Sunday, July 17, 2022

சினிமா பூஜையின்போது கிறிஸ்துவ மதவெறி - கென்னி விக்ரம், ஜீ.வி.பிரகாஷ்

 பா.ரஞ்சித் பட பூஜையில் விபூதியை தவிர்த்த நடிகர் விக்ரம் - ஜி.வி.பிரகாஷ், கேட்டு வைத்துக்கொண்ட சாண்டி.. சுவாரஸ்யங்கள்


https://tamil.news18.com/news/entertainment/cinema-vikran-pa-ranjith-movie-vikram-61-movie-pooja-event-actor-vikram-and-gv-prakash-aviod-viboothi-772546.html


விக்ரம்-61 படத்தின் பூஜையில் கலந்து கொண்ட நடிகர் விக்ரம் மற்றும் ஜி.வி. பிரகாஷ் ஆகியோர் விபூதி வைத்துக் கொள்வதை தவிர்த்தனர். 

  • NEWS18 TAMIL JULY 16, 2022 

  • பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் திரைப்படத்திற்கான பூஜையில் நடிகர் விக்ரம் மற்றும் ஜி.வி.பிரகாஷ் ஆகியோர் விபூதி வைத்துக் கொள்வதை தவிர்த்தனர். 

    பொன்னியின் செல்வன், கோப்ரா படங்களை தொடர்ந்து விக்ரம் பா.ரஞ்சித் இயக்கம் படத்தில் விக்ரம் நடிக்கிறார். அவரின் 61-வது திரைப்படமாக உருவாகும் அந்த படத்தை ஞானவேல் ராஜா தயாரிக்கிறார்.  இதற்கான பூஜை இன்று சென்னையில் நடைபெற்றது.

    அதில் சிறப்பு விருந்தினராக நடிகர் சிவகுமார் கலந்து கொண்டார். அதேபோல் பட குழுவினர் விக்ரம், பா.ரஞ்சித், இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ், நடன இயக்குனர் சாண்டி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.  இந்த பூஜையில் கலந்து கொண்ட குழுவினருக்கு அர்ச்சகர் விபூதியிட்டு,  மாலை அணிவித்து நிகழ்ச்சியை நடத்தினார். அப்போது ஒவ்வொருவருக்காக விபூதி வைத்த அர்ச்சகரியிடம், நடிகர் விக்ரம் வேண்டாம் என்று பணிவாக தவிர்த்து விட்டார். அவர் கிறிஸ்துவ மதத்தை பின்பற்றுபவர் என்பது குறிப்பிடத்தக்கது.

  • அதே போல் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷூம் விபூதி வைக்க வேண்டாம் என அர்ச்சகரிடம் தெரிவித்ததார். 

  • ஆனால் நடன இயக்குனர் சாண்டி, தனக்கு விபூதி இடுமாறு கேட்டு வைத்துக்கொண்டார்.  இந்த நிகழ்வுகளை  இயக்குனர் பா.ரஞ்சித் சின்ன  புன்னகையுடன் பார்த்து ரசித்து கொண்டு இருந்தார். 

No comments:

Post a Comment

இந்தியா, பாகிஸ்தான் & பங்களாதேஷ் பொருளாதரம் 1980 முதல் 2025 வரை

  இந்தியா, பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் ஆகிய மூன்று நாடுகளின் 1980 முதல் 2025 வரை இடையே உள்நாட்டு மொத்த உற்பத்தி (GDP), அதன் வளர்ச்சி விகிதங...