Wednesday, July 27, 2022

கீழச்சேரி கத்தோலிக்க சேக்ரட் ஹார்ட் மேல்நிலைப் பள்ளி 12வது மாணவி சரளா தற்கொலை. பத்திரிக்கைகள் பள்ளி பெயர் மறைக்கிறதே

கீழச்சேரி சேக்ரட் ஹார்ட் மேல்நிலைப் பள்ளி விடுதியில் 12வது மாணவி சரளா தற்கொலை பற்றிய செய்திகளில் பள்ளியின் பெயர்-படம் இல்லை, அந்தப் பள்ளி சென்னை கத்தோலிக்க மயிலாப்பூர் விவிலிய மாவட்ட நிர்வாகம் கீழானது என்பது இல்லை.

 கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியில் விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட், PFI&SDPI, திராவிடர் கழகத்தினர் தூண்ட மாபெரும் காலித்தனம் நடந்ததால் வேகமாக போலிஸ் வந்து அடக்கம் மிக வேகமாக முடிக்கப்பட்டது.

ஆனால் பள்ளியின் பெயர் நிர்வாகம் மறைக்க திமுக அரசு கட்டளையா?



கீழச்சேரி தூய இருதய மேல்நிலை பள்ளி விடுதிக்கு முறையான அனுமதி உண்டா


 
இது குறித்து பள்ளி நிர்வாகம் முறையாக தகவல் தெரிவிக்கவில்லை என்று கூறி மாணவியின் உறவினர்கள் கீழச்சேரி பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். மாணவி சரளாவின் இறப்புக்கான காரணம் என்ன? என்று தெரியவில்லை.
 மாணவி விஷ பூச்சி கடித்து இறந்திருக்கலாம் என சந்தேகிக்கின்றனர். இதுபற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.மாணவி தற்கொலை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. 
மப்பேடு காவல்துறையினர் மற்றும் மாவட்டக் காவல்துறையினர் அப்பகுதியில் குவிக்கப்பட்டுள்ளதால் கீழச்சேரி பகுதியில் பெரும் பரபரப்பு நிலவுகிறது. 
மாணவி சரளா, விவசாயி பூசனம்-முருகம்மாள் தம்பதியின் ஒரே மகள் ஆவார். மகளின் உடலை பார்த்த அவர்கள் அலறி துடித்தது அனைவரையும் கண் கலங்க வைத்தது. மகளின் சாவில் உள்ள மர்மத்தை வெளியில் கொண்டு வர வேண்டும். 
மாணவி இறப்புக்கு காரணமானவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

 

 

No comments:

Post a Comment