Sunday, July 24, 2022

கீழச்சேரி சேக்ரட் ஹார்ட் பள்ளி ஹாஸ்டலில் 12வது மாணவி சரளா தற்கொலை

கீழச்சேரி சேக்ரட் ஹார்ட் மேல்நிலைப் பள்ளி விடுதியில் 12வது மாணவி சரளா தற்கொலை. பாலியல் தொல்லையா? மதமாற்றக் கொடுமையா? ஆசிரியர் மிரட்டல்?

சென்னை கத்தோலிக்க மயிலாப்பூர் விவிலிய மாவட்ட நிர்வாகம் கீழானது கீழச்சேரி தூய இருதய மேல்நிலைப் பள்ளி
கீழச்சேரி தூய இருதய மேல்நிலை பள்ளி விடுதிக்கு முறையான அனுமதி உண்டா
திருவள்ளூர் அடுத்த கீழச்சேரி ஊராட்சியில் தெக்கலூர் பகுதியைச் சேர்ந்த மாணவி, கீழச்சேரியில் செயல்படும் சேக்ரட் ஹார்ட் பள்ளி விடுதியில் தங்கி பிளஸ் 2 படித்துவந்தார். 
இன்று காலை வழக்கம்போல பள்ளிக்கு கிளம்பிய மாணவி, உடன் இருந்த மாணவர்கள் காலை உணவு அருந்தச் சென்ற நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது. 
இன்று காலை வழக்கம் போல் பள்ளிக்குச் செல்ல சீருடை அணிந்து சக நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தார் எனக் கூறப்படுகிறது. பின்னர் சக நண்பர்கள் உணவு அருந்த சென்று விட்டனர். அப்போது தனியாக இருந்த மாணவி சரளா துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.  தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோத்னைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். 
 
இது குறித்து பள்ளி நிர்வாகம் முறையாக தகவல் தெரிவிக்கவில்லை என்று கூறி மாணவியின் உறவினர்கள் கீழச்சேரி பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். மாணவி சரளாவின் இறப்புக்கான காரணம் என்ன? என்று தெரியவில்லை.
 மாணவி விஷ பூச்சி கடித்து இறந்திருக்கலாம் என சந்தேகிக்கின்றனர். இதுபற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.மாணவி தற்கொலை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. 
மப்பேடு காவல்துறையினர் மற்றும் மாவட்டக் காவல்துறையினர் அப்பகுதியில் குவிக்கப்பட்டுள்ளதால் கீழச்சேரி பகுதியில் பெரும் பரபரப்பு நிலவுகிறது. 
மாணவி சரளா, விவசாயி பூசனம்-முருகம்மாள் தம்பதியின் ஒரே மகள் ஆவார். மகளின் உடலை பார்த்த அவர்கள் அலறி துடித்தது அனைவரையும் கண் கலங்க வைத்தது. மகளின் சாவில் உள்ள மர்மத்தை வெளியில் கொண்டு வர வேண்டும். 
மாணவி இறப்புக்கு காரணமானவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
https://www.dailythanthi.com/News/State/student-death-in-the-school-hostel-sudden-turn-753602

 

No comments:

Post a Comment

காலில் செருப்பு, நெருப்பு இல்லத அடுப்பு பொங்கல் போட்டோ ஷூட் செய்த தமிழர் விரோத்கள்- மனிதர்களா

 காலில் செருப்பு, நெருப்பு இல்லத அடுப்பு பொங்கல் போட்டோ ஷூட் செய்த தமிழர் விரோத்கள்- மனிதர்களா