Sunday, May 22, 2022

நவ்ஜோத் சிங் சித்து 34 ஆண்டுக்கு முன் சாலை தகராறில் கொலை, ஓராண்டு ஜெயில் தண்டனை

கடந்த 1988 ஆம் ஆண்டு, நவ்ஜோத் சிங் சித்து மற்றும் அவரது நண்பர் ரூபீந்தர் சாந்து ஆகிய இருவரும் பாட்டியாலாவைச் சேர்ந்த குர்மான் சிங் (65) என்பவருடன் கார் பார்க்கிங் தொடர்பாக வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
 வாக்குவாதம் முற்றிய நிலையில் சித்து, குர்மான் சிங்கை காரிலிருந்து வெளியே இழுத்து தாக்கியுள்ளார். இதில் குர்மான் சிங் காயமடைந்தார். பின்னர் அவர் உயிரிழந்தார். கைகலப்பாக ஆரம்பித்த மோதல் உயிர்ப் பலியில் முடிந்தது.
27/12/1988 ல் சித்து மற்றும் அவரது நண்பர் ஒருவரும் ஜிப்சி ஒன்றில் சாலையில் போக்குவரத்திற்கு இடையூறாக நின்றிருந்த போது
பின்னால் வந்த காரில் இருந்த 65 வயது முதியவர் ஒருவர், இவர்களை ஒதுங்கி நிற்க சொல்லி கேட்கையில் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பில் முடிந்தது. சித்து அந்த பெரியவரை கடுமையாக தலையில் தாக்கி விட்டார்.
அதில் சரிந்த பெரியவரை மருத்துவமனையில் சேர்த்த சில மணி நேரத்தில் இறந்து விட்டார்.
இது தொடர்பாக வழக்கு ஒன்று கீழ் கோர்ட்டில் நடந்து செப்டம்பர், 1999 ல் பெரியவர் திடீர் மாரடைப்பால் இறந்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் பலனாக சித்து குற்றவாளியல்ல என்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
பாதிக்கப்பட்டவரின் தரப்பில் இருந்து மேல்முறையீடு செய்யப்பட்ட வழக்கில் பஞ்சாப் உயர்நீதிமன்றம் டிசம்பர், 2006 ல் சித்து மற்றும் அவரது நண்பரும் குற்றவாளிகள் என்று தீர்ப்பாகி மூன்றாண்டுகள் சிறை தண்டனை மற்றும் ஒரு லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
2007 ல் உயர் நீதிமன்ற தீர்ப்பினை எதிர்த்து சித்து உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டு, தீர்ப்பு நிறுத்தி வைக்கப்பட்டது.
மே 15,2018 ல் உச்சநீதிமன்றம்
30 வருட காலத்திற்கு முந்தைய வழக்கு, முன் விரோதம் ஏதும் இல்லாமல், கொலை செய்யும் நோக்கம் இல்லாமல், ஆயுதம் ஏதும் பயன்படுத்தாமல் நடந்த தகராறு போன்றவற்றை கணக்கில் கொண்டு 1000 ரூபாய் அபதாரம் மட்டும் விதித்து சித்து தரப்பை விடுவித்தது.
இந்த தீர்ப்பினை மறு சீராய்வு செய்ய கோரி பாதிக்கப்பட்ட குடும்ப தரப்பு செப்டம்பர் 2018 ல் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இந்நிலையில் 19 மே, 2022 ல் சித்து மற்றும் நண்பருக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளித்து, சிறையில் அடைக்க சொல்லியது உச்சநீதிமன்றம்.
சிறையில் சித்துவிற்கு சகல வசதிகளுடன் சம்பளத்துடன் கூடிய எழுத்தர் பணி வழங்கப்பட்டுள்ளது. அதோடு அவரது அறைக்கே வந்து எழுத்தர் பணிக்கான பயிற்சி மற்றும் கோப்புகள் கிடைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
அது மட்டும் அல்ல சித்துவிற்கு வழங்கப்படும் உணவில் பாதாம், நட்ஸ், ஜீஸ், வெள்ளரி, கொழுப்பு நீக்கப்பட்ட பால், சப்பாத்தி மற்றும் சாதம், மூலிகை டீ என ஸ்டார் ஓட்டல் கவனிப்பும் உள்ளது.
அவரது சாப்பாட்டு மெனுவை பார்த்து பலருக்கும் சிறை செல்லும் ஆசை தோன்றும் அளவிற்கு பட்டியல் இருக்கிறது.
சாதாரண கொலை வழக்கு, கீழ்கோர்ட், உயர்நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் என 32 ஆண்டுகள் கழித்து தண்டனை போல் இல்லாமல், வீட்டிலிருந்தபடி வேலை போன்ற தீர்ப்பு.
என்னத்த சொல்ல.
வைரவேல் சுப்பையா

No comments:

Post a Comment

திருக்குறளை இழிவு படுத்தும் மு.கருணாந்தி உரை

வள்ளுவத்திற்கு உரை எழுதுவர் மூல வெண்பாவிற்கு பொருள் தராமா தான் ஏற்ற நாத்தீக மூட நம்பிக்கைக்கு ஏற்ப பிதற்றுவது பைத்தியக்காரத்தனம் இதோ ஓர் உத...