிக்கபூர் மதுரை நோக்கி படையெடுத்து வருவதை கேள்விப்பட்ட மதுரை மீனாட்சி அம்மன் கோவிலை சேர்ந்த 5 சிவாச்சாரியார்கள், எப்படியாவது நமது கோவிலை காப்பாற்ற வேண்டும், சுவாமி மீது ஒரு அயோக்கியன் கை வைத்து விடக் கூடாது என்று தங்களுக்குள் சபதம் செய்து கொண்டார்கள். சுவாமிக்கு அபிஷேகமெல்லாம் செய்து முடித்து, கண்ணில் நீருடன் மீண்டும் உன்னை எப்போது காண்போம் சர்வேசா, சுந்தரேசா என்று கதறிய படியே கர்ப்பகிரக்கத்திற்குள்ளேயே ஒரு கல் திரை எழுப்பினார்கள். வெளியே இன்னொரு மூர்த்தியை பிரதிஷ்டை செய்தார்கள்.  


விஜயநகர சாம்ராஜ்யம் முகலாயர்களை துவம்சம் செய்த பின் கல் திரை முழுவதும் இடித்து உள்ளே சென்று பார்த்தால் உள்ளே 48 ஆண்டுகள் கழித்து எந்த பூஜையும் இல்லாமல், விளக்கு எரிந்து கொண்டு  ருந்தது. சுவாமியின் மீது சாற்றிய சந்தன கலபம் ஈரமாக இருந்தது. பூக்கள் வாடாமல் இருந்தன. கர்ப்பகிரகத்தில் உள்ளே இருந்து வரும் அந்த வாசம் அப்படியே இருந்தது!!!! 
 
48 ஆண்டுகள் கழித்து எந்த பூஜையும் இல்லாத நிலையில் உள்ளே அனைத்தும் மூடும் போது இருந்த படியே இருந்தது. திளைத்தனர் பக்தியில் அனைவரும்.

No comments:

Post a Comment

காலில் செருப்பு, நெருப்பு இல்லத அடுப்பு பொங்கல் போட்டோ ஷூட் செய்த தமிழர் விரோத்கள்- மனிதர்களா

 காலில் செருப்பு, நெருப்பு இல்லத அடுப்பு பொங்கல் போட்டோ ஷூட் செய்த தமிழர் விரோத்கள்- மனிதர்களா