Monday, July 18, 2022

கள்ளக்குறிச்சி பள்ளிக் கலவரதூண்டியது மதமாற்ற சக்திகள்& கூலிபான் கம்யூனிஸ்டு மற்றும் விசிக??

கள்ளக்குறிச்சி கலவரம்: மக்கள் அதிகாரம் அமைப்பு, தந்தை பெரியார் திராவிட கழக செயலாளர்கள் கைது

கலவரம் தொடர்பாக மக்கள் அதிகாரம் அமைப்பின் செயலாளர், தந்தை பெரியார் திராவிட கழக செயலாளர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 சின்னசேலம், கள்ளகுறிச்சி மாவட்டம் சின்னசேலம் கன்னியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்த வந்த மாணவி ஶ்ரீமதி மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரத்தில், மாணவியின் மரணத்திற்கு நீதிகேட்டு நடைபெற்ற போராட்டம் வன்முறையாக மாறியது. 
கலவரத்தில் இதுவரை 329 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், 10 க்கு மேற்பட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மாணவி மர்ம மரணம் தொடர்பாக பள்ளியின் தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, முதல்வர் சிவசங்கரன் ஆகியோர் நேற்று கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இன்று 2 ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 
இந்நிலையில் கள்ளக்குறிச்சி கலவரம் தொடர்பாக மக்கள் அதிகாரம் அமைப்பின் செயலாளர், தந்தை பெரியார் திராவிட கழக செயலாளர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
https://www.dailythanthi.com/News/State/devotees-take-kavadi-at-tiruthani-murugan-temple-and-have-darshan-of-sami-748351?infinitescroll=1

கள்ளக்குறிச்சி கலவரம் திட்டமிட்ட வன்முறை.. காவல்துறை பவரை காட்ட வேண்டும்: நீதிமன்றம்

கலவரத்துக்கு யார் காரணம் என்பதை விரைந்து கண்டு பிடிக்க வேண்டும். கருப்பு சட்டை அணிந்த கலவரக்காரர்கள் யார். காவல்துறை தங்களது பவரை காட்ட வேண்டும் - சென்னை உயர் நீதிமன்றம்  Murugesh M July 18, 2022


கள்ளக்குறிச்சியில் நேற்று நிகழ்ந்த கலவரம் என்பது திட்டமிட்ட வன்முறை என்று கண்டனம் தெரிவித்துள்ள சென்னை உயர் நீதிமன்றம், இதன் பின்னணியில் உள்ளவர்கள் யார் என்பதை சிறப்புப் படை அமைத்து கண்டுபிடிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.

  

கள்ளக்குறிச்சி அருகே உள்ள கணியாமூர் என்ற கிராமத்திலிருக்கும் சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி என்ற தனியார் பள்ளியில் கடலூர் மாவட்டம் வேப்பூர் வட்டம் பெரிய நெசலூர் என்ற கிராமத்தைச் சேர்ந்த தம்பதியின் 17 வயது மகள் படித்து வந்தார். கடந்த 13ம் தேதி மாணவி பள்ளியில் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது 

 

     எனினும் மாணவியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பெற்றோர் மற்றும் உறவினர்கள் கூறிவருகின்றனர். மாணவியின் மரணத்துக்கு நீதி கேட்டு நேற்று நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்தது. பள்ளி மற்றும் வாகனங்களுக்கு கலவரக்காரர்கள் தீ வைத்தனர். இதனால் அப்பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. 

 

இதனிடையே, மாணவியின் மரணம் குறித்து சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் மாணவியின் உடலை மறு பிரதேச பரிசோதனை செய்ய அனுமதிக்க வேண்டும் என்றும் மாணவியின் தந்தை தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, நேற்றைய வன்முறை சம்பவங்களுக்கு நீதிபதி கடும் கண்டனம் தெரிவித்தார். 

நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து விட்டு போராட்டத்தில் ஈடுபட்டது ஏன் என்று கேள்வி எழுப்பிய நீதிபதி,  போராட்டம் நடத்த அனுமதி அளித்தது யார் என மனுதாரரிடம் கேள்வி எழுப்பினார். அதற்கு தங்களுக்கும் போராட்டத்திற்கும் தொடர்பு இல்லை என்றும் வாட்ஸ் அப் மூலமாக அவர்கள் திரண்டு விட்டார்கள் என்றும் மனு தாரர் பதில் அளித்தார்.

எனினும் இதனை ஏற்க மறுத்த நீதிபதி, மனுதாரர் தான் போராட்டத்திற்கு பொறுப்பு ஏற்க வேண்டும் என தெரிவித்தார்.  சிபிசிஐடி விசாரணைகு மாற்றப்பட்டுள்ளது என்ன மெசேஜ்'ஐ நாட்டுக்கு தர முயற்சிக்கிறீர்கள் என்றும் கேள்வி எழுப்பினார்.

இதனிடையே காவல்துறை தரப்பில், யாரையும் காப்பாற்றும் நோக்கில் நாங்கல் செயல்படவில்லை. விசாரணை முறையாக சென்று கொண்டிருக்கிறது. தற்கொலைக்கு முன்  மாணவி எழுதிய கடிதம் உள்ளது’ என தெரிவிக்கப்பட்டது. அப்போது,கலவரத்துக்கு யார் காரணம் என்பதை விரைந்து கண்டு பிடிக்க வேண்டும் என்றும் கருப்பு சட்டை அணிந்த கலவரக்காரர்கள் யார். காவல்துறை தங்களது பவரை காட்ட வேண்டும் என்றும் கூறிய நீதிபதி .நீதிமன்றம் இந்த விசாரணையை கண்காணிக்கும் என்று தெரிவித்தர்.

இது போன்ற சந்தர்ப்பதை பயன்படித்தி கலவரம் செய்யவே ஒரு கூட்டம் உள்ளது.  வன்முறை சம்பவத்தை பொறுத்தவரை விசாரணையை நீதிமன்றம் கண்காணிக்கும். 4500 மாணவர்களின் நிலை என்ன? அவர்களின் சான்றிதழ்கள் எரிக்கப்பட்டுள்ளன என்று கூறிய நீதிமன்றம், இது திட்டமிட்டு நடத்தப்பட்ட வன்முறை என்றும் கண்டனம் தெரிவித்தது.


 கள்ளக்குறிச்சி பள்ளிக் கலவரதூண்டியது தமிழர் விரோத மதமாற்ற சக்திகளும் அதன் அடிமை கூலிபான் கம்யூனிஸ்டு மற்றும் விசிக??





No comments:

Post a Comment

காலில் செருப்பு, நெருப்பு இல்லத அடுப்பு பொங்கல் போட்டோ ஷூட் செய்த தமிழர் விரோத்கள்- மனிதர்களா

 காலில் செருப்பு, நெருப்பு இல்லத அடுப்பு பொங்கல் போட்டோ ஷூட் செய்த தமிழர் விரோத்கள்- மனிதர்களா