சிஎஸ்ஐ பிஷப் வெளிநாடு தப்பியோட முயற்சி: விமான நிலையத்தில் மடக்கிய அதிகாரிகள்!
மோசடியில் ஈடுபட்டு வெளிநாடு தப்பியோட முயன்ற பாதிரியாரை குடியேற்ற அதிகாரிகள் விமான நிலையத்தில் மடக்கி பிடித்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இதையடுத்து, பாதிரியாரிடம் பணம் கொடுத்து ஏமாந்தவர்கள், காவல்துறையில் புகார் தெரிவித்து இருக்கின்றனர். அந்த வகையில், அமலாக்கத் துறையை சேர்ந்த உயர் அதிகாரிகள் மருத்துவ கல்லூரி, பாதிரியார் வீடு மற்றும் சி.எஸ்.ஐ. சர்ச் செயலாளர் பிரவீன் வீடுகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அதிரடி சோதனை நடத்தி இருக்கின்றனர். இதனை தொடர்ந்து, பாதிரியார் தர்மராஜிடம் வெளிநாடு செல்வது என்றால், எங்களின் அனுமதியை பெற்ற பின்பு தான் செல்ல வேண்டும் என அமலாக்கத்துறையினர் அறிவுரை வழங்கி இருக்கின்றனர். ஆனால், பாதிரியார் வெளிநாடு தப்பி செல்ல முயன்ற போது விமான நிலையத்தில் குடியேற்ற அதிகாரிகளால் அவர் தடுத்து நிறுத்தப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் விவரங்களுக்கு ஜனம் ஆன்லைன் இணையதள பக்கத்தின் லிங்க் கொடுக்கப்பட்டு இருக்கிறது.
https://www.ndtv.com/kerala-news/kerala-medical-college-scam-bishop-dharmaraj-rasalam-stopped-from-flying-to-uk-questioned-3195274
கேரள மாநிலம், திருவனந்தபுரம் காரக்கோணத்திலுள்ள சி.எஸ்.ஐ மருத்துவக் கல்லூரியில் நடந்த பண மோசடி சம்பந்தமாக அமலாக்கத் துறை நான்கு இடங்களில் சோதனை நடத்திவருகிறது. பிஷப் இல்லம் உள்ளிட்டவை அடங்கிய, தலைமையிடமான திருவனந்தபுரம் பாளையத்திலுள்ள எல்.எம்.எஸ் வளாகத்திலும், நெய்யாற்றின்கரை அருகேயுள்ள சிறியகொல்லா பகுதியில் அமைந்துள்ள சபைச் செயலாளர் பிரவீனின் வீட்டிலும், காரக்கோணம் சி.எஸ்.ஐ மெடிக்கல் காலேஜிலும், மெடிக்கல் காலேஜ் இயக்குநராக இருக்கும் ஸ்ரீகாரியம் பகுதியைச் சேர்ந்த பெனட் ஆபிரகாம் வீட்டிலும் அமலாக்கத்துறை சோதனை நடை பெற்று வருகிறது. அமலாக்கத்துறை விசாரணைக்குச் செல்லும்போது சபைச் செயலாளர் பிரவீன் இல்லை என்றும், அவர் சென்னை சென்று விட்டதாகவும் கூறப்படுகிறது.
இது பற்றி வெள்ளறடை மற்றும் மியூசியம் காவல் நிலையங்களில் மாணவர்கள் சார்பில் புகார்கள் அளிக்கப்பட்டிருந்தன. இரண்டு காவல் நிலையங்களிலும் உள்ள வழக்குகள் பின்னர் க்ரைம் பிராஞ்ச் போலீஸுக்கு மாற்றப்பட்டது. க்ரைம் பிராஞ்ச் போலீஸ் விசாரணை நடத்தி நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தது. அந்தக் குற்றப்பத்திரிகையில், பணத்தை திருப்பிக் கொடுக்கலாம் என உறுதியளித்த பிஷப்பின் பெயர் இல்லை என்றும், க்ரைம் பிராஞ்ச் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையை நிராகரிக்க வேண்டும் எனவும் மாணவர்கள் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.
https://www.thenewsminute.com/article/kerala-medical-college-scam-bishop-stopped-travelling-uk-ed-issues-notice-166248
https://www.thequint.com/south-india/church-of-south-india-csi-bishop-dharmaraj-rasalam-appears-before-enforcement-directorate-corruption-charges
No comments:
Post a Comment