Wednesday, July 27, 2022

கோவையில் கிறிஸ்துவ மதமாற்ற கும்பல் - ஆள் கடத்தல், மொட்டை அடித்தபோது சிக்கினர்

ஆள் கடத்தல் கும்பல் மீது பாயுமா 'குண்டாஸ்!' போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டு பா.ஜ., வலியுறுத்தல்

 Added : ஜூலை 27, 2022 
கோவை தொண்டாமுத்தூர் அட்டுக்கல் கிராமத்தில் கிறிஸ்துவ தொண்டு நிறுவனத்தின் மனித உரிமை மீறல் மற்றும் அட்டுழியத்தை தொடா்ந்து, அதை உரிய முறையில் விசாரிக்காத காவல்துறையை கண்டித்து நடைபெற்ற மாபெரும் ஆர்ப்பாட்டம்...


முதியவர்கள், பிச்சைக்காரர்கள் மற்றும் ரோட்டில் நடந்து சென்றவர்களை கூட விட்டு வைக்காமல் வேனில் ஏற்றி சென்ற கிறிஸ்தவ தொண்டு நிறுவனம். இது குறித்தான காணொளி தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

கோவை தொண்டாமுத்தூர் அருகே, அட்டுகல் மலையடிவாரத்தில் கருணை பயணம் எனும் கிறிஸ்தவ காப்பகம் உள்ளது. இந்த காப்பகத்தில் இருந்து, கடந்த இரண்டு நாட்களாக எங்களை காப்பாற்றுங்கள் என கூக்குரல் எழுந்து இருக்கின்றன. இதையடுத்து, சந்தேகம் அடைந்த உள்ளுரை சேர்ந்த பழங்குடியின மக்கள் அங்கு சென்று பார்த்து இருக்கின்றனர். அப்போது, 50-க்கும் மேற்பட்டவர்கள் மொட்டை அடிக்கப்பட்டு அடைத்து வைக்கப்பட்டு இருந்தனர். இதனை தொடர்ந்து, ஊர் மக்கள் கொடுத்த தகவல் அடிப்படையில் தாசில்தார் மற்றும் உயர் அதிகாரிகள் வந்து விசாரித்து இருக்கின்றனர்.



பிச்சைகாரர்கள் மற்றும் ஆதரவற்றவர்களுக்கு அடைக்கலம் கொடுக்கவே இங்கு அவர்களை தங்க வைத்து இருக்கிறோம் என காப்பாகத்தை சேர்ந்தவர்கள் கூறியிருக்கின்றனர். ஆனால், அங்கிருந்தவர்கள் எங்களை வலுக்கட்டாயமாக இங்கு அடைத்து வைத்து இருப்பதாக உருக்கமுடன் கூறியுள்ளனர். அதில், ஒருவர் நான் வேலை முடித்து வீட்டிற்கு சென்று கொண்டு இருந்த போது என்னை அடித்து இழுத்து ஆம்புலன்ஸில் ஏற்றி இங்கு கொண்டு வந்து விட்டதாக கூறி இருக்கிறார். மேலும், விவரங்களுக்கு அதன் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இதையெல்லாம், பார்க்கும் போது கிட்னியை பறிகொடுத்த வடிவேலு ஞாபகம் வருவதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

தொண்டாமுத்துார் : கோவையில், சட்டவிரோதமாக ஆட்களை கடத்தியவர்களை, குண்டர்சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி, பா.ஜ.,வினர், 500க்கும் மேற்பட்டோர், தொண்டாமுத்தூர் போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டனர்.
 
கோவை, தொண்டாமுத்தூர் அடுத்த அட்டுக்கால் பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான கட்டடத்தில், 200க்கும் மேற்பட்டோரை அடைத்து வைத்து கொடுமைப்படுத்துவதாக கூறி, கடந்த ஞாயிற்றுக்கிழமை, 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் முற்றுகையிட்டனர். சாலையில் நின்றவர்கள், வேலைக்கு சென்றவர்களை பிடித்து வந்து மொட்டை அடித்து அடைத்து வைத்திருப்பது தெரியவந்தது.இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆள் கடத்தல் கும்பல் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, பா.ஜ.,வினர் மற்றும் ஹிந்து முன்னணியினர் திரண்டனர்.
 
சம்பந்தப்பட்ட, 'டிரஸ்டி'யினர் மீது வழக்கு பதிந்து கைது செய்யப்படுவர் என, கோவை ரூரல் எஸ்.பி., பத்ரிநாராயணன் உறுதி அளித்தார்.இதைத்தொடர்ந்து, ஜிபின், சைமன் என்கிற செந்தில்குமார், ஜார்ஜ், செல்வின், பாலச்சந்திரன், அருண் ஆகிய, 6 பேர் மீது தொண்டாமுத்தூர் போலீசார், ஐந்து பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். பின், அவர்கள் ஜாமினில் விடுவிக்கப்பட்டனர்.
இந்நிலையில், அவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி, பா.ஜ., மாவட்ட தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி தலைமையில், 500க்கும் மேற்பட்ட பா.ஜ.,வினர், தொண்டாமுத்தூர் போலீஸ் ஸ்டேஷனை நேற்று முற்றுகையிட்டனர். பாதிக்கப்பட்டவர்களிடம் புகார் பெற்று, 'டிரஸ்டி'யினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, சாலையில் அமர்ந்து கோஷங்கள் எழுப்பினர்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு எஸ்.பி., பத்ரிநாராயணன் வந்து, பா.ஜ.,வினரிடம் பேச்சு நடத்தினார். பாதிக்கப்பட்டவர்கள் அளிக்கும் மனு மீது நடவடிக்கை எடுக்கப்படும் என, அவர் தெரிவித்தார். முற்றுகையில் ஈடுபட்ட பா.ஜ.,வினரை போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து, இரவு விடுவித்தனர்.




 

No comments:

Post a Comment

‘France earns $400-$500B annually from Africa as colonial tax’

  Zahid Oruj: ‘France earns $400-$500B annually from Africa as colonial tax’ Foreign policy April 18, 2024   13:18 https://report.az/en/fore...