Tuesday, May 31, 2022

ஒரு கன்னத்தில் அடித்த போது மறு கன்னம் ஏசு காட்டவே இல்லை

 ஒரு கன்னத்தில்  அடித்த போது மறு கன்னம் ஏசு காட்டவே இல்லை

ஏசு சொன்னதாக மத்தேயு சுவிசேஷக் கதையில் 

மத்தேயு 5: 38“கண்ணுக்குக் கண். பல்லுக்குப் பல்’ [f] என்று கூறப்படுவதை நீங்கள் அறிவீர்கள்.39ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன், தீயவனை எதிர்க்காதீர்கள். ஒருவன் உங்கள் வலது கன்னத்தில் அறைந்தால், அவனுக்கு உங்கள் மறு கன்னத்தையும் காட்டுங்கள். -ஏசு 

தெய்வப் புலவர் திருவள்ளுவ நாயனர் மிகத் தெளிவாகக் கூறினார்

சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்                                                                                                                                      சொல்லிய வண்ணம் செயல்   (அதிகாரம்:வினைத்திட்பம் குறள் எண்:664)


 யோவான் சுவிசேஷக் கதையில் -

 யோவான் 18:22 ஏசு இவ்வாறு சொன்னபோது, அவர் அருகிலே நின்றிருந்த சேவகரில் ஒருவன் அவரை ஓர் கன்னத்தில் அறை அறைந்தான். அவன், “நீ யூதத் தலைமைப் பாதிரியிடம் அந்த முறையில் பதில் சொல்லக்கூடாது” என்று எச்சரித்தான். 23 அதற்கு ஏசு, “நான் ஏதாவது தப்பாகப் பேசியிருந்தால் எது தப்பு என்று இங்கு இருக்கிற எல்லாருக்கும் சொல். ஆனால் நான் சொன்னவை சரி என்றால் பிறகு ஏன் என்னை கன்னத்தில் அடிக்கிறாய்?” என்று கேட்டார். 

ஏசு வெறும் வாய்ச்சொல் வெத்து வேட்டு என்பது தெளிவாகும்.

சுவிசேஷக் கதைகளில் மூல கிரேக்க ஏடுகளை சரி பார்த்து பதிப்பிடும் குழுவினைச் சேர்ந்த  நார்த் கரோலினா பல்கலைக் கழக  பேராசிரியர் பார்ட் எர்மான் நமக்கு கொடுத்த பதில் 

தேவப்ரியா – பேராசிரியர் பார்ட் எர்மான் உரையாடல்

James A. Gray Distinguished Professor of Religious Studies at the University of North Carolina at Chapel Hill.


பேராசிரியர் பார்ட் எர்மான் நமக்கு கொடுத்த பதில்படியாக, ஏசு கதைகளை முதலில் வரைந்த மாற்கு சுவிசேஷக் கதாசிரியரோ அல்லது யோவான் சுவிசேஷக் கதாசிரியரோ நேர்மையாக நிகழ்வுகளை தரவில்லை, தன்னிச்சையாக மாற்றினர்.

No comments:

Post a Comment

சசி தரூர்: ‘சட்டவிரோத இந்திய குடியேறிகளை நாடு கடத்த அமெரிக்காவுக்கு முழு உரிமை உண்டு.

Shashi Tharoor: ‘US is entirely entitled to deport illegal Indian immigrants… I’m only unhappy they sent them in military plane’ Senior Cong...