Thursday, July 28, 2022

கிறிஸ்துவ வழக்கு தாமதமானால் செய்தி வெளியிடுவீர்களா? : உச்ச நீதிமன்றம் ஆவேசம்

வழக்கு தாமதமானால் செய்தி வெளியிடுவீர்களா? : உச்ச நீதிமன்றம் ஆவேசம்

https://www.dinamalar.com/news_detail.asp?id=3087518 

ஜூலை 29, 2022 புதுடில்லி :கிறிஸ்துவ நிறுவனங்கள் மற்றும் பாதிரியார்கள் மீதான தாக்குதல் தொடர்பான வழக்கு தாமதம் அடைந்தது தொடர்பாக செய்தி வெளியானதற்கு, உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

கிறிஸ்துவ நிறுவனங்கள் மற்றும் பாதிரியார்கள் மீதான தாக்குதல்கள் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் சிலர் வழக்கு தொடர்ந்துள்ளனர். நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், சூர்ய காந்த் அடங்கிய அமர்வில் நேற்று ஆஜரான மூத்த வழக்கறிஞர் கோலின் கோன்சல்வஸ் உள்ளிட்டோர், இந்த வழக்கை அவசரமாக விசாரிக்கும்படி வலியுறுத்தினர். 

அப்போது அமர்வு கூறியதாவது:கடந்த முறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது கொரோனாவால் பாதிக்கப்பட்டதால் விசாரிக்க முடியவில்லை. ஆனால், இந்த வழக்கை நீதிபதிகள் வேண்டுமென்றே காலதாமதம் செய்வதாக உடனடியாக பத்திரிகைகளில் செய்தி வெளியானது.

இது போன்ற செய்தியை யார் கொடுப்பது? நீதிபதிகள் மீது குற்றச்சாட்டுகளை முன்வைப்பதற்கும் ஒரு எல்லை உண்டு. இந்த வழக்கு விரைவில் விசாரிக்கப்படும். இல்லையென்றால் மற்றொரு செய்தியை எங்களுக்கு எதிராக வெளியிடுவீர்கள்.இவ்வாறு அமர்வு கூறியது.

நீதிமன்றங்கள் மற்றும் நீதிபதிகளுக்கு எதிராக ஊடகங்கள் தொடர்ந்து பொய் தாக்குதலில் ஈடுபட்டு வருவதாக, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா சமீபத்தில் பேசியது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

திருக்குறளை இழிவு படுத்தும் மு.கருணாந்தி உரை

வள்ளுவத்திற்கு உரை எழுதுவர் மூல வெண்பாவிற்கு பொருள் தராமா தான் ஏற்ற நாத்தீக மூட நம்பிக்கைக்கு ஏற்ப பிதற்றுவது பைத்தியக்காரத்தனம் இதோ ஓர் உத...