Tuesday, May 17, 2022

திருவாலங்காடு கோவில் மண்டபம் அமைக்கும் இடம் பன்றி பண்ணையாக மாறிய கொடுமை

திருவாலங்காடு கோவில் மண்டபம் அமைக்கும் இடம் பன்றி பண்ணையாக மாறிய  கொடுமை 

திருவாலங்காடு : ஹிந்து சமய அறநிலையத் துறை சார்பில், திருமண மண்டபம் அமைக்க தேர்வு செய்யப்பட்ட நிலம், பன்றி பண்ணையாக மாறி உள்ளது

திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோயில் திருநாவுக்கரசர், சம்பந்தர், சுந்தரர் ஆகியோரால் தேவாரம் பாடல் பெற்ற சிவாலயமாகும். பாடல் பெற்ற தலங்களில் தொண்டை நாட்டுத் தலங்களில் ஒன்றாகும். 

 சிவபெருமான் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். நடராஜப்பெருமான் நித்தமும் நடமாடும் ஐம்பெரும் அம்பலங்களில் ரத்தின சபை ஆகும். இறைவனால் அம்மையே என அழைக்கப்பெற்று சிறப்பிக்க பெற்ற காரைக்கால் அம்மையார், தன் தலையால் நடந்து வந்து நடராஜரின் திருவடியின் கீழிருந்து, சிவனின் ஆனந்த இன்ப வெள்ளத்தில் திளைத்திருக்கும் திருக்கோயில் இது. அம்மனின் சக்தி பீடங்களில் இது காளி பீடம். 

மேலும் படிக்க‌  இந்து சமய அறநிலையத்துறை துணை/இணை ஆணையர்கள் மேல் நீதிமன்றத்தில் கிரிமினல் வழக்குகள் சில‌

சென்னை பல்லாவரம் 1400 ஆண்டுகள் பழமையான பஞ்சபாண்டவ மலை குகைக் கோவில் தர்காவாக மாற்றப்பட்டு உள்ளது

மாமன்னர் ராஜராஜன் பெயரை கிழக்கு கடற்கரை சாலைக்கு வைப்பது தமிழர்க்கு வரலாற்று பெருமை

திருத்தணி முருகன் கோவிலின் உபகோவிலாக திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமாக 7,000 சதுர அடி நிலம், சர்க்கரை ஆலை எதிரே உள்ளது.இந்த நிலத்தில், 2.35 கோடி ரூபாயில், 400 பேர் அமரும் வகையில் திருமண மண்டபம் அமைக்க, 2020ம் ஆண்டு, ஹிந்து அறநிலைய துறை ஆணையரால் நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது.இதற்காக இரண்டு ஆண்டுகளுக்கு முன் நிலம் வரையறுக்கப்பட்டு வேலி அமைக்கப்பட்டது. 

இந்நிலையில், அந்த வேலி அமைக்கப்பட்ட இடத்தில், சமூக விரோதிகள் சிலர் வேலியை நீக்கி 20க்கும் மேற்பட்ட பன்றிகளை உள்ளே விட்டு பண்ணையில் வளர்ப்பதை போல வளர்த்து வருகின்றனர்.ஹிந்து அறநிலைய துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து, விரைவில் மண்டபம் கட்ட ஏற்பாடு செய்ய வேண்டும் என, திருவாலங்காடு பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
https://m.dinamalar.com/detail.php?id=3030936

No comments:

Post a Comment

SC orders probe into Caste certificates issuance in Tamil Nadu

  ‘Prima facie a huge racket’: SC orders probe into caste certificates issuance in Tamil Nadu A bench comprising Justice JB Pardiwala and Ju...