Monday, May 30, 2022

ஈவெராமசாமியார் திராவிடர் கழக சொத்துக்கள் அரசுடைமை செய்யப்படுமா

ஈவெராமசாமியார் சொத்துகளை அரசுடைமையாக்க பெ.தி.க. கோரிக்கை 

Sutha,  June 14 2010 https://tamil.oneindia.com/news/2010/06/14/periyar-assets-pdk-nationalisation.html
சென்னை ஈவெராமசாமியாருக்கு சட்டப்படியான வாரிசுகள் யாரும் இல்லை என்பதால் அவருடைய சொத்துக்களை அரசுடமையாக்க வேண்டும் என்று பெரியார் திராவிடர் கழகம் கோரியுள்ளது. 
இது குறித்து அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால், சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப் போவதாகவும் அது எச்சரித்துள்ளது.
பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பில் ஈவெராமசாமியாரின் குடியரசு இதழ் கட்டுரை தொகுப்பு வெளியிடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பெரியார் திராவிடர் கழக வழக்கறிஞர் துரைசாமி பேசுகையில்,  1978 ல் திருவாரூர் தங்கராசு பெரியாரின் சொத்துகள் அனைத்து திராவிடர்களுக்கும் சொந்தமானதாக இருக்க வேண்டும் என்று வழக்கு தொடர்ந்தார். அப்போது சட்ட நுணுக்கங்களைப் பயன்படுத்தியதால் அந்த வழக்கு தள்ளுபடியானது. 
பெரியார் தான் உருவாக்கிய பெரியார் சுயமரியாதை பிரசார நிறுவனத்தை சங்கங்களின் சட்டத்தின் கீழ்தான் பதிவு செய்தார். அறக்கட்டளையாக அதை பதிவு செய்யவில்லை. பெரியார் தனது பெயரில் உள்ள சொத்துகளை பத்திரம் மூலம் அந்த அமைப்புக்கு மாற்றவில்லை. 
அவரது பெயரில் சென்னை பெரியார் திடல், ஈரோடு பெரியார் மன்றம், திருச்சி பெரியார் மாளிகை உள்ளிட்ட சொத்துகள் உள்ளன. அவருக்கு சட்ட வாரிசுகள் இல்லாததால் இந்து வாரிசுரிமைச் சட்டப்படி, அவை தமிழக அரசுக்கு போய்ச் சேர வேண்டும். எனவே, அரசு அவரது பெயரில் உள்ள சொத்துகளை அரசுடைமையாக்கப்பட வேண்டும்.
 கோவையில் 5 ராணுவ லாரிகளுக்கு தீவைப்பு - வீரர்கள் மீது தாக்குதல் ஜூன் 30 ம் தேதிக்குள் அதைச் செயல்படுத்த வேண்டும். அப்படியில்லை என்றால் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும் என்றார் துரைசாமி.

No comments:

Post a Comment

காலில் செருப்பு, நெருப்பு இல்லத அடுப்பு பொங்கல் போட்டோ ஷூட் செய்த தமிழர் விரோத்கள்- மனிதர்களா

 காலில் செருப்பு, நெருப்பு இல்லத அடுப்பு பொங்கல் போட்டோ ஷூட் செய்த தமிழர் விரோத்கள்- மனிதர்களா