Monday, May 30, 2022

உக்ரைன் நாட்டில் மருத்துவ மாணவர் மீட்பு செலவில்- கருணாநிதி பெயரில் கல்லூரி கோவில் நிலம் ஆக்கிரமித்த டிரஸ்டி கணவர் நிறுவனம்

  நண்பர் Yuvaraj Ramalingam RTI மூலம் தமிழக அரசு உக்ரைன் மீட்பு பணிகளுக்காக செலவு செய்த விவரத்தை கேட்டு பெற்று வெளியிட்டார்.  பணம் பெற்ற ஒரு நிறுவனத்தின் பெயர், Serendip Sourcing Private limited; 
இந்த நிறுவனம் Dr. கோகுல் என்பவருடயது. இவர் திமுக மருத்துவ குழு செக்ரட்டரியாக இருப்பவர். இவரது மாமனார் கோவை திமுக பொங்கலூர் பழனிச்சாமி...
பொங்கலூர் பழனிச்சாமிக்கு சொந்தமான கலைஞர் கருணாநிதி இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி கல்லூரி, கோவை அருகே பாப்பம்பட்டி பிரிவு பகுதியில் 2008 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்தக் கல்லூரி, விஜயலட்சுமி பழனிச்சாமி சாரிடபிள் டிரஸ்ட் மூலமாக நடத்தப்படுகிறது.  இந்தக் கல்லூரியின் நிர்வாகத்தை அமைச்சரின் மகளும், நிர்வாக அறங்காவலருமான வித்யா கோகுல் கவனித்து வருகிறார்.
https://www.hindutamil.in/news/tamilnadu/12185-50.html
https://www.newindianexpress.com/states/tamil-nadu/2014/aug/09/DMK-Man-Encroached-on-Temple-Land-to-Build-College-Hindu-Outfit-645738.html



கோவில் நிலத்தை ஆக்கிரமித்து கல்லூரி - கோவையை அடுத்த கண்ணம்பாளையம் பகுதியில் உள்ள கலைஞர் கருணாநிதி தொழில்நுட்ப கல்லூரி
(Kalaignar Karunanidhi Institute of Technology)  
   ஊரகத் தொழில் மற்றும் கால்நடைத் துறை அமைச்சராக இருந்த திமுக பொங்கலூர் பழனிச்சாமிக்கு சொந்தமான கலைஞர் கருணாநிதி இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி கல்லூரி, கோவை அருகே பாப்பம்பட்டி பிரிவு பகுதியில் 2008 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்தக் கல்லூரி, விஜயலட்சுமி பழனிச்சாமி சாரிடபிள் டிரஸ்ட் மூலமாக நடத்தப்படுகிறது. தங்களுக்கு சொந்தமான நிலத்தில் இந்தக் கல்லூரியைக் கட்டி இருக்கிறாராம் பழனிச்சாமி. இந்தக் கல்லூரியின் நிர்வாகத்தை அமைச்சரின் மகளும், நிர்வாக அறங்காவலருமான வித்யா கோகுல் கவனித்து வருகிறார். ''கருணாநிதிக்கு மிக நெருங்கிய வட்டத்தில் இருந்துகொண்டு, அந்த செல்வாக்கைப் பயன்படுத்தி வரும் அமைச்சர்கள் யாரும், நன்றிக்கடனாகக்கூட கருணாநிதியின் பெயரை வைக்கவில்லை. ஆனால், பொங்கலூரார்தான் தலை​வரின் பெயரைச் சூட்டி தன்னுடைய நன்றி உணர்ச்சி​யைக் காட்டி இருக்கிறார்...'' என்று பொங்கலூராரின் கோஷ்டி பெருமை அடித்துக்கொள்கிறது.
'கனிமொழிக்கு சொந்தமானது இந்தக் கல்லூரி. பொங்கலூர் பழனிச்சாமியின் பெயரை இதற்குப் பயன்படுத்திக்கொண்டார்கள்!’ என்று சொல்பவர்களும் உண்டு. நீலகிரி தொகுதியின் எம்.பி-யாக ஆ.ராசா வந்து உட்கார்ந்த சில காலங்களிலே, இந்தக் கல்லூரி அவரது பெயருக்கு மாற்றப்பட்டுவிட்டது என்ற லெவலுக்குக்கூட லோக்கல் தி.மு.க-வுக்குள் புகைந்தது. ஆனால், பொங்கலூரார் தரப்போ... எல்லாவற்றையும் அடியோடு மறுத்துச் சிரிக்கிறது. தமிழக முன்னாள், இன்னாள் அமைச்சர்களில் நான்கில் ஒரு பங்கு மந்திரிகள் கல்வித் தந்தையராக வளர்ந்திருக்​கிறார்கள். ''தமிழகத்தில பொற்கால ஆட்சி!'' என்று சொல்பவர்களின் பொற்காலம் என்பது ஆள்பவர்களுக்கு என்று மாத்திரம் இல்லாமல், ஏழை எளியவர்களுக்கு என்றைக்கு நற்காலம் பிறக்கிறதோ அதுதான் பொற்காலமாகும்!'' திராவிட கட்சிகளின் ஆட்சியில் ஜெகத்ரட்சகன், ஜேப்பியார், ஏ.சி.சண்முகம், வேலூர் விஸ்வநாதன் போன்றவர்கள் எம்.ஜி.ஆரின் கடைக்கண் பார்வையால் கல்வி நிறுவனங்களை அமைத்து வளர்ந்தவர்கள் என்றால், கருணாநிதியின் ஆசீர்வாதம் காரணமாக... வீரபாண்டி ஆறுமுகம், துரைமுருகன், பொன்முடி, கே.என்.நேரு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், பொங்கலூர் பழனிச்சாமி ஆகியோர் பரிணமித்தார்கள். சேலம், திருச்சி, விழுப்புரம், வேலூர், கடலூர், கோவை நகர்ப் பகுதியில் வலம் வந்தால், இவர்களது பிரமாண்டமான கல்லூரிக் கட்டடங்களைத் தரிசிக்கலாம்.இந்தக் கட்டடங்களை எல்லாம் பார்த்தால் யாருக்குப் பொற்காலம் என்பது சொல்லாமலே புரிகிறது! தமிழ் இந்து தேசம் Hindurastra4@gmail.com

No comments:

Post a Comment

கீழடி பொதுக் காலத்தின் ஆரம்ப ஆண்டுகளில் வியாபாரிகளின் சிறிய குடியிருப்பாக இருந்திருக்கலாம்

  Keeladi! Vaigai is a small river, rain dependent. It could not have sustained a large community in that age. It could not have had the re...