Tuesday, May 31, 2022

தமிழர் நல‌னுக்காக பாடுபடுவோரை துன்புறுத்தும் தமிழர் விரோத திமுக அரச பயங்கரவாதம்

தமிழகத்தில் திமுக் ஆட்சி வந்த பின்பு - மக்கள் பெரும் தொல்லை, கஷ்டம் அதிகமாகி உள்ளது. ஆனால் திமுக் ஆட்சி ஊடகங்களினை அன்பளிப்பு, கையூட்டு மூலமாகவும். விளம்பரஙகள் நிறுத்தப்படும் எனும் மிரட்டல் மூலமாகவும் பல நிகழ்வுகளை அமுக்கப்பட்டுவிட்டன.

இவற்றைத் தாண்டி சிலபல் யூ-டுயுப் மற்றும் பொது நல வழக்கு போடுவோர் மூலம் பல நல்லது நடந்தன. அதனாலே சமூகத்தில் தேசியவாத சிந்தனை உள்ள சமூக வலை தள செயல்பாட்டாளர்களை - கிஷோர் கே சுவாமி, கல்யாணராமன், மாரிதாஸ் தற்போது கார்த்திக் கோபிநாத் கைதுகள் கூறுகின்றன.

தகவல் கேட்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க சட்டத்தில் வழிவகை உள்ளதா. தகவல் கேட்கும் மனுதாரருக்கு நீதி வழங்கும் இடத்திலும் தவறு செய்பவர்களை தண்டிக்க வேண்டிய இடத்திலும் இருக்கும். தகவல் ஆணையர் தன் கடமையை உணர்ந்து சட்டப்படி செயல்பட வேண்டும்.  தகவல் கோருவது எங்கள் உரிமை,அவைகளை கொடுக்க வேண்டியது அவர்கள் கடமை.  இவைகளை கண்காணிக்க வேண்டியது உங்கள் பொறுப்பு

 சேலத்தைச் சேர்ந்த அத்திக்குட்டை திரு.ராதாகிருஷ்ணன், பல விபரங்களை தகவல் அறியும் சட்டம் மூலம் பெற்று வழக்கு போட்டதனால் இந்து சமய அறநிலையத்துறை நிலங்கள், சொத்துக்களை மீட்டு உள்ளது.

உதாரணமாக சென்னை சொகுசு குயின்ஸ்லாந்து பொழுதுப்போக்கு பூங்கா உள்ளது கோவில் சொத்து எனக் கண்டு பிடிக்க, அதை ஆக்கிரமித்து உள்ள இத்தாலிய சோனியா காங்கிரஸ்  ஸ்ரீவைகுண்டம் சட்டசபை உறுப்பினர் கிறிஸ்துவ அமிர்தராஜ் மற்றும் தாயார் பாஸ்டர் நளினி செல்வராஜ்   நிறுவனத்திடம் இருந்து மீட்க வழக்கு நடத்தி வருகிறார்,

அரசு தரப்பு வாதத்தை ஏற்ற நீதிபதி, குயின்ஸ்லேண்ட் நிறுவனம் ஆக்கிரமித்துள்ள நிலத்தை நான்கு வாரங்களில் மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டார். அத்துடன் கோயில் நிலத்தை ஆக்கிரமித்த குற்றத்திற்காக குயின்ஸ்லேண்ட் நிறுவனம், ஒரு கோடியே 8 லட்சம் ரூபாயை வருவாய் துறைக்கு செலுத்த வேண்டும். அதேபோல் கோயிலுக்கு ரூ.9.5 கோடி ரூபாயை இழப்பீடாக செலுத்த வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.
நாம் தற்போது 2022 மே மாதம் முடிவு நாளில் உள்ளோம்; 7 மாதங்கள் -30 வாரங்கள் ஆகியும் நிலம் மீட்பு, பாக்கி 9.5 கோடி வசூல் பற்றிய விபரம் ஏதும் வரவில்லை.
தமிழக அரசு, சில ஆளுங்கட்சி நண்பர்கள் மூலமாக அத்திக்குட்டை திரு.ராதாகிருஷ்ணன் வழக்கறிஞர் பிழைகள் மூலம் அவரை முடக்கவும், அவரை எதிர்த்து பல வழக்குகள் போடுகின்றனர்.
https://thecommunemag.com/queensland-and-st-johns-school-sitting-on-temple-lands-flourish-while-the-temples-languish/
https://www.thehindu.com/news/national/tamil-nadu/queensland-amusement-park-cant-squat-on-public-property-without-paying-a-penny/article37061259.ece
https://tamil.asianetnews.com/tamilnadu-chennai/chennai-high-corut-dismiss-queensland-plea-in-land-aquistion-r1osxw
காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோவில்  பூந்தமல்லி ரோடு நிலத்தில் இருந்த சீதா கிங்ஸ்டன் மெட்ரிகுலேசன் பள்ளி 13 கோடி வாடகை தராமல், அதை துறை எடுத்துள்ளது, ஆனால் பழைய வாடகை பாக்கி வசூல் பற்றி செய்தி வரவே இல்லை. அதை நடத்தியது கல்வி குழுமம் ஏன் வசூல் செய்யவில்லை, இவற்றை உறுதி செய்ய தேவை  
 https://www.tribuneindia.com/news/nation/tn-minister-tasks-officials-to-retrieve-nearly-100-grounds-of-land-in-chennai-owned-by-temple-267892
இதே போல சாலிகிராமத்தில் வடபழனி முருகன் கோவிலிற்கு சொந்தமான நிலம் 5.5 ஏக்கர் 300 கோடி மதிப்பு மீட்கப் பட்டது எனச் சொல்லப்படுகிறது. ஆனால் இந்த  நிலம் 2008/ல் அன்றைய அரசு/கோவில் நிர்வாகத்தால்  Registered Lease Deed குத்தகை பதிவு செய்து தரப்பட்டது. ஆனால் ஒரு பைசா கூட கோவிலிற்கு குத்தகை வரவில்லை, மீட்கப்பட்டது என மட்டுமே செய்தி. Registered Lease Deed இதன் பொருள் என்ன மதிப்பு என்ன?
தகவல் உரிமை சட்டம் மூலம் சொந்த முயற்சியால் தகவல் பெறுவதைத் தடுக்க முயல்வது தமிழருக்கே நஷ்டம். நாம் மேலே பார்த்த இடங்களின் மதிப்பு கிட்டத்தட்ட 1000 கோடி, மீட்கப் பட்டதாக பெரும் விளம்பரம்- பின்னணி வாடகை வசூல் இல்லை. HRCE துறையால் வாடகைக்கு விட்டவர்களை வெளியேற்றம் என்பது மீட்பு ஆகுமா?

 தமிழர் நல‌னுக்காக பாடுபடுவோரை துன்புறுத்தும் தமிழர் விரோத திமுக அரச பயங்கரவாதம்  

No comments:

Post a Comment