முதியவர் நிலத்தை ஆக்கிரமித்து சர்ச்; 4 வாரங்களில் அகற்ற ஐகோர்ட் உத்தரவு
https://m.dinamalar.com/detail.php?id=3040495
ஆவணங்களில் திருத்தம்
நில உச்சவரம்பு சட்டத்தின் கீழ், என் சகோதரரின் 1 ஏக்கர் நிலம் கையகப்படுத்தியதை எதிர்த்த மனுவை, உயர் நீதிமன்றம் விசாரித்தது. நிலம் கையகப்படுத்தலை ரத்து செய்து, வருவாய் ஆவணங்களில் திருத்தம் மேற்கொள்ள உத்தரவிட்டது. இதற்கிடையில், சட்டவிரோதமாக தனசேகரன் மற்றும் பால் மோசஸ், இடத்தை ஆக்கிரமிப்பு செய்து, 'சர்ச்' கட்டினர். இவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கோரினேன்; எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே, சட்டவிரோத ஆக்கிரமிப்பு மற்றும் அனுமதி பெறாமல் மேற்கொண்ட கட்டுமானங்களை அகற்ற, அரசுக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.மனு, நீதிபதிகள் டி.ராஜா, சவுந்தர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
தகுதி இல்லை
மனுதாரர் சார்பில், வழக்கறிஞர் எம்.மகாராஜா ஆஜராகி, ''இடத்தை காலி செய்து ஒப்படைக்க, லோக் அதாலத் தீர்ப்பு அளித்தது. அதை எதிர்த்து, பால் மோசஸ் தாக்கல் செய்த வழக்கும் முடிக்கப்பட்டு விட்டது,'' என்றார்.பால் மோசஸ் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், 'இந்த வழக்கை தொடர, மனுதாரருக்கு தகுதி இல்லை' என்றார்.இரு தரப்பு வாதங்களுக்கு பின், நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:நிலத்தை ஒப்படைக்கக்கோரிய மனுதாரரின் மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், மூன்று மாதங்களில் நிறைவேற்ற உத்தரவிட்டுள்ளது. சோழிங்கநல்லுார் தாசில்தார் நேரில் ஆய்வு செய்து, இடத்துக்கான பட்டாவை வழங்கி உள்ளார். எனவே, மனுதாரர் தான் இடத்தின் உரிமையாளர் என்பது தெளிவாகிறது.லோக் அதாலத்தில் சமரசம் ஏற்பட்டு, இடத்தை காலி செய்வதாக தனசேகரன் ஒப்பு கொண்டுள்ளார்.மேலும், தன் ஆட்கள், ஏஜன்ட் யாரும் குறுக்கிட மாட்டார்கள் எனவும் தெரிவித்துள்ளார். அதனால், வழக்கை நடத்த, பால் மோசஸுக்கு சட்டப்பூர்வ உரிமை இல்லை
சட்டவிரோதம்
மனுதாரருடன் சமரசம் ஏற்பட்டு, இடத்தை தனசேகரன் ஒப்படைத்த பின், வாடகைதாரராக இருப்பவருக்கு இடத்தின் உரிமை பற்றி கேள்வி கேட்க தகுதி இல்லை. திட்ட அனுமதி இன்றி, சட்டவிரோதமாக கட்டப்பட்ட கட்டுமானங்களை, நான்கு வாரங்களில் அகற்ற, அரசுக்கு உத்தரவிடப்படுகிறது.இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
No comments:
Post a Comment