Wednesday, June 8, 2022

கேரளா முதல்வர் பிணராயி விஜயன் & குடும்பத்தினர் துபாய் தங்கம் கடத்தினர்.

 கேரளா முதல்வர் பிணராயி விஜயன் & குடும்பத்தினர் துபாய் தங்கம் கடத்தினர்.

துபாய் சென்ற பினராயி! கட்டுக்கட்டாக பேக்கில் பணம்! ‘தங்க கடத்தல்’ ஸ்வப்னா சுரேஷ் பரபர வாக்குமூலம்! 

By Rajkumar R Published: Tuesday, June 7, 2022, 

திருவனந்தபுரம் : 2016ஆம் ஆண்டு துபாய்க்கு பயணம் மேற்கொண்ட கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு கட்டுக்கட்டாக ரூபாய் நோட்டுகள் அடங்கிய பை அனுப்பப்பட்டதாக கேரளா தங்க கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஸ்வப்னா சுரேஷ் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார் 


கடந்த ஆண்டு ஜூலை 5-ம் தேதி திருவனந்தபுரம் விமான நிலையத்தில் ஐக்கிய அரபு அமீரக தூதரகத்தின் பெயரில் வந்த பார்சல்களில் 13.82 கோடி மதிப்பிலான தங்க கட்டிகள் கடத்தி வரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. 

இதுவரை தூதரக தொடர்புள்ள எந்தவொரு கடத்தல் நிகழ்வும் இதற்கு முன் இந்தியாவில் நடைபெற்றதில்லை என்பதால் தங்க கடத்தல் சம்பவம் கேரளாவை மட்டுமல்லாமல் நாட்டையே புரட்டி போட்டது.

முதல்வர் பினராயி விஜயன் இச்சம்பவத்தில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தொடர்பு இருப்பதாக வெளியான தகவல் மேலும் பரபரப்பை கூட்டியது. இந்த வழக்கில் முதல்வர் பினராயி விஜயனின் முதன்மை செயலாளராக இருந்த சிவசங்கரன், முதன்மை செயலாளர் அலுவலகத்தில் பணியாற்றிய ஸ்வப்னா சுரேஷ் உள்ளிட்ட 8 பேர் இதுவரை கைது செய்யப்பட்டனர். கேரள ஆளும் கட்சிக்கு தொடர்புடைய இந்த வழக்கை தேசிய பாதுகாப்பு முகமை, சுங்கத்துறை மற்றும் அமலாக்கத்துறை ஆகிய அமைப்புகள் விசாரித்து வருகின்றன. 

கேரளாவில் அதிர்ச்சி பல நாட்கள் இழுபறிக்குப் பிறகு தூதரகம் பெயரை பயன்படுத்தி தங்கம் கடத்திய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஸ்வப்னா சுரேஷக்கு, கேரள மாநில உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வெளியான ஒரு ஆடியோவில், தங்க கடத்தல் வழக்கில் கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கும் தொடர்பு உள்ளதாக கூறும்படி அமலாக்கத்துறையினர் நெருக்கடி கொடுப்பதாக பேசுவதுபோல இருந்தது. 

ஊழல் புகார் கேரள அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்த மத்திய அரசின் தூண்டுதலில் பேரில் விசாரணை அமைப்புகள் முயற்சிகள் செய்வதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குற்றஞ்சாட்டின. இந்நிலையில் 2020ஆம் ஆண்டு திருவனந்தபுரம் தங்கக் கடத்தல் வழக்கில் முதன்மை குற்றவாளியான ஸ்வப்னா சுரேஷ், கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் இந்த ஊழலில் நேரடியாக ஈடுபட்டதாக வாக்குமூலம் அளித்ததாக பரபரப்புத் தகவல் வெளியாகியுள்ளது. 

ஸ்வப்னா சுரேஷ் வாக்குமூலம் முதல் வகுப்பு ஜூடிசியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஸ்வப்னா சுரேஷ் தாக்கல் செய்த வாக்குமூலத்தில், " பினராயி விஜயனின் முன்னாள் முதன்மைச் செயலர் எம்.சிவசங்கர், மனைவி கமலா, மகள் வீணா, கூடுதல் தனிச் செயலர் சி.எம்.ரவீந்திரன், முன்னாள் அதிகாரி நளினி நெட்டோ, முன்னாள் அமைச்சர் கே.டி.ஜலீல் ஆகியோரின் பெயர்களும் இந்த வாக்குமூலத்தில் இடம்பெற்றுள்ளதாகவும், 2016ஆம் ஆண்டு துபாயில் இருந்த முதல்வர் பினராயி விஜயனுக்கு ரூபாய் நோட்டுகள் அடங்கிய பேக்கேஜ் அனுப்பப்பட்டதாக குற்றம் சாட்டிய அதிர்ச்சி தகவலை கூறியுள்ளார்.

 துபாய் பயணம். 2016இல் முதல்வர் பினராயி விஜயன் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் பயணத்தில் இருந்தபோது , ஸ்வப்னா சுரேஷ் துணைத் தூதரகத்தில் செயலாளராக இருந்ததால் முன்னாள் முதன்மைச் செயலர் சிவசங்கர் அவரை முதலில் தொடர்பு கொண்டு முதல்வர் தனது பைகளில் ஒன்றை எடுக்க மறந்துவிட்டதாகவும், அதை உடனடியாக துபாய்க்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்றும் தன்னிடம் கூறினார். தூதரகத்தில் உள்ள தூதரக அதிகாரி மூலம் பையை முதலமைச்சருக்கு அனுப்பினோம். அதனை தூதரகத்திற்கு கொண்டு சென்றபோது அதில் கரன்சி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது என்று ஸ்வப்னா சுரேஷ் கூறியதாக செய்திகள் வெளியாகியுள்ளன.   https://tamil.oneindia.com/thiruvananthapuram/swapna-suresh-arrested-in-kerala-gold-smuggling-case-has-given-a-sensational-confession/articlecontent-pf704445-461319.html

No comments:

Post a Comment

முதலாளியோடு செக்ஸ் வைத்து ரூ.15லட்சம் (தன் முதல் மனைவிக்கு) பெற மறுத்த 2ம் மனைவியை முத்தலாக் செய்த மும்பை முஸ்லிம் ஐடி இஞ்சினியர்

 தனது முதலாளியுடன் உடலுறவு கொள்ள மறுத்ததால் மனைவிக்கு முத்தலாக் கொடுத்த மகாராஷ்டிரா ஆண் க்யூரேட்டட்: வாணி மெஹ்ரோத்ரா நியூஸ்18.காம் கடைசியாகப...