பத்திரிக்கை /முண்டகளப்பர்கள் - அமைதியாக இருக்கிறார்கள் ... அந்த பெண்ணின் பிரேத பரிசோதனை தற்போது வெளியாகி இருக்கு ..
"The deceased would appear to have died of hemorrhage and shock due to multiple injuries sustained "
உடலில் ஏற்பட்ட பல காயங்களால் ஏற்பட்ட ரத்த போக்கு மற்றும் அதனால் ஏற்பட்ட அதிர்ச்சியும் காரணம் என தெரிகிறது !!!
அரசு மற்றும் போலீஸ் துறை சரியாக செயல்படவில்லை என தெரிகிறது !!!
மேலும் மக்கள் கொதிப்பு நிலையில் - ஒரு அவநம்பிக்கையில் இருப்பது இவ்வளவு பிருமாண்ட கலவரமாக ஆகி இருப்பது தெரிகிறது !!!
வருத்தமான நிகழ்வு - இறைவன் அந்த ஆன்மாவுக்கு நிம்மதி தரட்டும் -
ஒரு தனியார் பள்ளியில் பள்ளிச் சீருடையில் மாணவி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்து விடுகிறார்.அதே பள்ளியில் இதற்கு முன்னர் இதுபோலவே சர்ச்சைக்குரிய மரணங்கள் நிகழ்ந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த மரணத்திற்கு முழுப்பொறுப்பையும் பள்ளி நிர்வாகம் தான் ஏற்க வேண்டும். கடந்த 4 நாட்களாக அமைதியான முறையில் போராட்டம் நடைபெறுகிறது. போராட்டக்காரர்களை எள் முனையளவும் மதிக்காமல் பள்ளி நிர்வாகம் கள்ள மௌனம் சாதிக்கிறது! பள்ளிக் கல்வித் துறையும்,காவல் துறையும் இது குறித்து எந்த ஒரு செய்தியாளர் சந்திப்பையும் நிகழ்த்தவில்லை! குறைந்தபட்சமாக பள்ளியின் தாளாளரும்,பள்ளிக்கல்வித் துறை அமைச்சரும் அந்த தாய்க்கு ஒரு ஆறுதல் கூட நேரில் சென்று சொல்லவில்லை! இது ஒருபுறமிருக்க,மாணவியின் மர்ம மரணத்திற்கு நீதி கேட்டு போராட்ட அறிவிப்பை இளைஞர் அமைப்புகள் சமூக வலைதளம் வாயிலாக வெளியிடுகின்றன.போராட்டம் நடைபெறும் நாள் ஞாயிற்றுக்கிழமை என்று அறிவிக்கப்படுகிறது. "மெரினா புரட்சிக்குப் பின்னும்",இளைஞர்கள் சக்தியை குறைத்து மதிப்பிட்ட தமிழக உளவுத்துறை குறட்டைவிட்டு தூங்கியுள்ளது. மாவட்ட காவல் நிர்வாகம்,தடியடி நடத்த உத்தரவிட்டதே கலவரத்திற்கு மிக முக்கிய காரணமாக அமைந்து விட்டதாக தெரிகிறது!ஒரு உணர்வுப்பூர்வமான இளைஞர்கள் போராட்டத்தில், தடியடி நடத்தினால் என்ன மாதிரியான விளைவுகள் ஏற்படும் என்பதை தமிழக காவல்துறை உணர்ந்திருக்கவில்லை!
முதலில் பள்ளி நிர்வாகம் மாணவியின் தாயாரை அழைத்து சம்பவத்திற்கு வருத்தமும் ஆறுதலும் தெரிவித்து, மாணவியின் தாயாருடன் நிற்பதே உத்தமமாக இருந்திருக்கும். நடைபெற்ற சம்பவம் குறித்து மாணவியின் குடும்பத்தாருக்கு தெளிவாக விளக்கம் கொடுத்திருக்க வேண்டும்!அல்லது காவல்துறையோ பள்ளிக்கல்வித்துறையோ இதைச் செய்திருக்க வேண்டும்!
போராட்டம் வீரியம் அடைந்து இளைஞர்கள் கொதிப்படைந்து பள்ளியை அடித்து நொறுக்கியவுடன் முதல்வர் அறிக்கை,டிஜிபி வேண்டுகோள், தமிழக அரசியல் கட்சியினரின் அறிக்கைகள் என்று ஒவ்வொன்றாக இப்பொழுது வெளிவருகிறது!
இனிவரும் காலங்களிலாவது தனியார் பள்ளி மற்றும் கல்லூரிகள் கள்ள மவுனம் காக்காமல், பணம் ஒன்றையே குறிக்கோளாகக் கொள்ளாமல் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகளின் நலனிலும் அக்கறை செலுத்த வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.
No comments:
Post a Comment