Sunday, July 24, 2022

பெருங்களத்தூர் பேருந்து நிலையத்தில் சைவ உணவகம் இல்லை

 சமீபத்தில் ஒரு இரண்டு மணி நேரம் பெருங்களத்தூர் பேருந்து நிலையத்தில் ஒரு நண்பருக்காக காத்திருக்க வேண்டி இருந்தது. அப்போது மதியம் ஒரு மணி இருக்கும்.




கும்பகோணத்தில் இருந்து கிளம்பிய நண்பரை தொலைபேசியில் அழைத்தால் நிச்சயம் பேருந்து வந்து சேர ஒரு மணி நேரம் ஆகும் என்கிறார்.
சரி மதிய உணவை அங்கே எங்கேயாவது சாப்பிடலாம் என்று அந்தப் பேருந்து நிலையத்தை சுற்றியுள்ள உணவகங்களை போய் பார்த்தேன்.
மருந்துக்கு கூட ஒரே ஒரு சைவ உணவகம் அங்கு இல்லை. தொலைதூரப் பயணத்தின் போது மக்கள் கூடுமானவரை மிகவும் லைட்டான உணவை உண்ண விரும்புவார்கள். ஆனால் அங்கு முளைத்திருக்கும் கடைகள் அனைத்தும் அசைவ உணவுகள். அதுவும் ஒரே மார்க்கத்தை சேர்ந்தவர்கள் காரசாரமான எண்ணெய் வடியும் உணவுகளை வைத்திருக்கிறார்கள்.
மதியம் ஒரு மணிக்கு உங்களுக்கு சிக்கன் சம்பந்தப்பட்ட அனைத்து ஐட்டம் கிடைக்கும். பிரியாணி அண்டா இல்லாத கடைகளே இல்லை. ஒரு சில கடைகள் மாட்டுக்கறி பிரியாணி, சுக்கா கக்கா என விளம்பரப்படுத்தி இருக்கிறார்கள். அதுவும் அங்கே கிடைக்கிறது. அங்கே நிற்கும் பிரயாணிகளை பற்றி எந்த கவலையும் இல்லாமல் மிளகாய் பொடியை தூவி வாசலிலேயே சமைக்கிறார்கள். அந்த பொடியின் நெடி தாங்க முடியாமல் பல பிரயாணிகள் நகர்ந்து போய் நின்று கொண்டிருக்கிறார்கள்.
அடிப்படை வசதிகள் எதுவுமே இல்லாத ஒரு பேருந்து நிலையம் அது. யாராவது சைவம் சாப்பிடுபவர்களாக இருந்தால் நிச்சயம் அந்த இடத்திலிருந்து தப்பி ஓடி விடுவார்கள். அந்த அளவிற்கு இறைச்சியின் நாற்றம் குடலை பிடுங்கிக் கொண்டு வருகிறது.
அக்க்ஷயா பவன் என்று ஒரு சைவ உணவகம் இருந்ததற்கான தடயங்கள் தெரிகிறது. அந்த கடை தற்போது சில மார்க்கத்து ஆட்களால் அடித்து நொறுக்கப்பட்டு மூடப்பட்டு இருக்கிறது. எப்போது எப்படி நடந்தது என்று தெரியாது.
என்னுடைய கேள்வி என்னவென்றால் அரசாங்கமே இதுபோல பேருந்தில் பிரயாணம் செய்யும் அனைவரையும் அசைவம் சாப்பிடுபவர்கள் என்று புரிந்து கொண்டுள்ளதா??
அல்லது சைவம் சாப்பிடுபவர்கள் "பட்டினியாகவே நீங்கள் பிரயாணம் செய்யுங்கள்" என்று சாபம் விடுகிறதா??
எதற்காக சைவ சிற்றுண்டிகள் குறிவைத்து அவற்றை தவிர்த்து உள்ளது என்று இந்த அரசாங்கம் பதில் சொல்லுமா??
தொலைதூரப் பிரயாணிகளில் சைவம் சாப்பிடுபவர்கள் சாப்பிட எதுவும் கிடைக்காமல் வெறும் வயிற்றோடு இந்த தொலைதூர பயணத்தில் சென்று அவர்களுக்கு உடல் உபாதைகள் ஏதாவது ஏற்பட்டால் அதற்கு அரசாங்கம் பொறுப்பு ஏற்க்குமா??
அங்கு நடக்கும் இறைச்சி சிற்றுண்டிகள் மிக சுகாதாரமற்ற நிலையில் உணவை கையாள்வது அரசாங்கத்தின் கண்களுக்கு தெரியவில்லையா??
அல்லது ஒரு குறிப்பிட்ட மார்க்கத்தை அமைதிப்படுத்த வாயைப் மூடி கொண்டிருக்கிறார்களா??
அதுதான் கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையம் திறக்கப் போகிறோமே என்று யாரும் வர வேண்டாம். அந்தப் பேருந்து நிலையம் திறக்க குறைந்தபட்சம் ஒரு வருடம் ஆகும்.
அது திறந்தாலும் சைவம் சாப்பிடுவோருக்கு பெரிய தீர்வு கிடைத்து விடப் போவதில்லை.
திறக்காத அந்த பேருந்து நிலையத்தில் உள்ள கடைகள் யாருக்கெல்லாம் ஏலம் விடப்பட்டது?? யாரெல்லாம் அதை எடுத்து இருக்கிறார்கள் என்று எக்காரணத்தைக் கொண்டும் அரசாங்கத்தின் டேட்டா வெளியே வராது. அதை வேறொரு பதிவில் பார்ப்போம்.
சரவணபிரசாத் பாலசுப்பிரமணியன்
🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
பின்குறிப்பு: நான் அசைவம் சாப்பிடுபவன் தான். ஆனால் வெளியில் சாப்பிட மாட்டேன்.
இந்தப் பதிவு சைவ உணவை நம்பியே பிரயாணம் மேற்கொள்ளும் அப்பாவி பிரயாணிகளுக்கு.

No comments:

Post a Comment

காலில் செருப்பு, நெருப்பு இல்லத அடுப்பு பொங்கல் போட்டோ ஷூட் செய்த தமிழர் விரோத்கள்- மனிதர்களா

 காலில் செருப்பு, நெருப்பு இல்லத அடுப்பு பொங்கல் போட்டோ ஷூட் செய்த தமிழர் விரோத்கள்- மனிதர்களா