சர்ச்ல் திருமணம் முடியும் முன்பே இந்து திருமணத்தை மறுக்கிறாரோ
July 8, 2022 7:23:42 pm 70 படங்களுக்கு மேல் இயக்கியுள்ள எஸ்.ஏ.சி தற்போது சமுத்திரக்கனி நடிப்பில் நான் கடவுள் இல்லை என்ற படத்தை இயக்கியுள்ளார்.
80-களில் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநகராக திகழ்ந்தவர் எஸ்.ஏ.சந்திரசேகர். முன்னணி நடிகர்கள் பலருடன் இணைந்து பல வெற்றிப்படங்களை கொடுத்து இவர், நடிகர் விஜயகாந்தை நாயகான வைத்து பல படங்களை இயக்கியுள்ளார். தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு ஹிந்தி உள்ளிட்ட மொழிகளிலும் வெற்றி கண்டவர் எஸ்.ஏ.சந்திரசேகர்.
தொடர்ந்து 90-களின் தொடக்கத்தில் தனது மகன் விஜய்யை நாயகனாக்கி சில படங்களை இயக்கினார். தற்போது நடிகர் விஜய் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்துகொண்டிருக்கிறார். 70 படங்களுக்கு மேல் இயக்கியுள்ள எஸ்.ஏ.சி தற்போது சமுத்திரக்கனி நடிப்பில் நான் கடவுள் இல்லை என்ற படத்தை இயக்கியுள்ளார்.
இந்நிலையில், சமீபகாலமாக சமூகவலைதளங்ளில் ஆக்டீவாக இருக்கும் எஸ்.ஏ.சந்திரசேகர், யார் இந்த எஸ்.ஏ.சி.என்ற பெயரில் தனியாக யூடியூப் சேனல் ஒன்றை தொடங்கியுள்ளார். இதில் தனது வாழ்க்கை வரலாறு மற்றும் வாழ்க்கையில் நடந்த சுவாரஸ்யமான சம்பவங்களை பகிர்ந்து வருகிறார்.
அந்த வகையில் தற்போது எஸ்.ஏ.சி வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், ஷோபாவுக்கும் எனக்கும் திருமணமாகி இத்தனை ஆண்டுகள் ஆனாலும் தற்போதுவரை அவள் எனக்கு மனைவி இல்லை என்று கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.
இது தொடர்பாக பேசிய அவர்,
70-களில் இறுதியில் என்க்கு திருமணம் நடைபெற்றது. அப்போது ஒரு சினிமா ஷூ-ட்டிங்கில் எனது மாமா நடிகர் சிவாஜியிடம் எனது திருமணத்திற்கு தலைமை தாக்கி நடத்தி கொடுக்கும்படி கூறினார். அதை ஏற்றுக்கொண்ட சிவாஜியும் தான் வருவதாக சம்மதித்தார்.
அதன்பிறகு நான் திருமண வேலைகளை கவனித்துக்கொண்டே உதவி இயக்குநராக பணியாற்றி வந்ததேன். அந்த காலத்தில் கைலாஷ் சில்க்ஸ் என்ற ஒரு கடை உண்டு ஏழைகள் துணி எடுத்து்ககொண்டு தவனை முறையில் பணம் செலுத்தலாம். அப்போது நான் எனது திருமணத்திற்கு துணி எடுக்கும்போது எனக்கு 50 ரூபாக்கு கோட் ஷோபாவுக்கு 100 ரூபாய்க்கு புடவை தவனை திட்டத்தில் எடுத்தேன்.
திருமணத்திற்கு முதல்நாள் வரை நான் ஷூட்டிங்கில் இருந்தேன். அப்போது சிவாஜி என்னிடம் வந்து என்னடா நாளைக்கு கல்யாணமா என்று கேட்டார். நான் ஆமான்னா என்று சொல்லிவிட்டு கூடவே கமலாம்மா (சிவாஜி மனைவி )தாலி எடுத்துக்கொடுத்தா நால்லாருக்கும் என்று சொன்னேன். அப்போ நான் எடுத்து கொடுத்தா நல்லா இருக்க மாட்டியா என்று கேட்டார்.
சிவாஜி வீட்டுக்கு சென்றால் கமலா அம்மா அன்போது உபசரிப்பார். நான் வருகிறேன் என்றால் சிவாஜி அண்ணாவே கமலா சேகர் வந்திருக்கான் பாரு என்று சொல்லுவார். நான் மட்டுமல்ல சினிமாவில் யார் அந்த வீட்டிற்கு சென்றாலும் கமலாம்மா அன்போடு உபரிப்பார். நல்ல மங்களகரமான முகம் அதனால் அவர் தாலி எடுத்துகொடுத்தால் நன்றாக இருக்கும் என்று மனதில் பட்டதை சொன்னேன்.
அதன்பிறகு சிவாஜி அண்ணாவிடம் உங்கள் தலைமையில் அம்மா தாலி எடுத்து கொடுக்கட்டும் என்று சொன்னேன் அவரும் சம்மதம் தெரிவித்தார். திருமண நாள் வந்தது. எனது அம்மா அண்ணன் எல்லாரும் வந்தார்கள் ஆனால் கடைசி வரை என் அப்பா வரவே இல்லை. கமலாம்மா தாலி எடுத்து கொடுக்க நாள் ஷோபா கழுத்தில் கட்டினேன்.
5 வருடங்கள் காதலித்தேன். இப்போது தாலி கட்டிவிட்டேன். ஆனால் ஷோபா எனது மனைவி இல்லை. திருமணமான முதல்வருடம் விஜய் பிறந்தான் அப்போதும் ஷோபா எனது மனைவி இல்லை.
விஜய்க்கு அம்மா என்ற ஸ்தானத்தில் இருந்தாள். அடுத்த 5 வருடங்களில் வித்யா பிறந்தாள் அப்போதும் விஜய் மற்றும் வித்யாவின அம்மா ஸ்தானத்தில் தான் ஷோபா இருந்தார்.
அவள் எனக்கு மனைவி இல்லை என்று சொன்னதால் தவறாக நினைத்துவிடாதீர்கள் திருமணமானாலும் நாங்கள் காதலர்களாக இருக்கிறோம். நான் முட்டுபய என்று சொல்வார்கள் கோபக்காரன் என்று சொல்வார்கள் ஆனால் நான் எப்படிபட்டவன் என்பது ஷோபாவுக்கு நன்றாக தெரியும். பலமுறை அவளை நான் அடித்திருக்கிறேன். வேறு ஒருவராக இருந்தால் என்னை விட்டு சென்றிருப்பார். ஆனால் ஷோபா அப்படி இல்லை அவள் இல்லாமல் நாள் இல்லை நான் இல்லாமல் அவள் இல்லை.
அடித்துவிட்டாலும் நாள் அவளிடம் சென்று மன்னிப்பு கேட்பேன். உடனே அவள் அனைத்தையும் மறந்துவிட்டு புது காதலனாக என்னை ஏற்றுக்கொள்வாள். என்னுடைய எனர்ஜியே அவள்தான். கடவுளிடம் ஒன்று வேண்டிக்கொள்கிறேன். அவளது காதலனாக இன்றுவரை வாழ்ந்து கொண்டிருக்கிறேன். கடைசிவரை காதலனாக இருக்க வேண்டும் என்றும் என்று கூறியுள்ளார்.
No comments:
Post a Comment