Monday, May 30, 2022

திமுக அரசின் தமிழர் விரோதம் - கார்த்திக் கோபிநாத் கைது அரச பயங்கரவாதம்

 இளைய பாரதம் எனும் பெயரில் காணொளி யூ-டுயுப் மூலம் உண்மைச் செய்திகள் தினமும் மக்களிடம் கூறுபவர் திரு. கார்த்திக் கோபிநாத்.

பல மாதங்கள் முன்பு பெரம்பலூர் அருகே உள்ள "சிறுவாச்சூர் மதுர காளியம்மன் கோவிலின்" உப கோவிலான 'பெரியாண்டவர் கோவில்' புதுப்பித்து கும்பாபிஷேகம் செய்து ஒரு மாதத்திற்கு உள்ளே மிகப் பெரிய சுடுமண் சிலைகள் ஒரு கும்பலினால் உடைக்கப் பட்டது. அந்த நிலையில் அந்தக் கோவிலை மீண்டும் புதுப்பிக்க பல நண்பர்கள் சேர்த்து நாமே செய்வோம் என "மக்கள் கூட்டு பஙகளிப்பு முறை"யில் (Crowd funding) வசூல் செய்ய கோரிக்கை வைத்தார்.
10 லட்சம் கேட்ட நிலையில் 3 நாட்களுள் 33லட்சம் வசூல் ஆகிட, போதும் என நிறுத்தினார். இந்து சமய அறநிலையத்துறை அனுமதிகள் தரப் படாததால் மொத்த பணமும் அவர் பணம் போடச் சொன்ன "மைலாப்  Milaap  உலாவியிடம்" தான் உள்ளது.
ஸ்தபதிகள் மீண்டும் சிலைகள் வடிக்க தொகையை நண்பர்களிடம் புரட்டின தந்துள்ளார். முறையாக அனுமதி பின்பே உலாவியின் சேமிப்பு தொடுவேன், மேலும் ஒவ்வொரு பைசாவிற்கும் முறையான கணக்கு வைத்து வெளியிட உறுதி தந்துள்ளார்.

மூன்று முறை கோவில் சிலைகளை உடைத்த திராவிட சமூக விரோதிகள் பிடித்து கைது செய்யவில்லை.

ஒரு இடதுசாரியும் பல மோசடி பின்னணி கொண்ட பியூஷ் மானுஷ் என்பவர் புகாரில் கைது என்பது பாசீச திராவிட அரச பயங்கரவாதம்

 
திமுக மீது  விமர்சனங்களை வைத்து வருபவர் என்ற ஒரே காரணத்திற்காக Ilaya Bharatham யூ ட்யூப் சேனலை நடத்தி வரும் கார்த்திக் கோபிநாத் அராஜகமாக தமிழக காவல் துறையால் கைது செய்யப்பட்டிருக்கிறார்.  கருத்துச் சுதந்திரத்தின், ஜனநாயகத்தின் குரல்வளையை நசுக்கும் இந்த செயலை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

பாஜகவின் கல்யாணராமன், Maridhas M, Kishore K Swamy அடுத்து இப்போது கார்த்திக் கோபிநாத் என்று இந்திய தேசியத்திற்கும், தமிழ் பண்பாடு பாரம்பரியம் மீது நம்பிக்கையோடான  நிலைப்பாடு கொண்ட ஊடக செயல்பாட்டாளர்கள் ஒவ்வொருவரையும்  முடக்க நினைக்கும் திமுக அரசின் பாசிஸ்டு மனப்பான்மை தான் இதில் வெளிப்படுகிறது.

No comments:

Post a Comment

திமுக ஆட்சியில் தினமும் 70 லட்சம் பாட்டில்கள் வைன்சாராயம் விற்பனை;ரூ250 கோடிகள் - ஆண்டிற்கு ரூ.6 லட்சம் கோடிகள்

திமுக ஆட்சியில் தினமும் 70 லட்சம் பாட்டில் வைந்சாராயம் விற்பனை https://minnambalam.com/tamil-nadu/daily-sale-of-70-lakh-liquor-bottles-judge...