திருப்பூர்: அரசு பள்ளி ஆசிரியர் ஒருவர் மாணவர்களிடம், 'நெற்றியில் விபூதி வைக்கக்கூடாது' என்று கண்டித்ததையடுத்து மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். https://kathir.news/tamil-nadu/--1430935
தமிழகத்தில் கடந்த ஓராண்டாக இந்து விரோத செயல்கள் அதிக அளவில் அரங்கேறி வருகிறது. 'இந்து தெய்வங்களை கேலி செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் இருப்பது, கோயில் சாமி சிலைகள் உடைக்கப்படுவதை தடுக்காமல் வேடிக்கை பார்ப்பது' போன்ற பல இந்து விரோத சம்பவங்கள் தமிழகத்தில் நிகழ்ந்து வருகிறது.
அதுமட்டுமல்லாமல் அரசுப்பள்ளிகளில், ஆசிரியர்கள் மாணவர்களிடம் "நெற்றியில் விபூதி வைக்கக்கூடாது" போன்ற விதிமுறைகள் விதிக்கப்படுவதாக, பல செய்திகள் வெளிவருகின்றன.
இதன் வரிசையில், திருப்பூர் கொங்கு மெயின் ரோடு சின்னசாமி அம்மாள் அரசு மேல்நிலைப்பள்ளியின் ஆசிரியர் ஒருவர், மாணவர்களிடம் "நெற்றியில் விபூதி வைக்கக்கூடாது, கைகளில் கயிறு கட்டக் கூடாது" என்று கண்டித்துள்ளார்.
இந்நிலையில் வகுப்புகளைப் புறக்கணித்து விட்டு, பள்ளி வளாகத்திற்கு எதிரே மாணவர்கள் பெருமளவில் கூடி, ஆசிரியரின் நடவடிக்கையை எதிர்த்து கோஷங்களை எழுப்பி முற்றுகையிட்டனர்.
உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த மாவட்ட கல்வி அதிகாரி கணேசன் மற்றும் காவல்துறை அதிகாரிகள், மாணவர்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் கூறியதையடுத்து மாணவர்கள் போராட்டத்தை திரும்பப் பெற்றனர்.
No comments:
Post a Comment