Saturday, July 30, 2022

கீழச்சேரி சேக்ரட்ஹார்ட் பள்ளி மாணவி சரளா தற்கொலை. விடுதியில் சட்ட மீறல்கள்? தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையர்

கீழச்சேரி பள்ளி விடுதியில் குழந்தைகள் உரிமை மீறல்:மாணவி தற்கொலை குறித்த விசாரணையில் அறிக்கை

 சென்னை கத்தோலிக்க மயிலாப்பூர் விவிலிய மாவட்ட நிர்வாகம் கீழான  கீழச்சேரி சேக்ரட் ஹார்ட் மேல்நிலைப் பள்ளி 

கீழச்சேரி:கடம்பத்துார் ஒன்றியம், கீழச்சேரி  சேக்ரட் ஹார்ட் பள்ளி மாணவி சரளா தற்கொலை வழக்கு விவகாரத்தில், பள்ளி மற்றும் மாணவியின் உறவினர்களிடம் நடத்திய விசாரணையில், குழந்தைகள் உரிமை மீறல் சம்பவம் நடந்துள்ளது என கண்டறியப்பட்டுள்ளது.
''இது சம்பந்தமான முழு அறிக்கையும் விரைவில் மத்திய அரசிடம் சமர்ப்பிப்போம்,'' என, தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையர் பிரியங்க் கனுங்கோ தெரிவித்தார். 


திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்துார் ஒன்றியம்,  கீழச்சேரி ஊராட்சியில் உள்ள  கத்தோலிக்க சேக்ரட் ஹார்ட் மேல்நிலைப் பள்ளியில், கடந்த 25-ம் தேதி, பிளஸ் 2 மாணவி சரளா, துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த வழக்கு, சி.பி.சி.ஐ.டி.,யிடம் ஒப்படைக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.


இந்நிலையில், தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையர் பிரியங்க் கனுங்கோ தலைமையிலான ஐந்து பேர் குழுவினர், மாணவி  சரளா தற்கொலை செய்ததாக கூறப்படும் விடுதியில், திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அல்பி ஜான் வர்கீஸ். எஸ்.பி., கல்யாண், ஊரக வளர்ச்சி முகமை
திட்ட இயக்குனர் ஜெயகுமார், சப் - கலெக்டர் மகாபாரதி, வட்டாட்சியர் செந்தில்குமார் ஆகியோருடன் இணைந்து விசாரணை மேற்கொண்டனர்.

விடுதி காப்பாளர்கள், ஆசிரியர்கள், போலீசார், வருவாயத் துறை என, அனைவரிடமும் விசாரணை மேற்கொண்டனர். இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக நடந்த விசாரணைக்கு பின், திருவள்ளூர் கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள விருந்தினர் மாளிகையில், மாணவியின் தாய் முருகம்மாள், சகோதரர் சரவணன், அவரது மனைவி மீனா, சித்தி குட்டியம்மாள் ஆகியோரிடம், தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் விசாரணை மேற்கொண்டது.
பின், இதுகுறித்து தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையர் பிரியங்க் கனுங்கோ கூறியதாவது: மாணவியின் மரணம் குறித்து, நேற்று காலை பள்ளி விடுதியில் விசாரணை மேற்கொண்டோம். பள்ளியின் நிர்வாகி, தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், சக மாணவியரிடம் விசாரணை மேற் கொண்டோம்.இது சம்பந்தமாக ஏற்கனவே விசாரணை செய்த எஸ்.பி., கலெக்டர் மற்றும் சி.பி.சி.ஐ.டி., அதிகாரிகள், பிரேத பரிசோதனை செய்த மருத்துவர்கள் குழு ஆகியோரிடமும், மாணவியின் மரணம் சம்பந்தமான தகவல்களை சேகரித்துள்ளோம்.
மாணவியின் உறவினர்களிடமும் மரணம் சம்பந்தமான சந்தேகங்களை கேட்டறிந்தோம். விடுதியில் மேற்கொண்ட விசாரணையில், குழந்தைகள் உரிமை மீறல் சம்பவம் நடந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது.மேலும், இது சம்பந்தமான முழு அறிக்கையும் விரைவில் மத்திய அரசிடம் சமர்ப்பிப்போம். மத்திய அரசு தான் முடிவு செய்யும்.இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

காலில் செருப்பு, நெருப்பு இல்லத அடுப்பு பொங்கல் போட்டோ ஷூட் செய்த தமிழர் விரோத்கள்- மனிதர்களா

 காலில் செருப்பு, நெருப்பு இல்லத அடுப்பு பொங்கல் போட்டோ ஷூட் செய்த தமிழர் விரோத்கள்- மனிதர்களா