Wednesday, July 20, 2022

கள்ளக்குறிச்சியில் தனியார் பள்ளியின் மீது ஏன் வன்மம்

 *பால் எனும் அமிர்தத்தை வழங்கும் பசு மாட்டின் காம்புகளை அறுத்து எரியும் அளவிற்கு, அறுந்து போன காம்பில் இருந்து ரத்தமும் பாலும் கலந்து மண்ணில் ஒழுக அது துடிப்பதை கண்டு மகிழ்ச்சி அடையும் அளவிற்கு தமிழகத்தில் வன்முறையின் மனோநிலை மிகக் கொடூரமாக வளர்ந்துள்ளது மாட்டை பாதுகாக்க கெஞ்சும் மாட்டுகாரன் .. Vino M Dev

*4000 மாணவர்கள் படிக்கும் கல்வி சாலையை பல வருடங்களாக குறி வைத்திருக்கிறது வன்முறை நக்சலைட்டுகள் மற்றும் பயங்கரவாத கும்பல்கள்..*
*4000 மாணவர்களின் எதிர்காலத்தை நடுத்தெருவில் நிறுத்தி, 4000 மாணவர்களின் பெற்றோர்களை தூக்கம் இழக்க செய்துள்ளது பயங்கரவா நக்சலைட் கும்பல்கள்..*
*பெரியார் திராவிடர் கழகம், விடுதலை சிறுத்தை கட்சி, மக்கள் அதிகாரம் எனும் நக்சலைட்ஸ் அமைப்பு, எஸ்டிபிஐ எனும் பயங்கரவாத அமைப்பு, எங்கேயும் எப்போதும் வளர்ச்சியை விரும்பாத கம்யூனிஸ்டுகள் என இந்த தேசத்தின் வளர்ச்சிக்கும், பொதுமக்களின் அமைதிக்கும் எதிராகவே சிந்திக்கும் கொடூர வாதிகளின் வன்முறை வெறியாட்டத்தால் இன்று 4000 மாணவர்களின் கல்வி நடுத்தெருவில்..*
*இறந்து போன மாணவியின் வழக்கு காவல்துறையிடம் விசாரணையில் இருந்து வருகின்ற பொழுது காவல் நிலையத்திலோ, எஸ்பி இடமோ, மாவட்ட ஆட்சியரிடமோ, டிஜிபியிடமோ அல்லது காவல்துறை நேரடி கட்டுப்பாட்டில் ஸ்டாலினிடமோ சென்று முறையிடுவதை அல்லது போராடுவதை விட்டுவிட்டு, சிபிசிஐடிக்கு வழக்கை மாற்றம் செய்ய கோறிய வழக்கு நீதிமன்றத்தில் திங்கள் கிழமை விசாரணைக்கு வரவிருந்த நிலையில், நீதிமன்றத்தில் வழக்கின் தீர்ப்பை அடுத்த நாள் பெறுவதற்குள், ஒரு நாளைக்கு முன்பே அன்று சுமார் 15 , 20 ஆண்டுகளாக அந்தப் பள்ளியின் அதீத வளர்ச்சி மீது இருந்த வன்மத்தை தீர்த்துக் கொண்டிருக்கிறது வன்முறை வெறியாட்டம் பயங்கரவாத நக்சலைட் கும்பல்கள்..*
*தூத்துக்குடியில் எந்த ஒரு பாதிப்பும் ஏற்படுத்தாத ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தை சாக்காக வைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள் சென்று செயல்படுத்த முடியாத வன்முறையை இங்கே இப்பள்ளியின் மீது செயல்படுத்தி இருக்கிறது பயங்கரவாத பிரிவினைவாத நக்சலைட் கும்பல்கள்..*
*ஏன் அந்தப் பள்ளியின் மீது வன்மம் என்று நேற்று கைது செய்யப்பட்ட மேற்குறிப்பிட்ட அமைப்புகளின் மாவட்டச் செயலாளர்களிடம் மாவட்ட தலைவர்களிடம் விசாரிக்கப் பட்டதில், ஒவ்வொரு முறையும் தேர்தல் வரும்போது, மாநாடு போடும்போது, அல்லது மேற்சொன்ன கும்பல்களுக்கு கை அரிக்கும் பொழுது இந்தப் பள்ளியின் நிர்வாகத்திடம் பணம் கேட்டுச் செல்வதும் பள்ளி நிர்வாகம் மறுப்பு கூறி வந்திருப்பதும் தான் முக்கிய காரணம் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்திருக்கிறது..*
*இந்த நக்சலிச பயங்கரவாத பிரிவினைவாத கும்பல்கள் எங்கே எல்லாம் இருக்கிறதோ அங்கே எல்லாம் வளர்ச்சி என்பது கானல் நீர் தான்..*
*இந்த விஷ பாம்புகளுக்கு எல்லாம் யார் தீனி போட்டு வளர்த்தார்கள் என்பது இந்த நாடே அறியும்..*
*வளர்த்துவிட்ட அரசியல்வாதிகள் ஒருபுறம் இருக்க மறுபுறம் தீக்கிரையாகி இருக்கிறது, கல்வி எனும் அழியா செல்வத்தை தரும் ஒரு கல்விக்கூடம்..*








T K L Shriram இது ஒரு மிகப் பெரிய தெளிவான திட்டமிடலுடன் நடந்து இருக்கும் செயல். இவ்வளவு துல்லியமாக ஒருங்கிணைத்து செயல்படுபவர்கள் நிச்சயமாக வெறும் தனி மனிதர்கள் ஒருங்கிணைந்து நடத்திய நிகழ்வாக இருக்க வாய்ப்பே இல்லை. பள்ளிக் கட்டிடம் இடிந்து விடும் நிலையில் இருப்பதாக இன்றைய டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி சொல்கிறது. 170 வகுப்பறைகள் தீக்கு இரையாகி இருக்கிறது 17 பள்ளி பஸ்கள், இரண்டு டிராக்டர்கள், ஒரு போலீஸ் வாகனம், ஜெனரேட்டர், 30 பைக்குகள், இரு JCB க்கள், 3 கார்கள் மற்றும் ஆயிரக்கணக்கான பள்ளியில் பயின்ற / பயிலும் மாணவர்கள்/ மாணவிகளின் கல்வி சான்றிதழ் கொளுத்தப்பட்டு இருக்கின்றன, இதில் லைப்ரரியை விட்டு வைத்திருக்கின்றனரா என்று தெரியவில்லை. 
இது போக பள்ளியில் இருந்து AIR CONDITIONER TABLES CHAIRS இன்னும் என்னன்ன முடியுமோ அத்தனையும் கும்பல் கும்பலாக எடுத்து சென்று இருக்கிறார்கள். கடைசியில் சிகரம் வைத்தாற் போல் சுமார் 15 பசு மாடுகளையும் கடத்தி இருக்கிறார்கள். மாட்டின் முலை காம்புகளை அறுத்து இருக்கிறார்கள், இதையெல்லாம் ஒரு சாதாரண கலவரக்காரனால் செய்திருக்க முடியும் என்று தோன்றவில்லை. நடந்து இருப்பது மாபெரும் வெறிச்செயல், வன்மம்.
சமூக வலைத்தலங்களை கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டிய அவசியம் வந்து விட்டது நான் பல முறை சொன்னது போல், சமூக வலைத் தளத்தை உபயோகம் செய்ய வேண்டும் என்றால் வங்கிகளில் KYC Docs சமர்ப்பிப்பது போல், இங்கேயும் கொண்டு வர வேண்டும். WhatsApp Group Admins களுக்கு அதிக அளவில் பொறுப்பை தர வேண்டும். எல்லாவற்றையும் விட Whatsapp கண்டிப்பாக ஒரு paid Service போல் செய்தாக வேண்டும். எல்லா பிரச்சினைகளுக்கும் மூல காரணம் இந்த WhatsApp University தான்.

No comments:

Post a Comment

மதுரையில் மாநகராட்சி இளம் பெண் ஊழியரிடம் 4 வருடம் உல்லாசமாக இருந்து குழந்தை பிறந்த பின் கழட்டிவிட்ட திருமணமான பாஸ்டர் மீது புகார்.

மதுரையில் பாஸ்டர் செய்த வேலை.. "கணவன் மனைவியாய் வாழ்ந்தோமே".. கமிஷனர் ஆபீசுக்கு ஓடிய மாநகராட்சி பெண்  By Hemavandhana Updated: Wed...