Sunday, July 24, 2022

சென்னை மத்திய தொலைபேசி ஆலோசனைக்குழு தலைவராக தயாநிதி மாறன்!

 சென்னை மத்திய தொலைபேசி ஆலோசனைக்குழு தலைவராக பொறுப்பேற்றார் மக்களவை எம்.பி., தயாநிதி மாறன்!

சன் டிவி குழுவிற்கு அன்றைய அமைச்சர் தயாநிதி மாறன் வீட்டிற்கு தந்த தொலைபேசி இணைப்பை டெலிபோன் எக்ஸ்சேஞ்ச் ஆக மாற்றி பல நூறு கோடி ரூபாய் பயன்பாடு என ஆடிட்டர் திரு.குருமூர்த்தி தினமணியில் எழுதினார், ஆனால் சிபிஐ வழக்கில் அது சில கோடிகள் என ஆனது. 

 தயாநிதி மாறன் அமைச்சர் பதிவியை துஷ்பிரயோகம் செய்ததில் நஷ்டம் 1.2 கோடி என அறிகிறேன் அதை நான் முழுமையாகத் திருப்பி செலுத்துகிறேன் என நீதிமன்றத்தில் அறிவித்தார். 

பதவியை தவறாகப் பயன்படுத்தியவரை நிதி பலத்தால் சட்ட ஓட்டைகளால் வெளியே உள்ளார். 

Two, the loss in the ‘scam’ is Rs. 1.2 crore and Maran was willing to pay that to the BSNL.https://www.thenewsminute.com/article/maran-counsel-says-rti-reply-mtnl-counters-gurumurthys-loss-figure-phone-exchange-scam-33350

தயாநிதி மாறனால் இழப்பு ரூ.440 கோடி? சி.பி.ஐ. விசாரணையில் சிக்கியது எப்படி? எஸ். குருமூர்த்தி  

First Published : 02 Jun 2011 02:00:41 AM IST


தொலைத்தொடர்புத் துறை அமைச்சகத்துக்கு சி.பி.ஐ. அனுப்பிய ஆவணத்தின் நகல்
சென்னை, ஜூன் 1: தயாநிதி மாறனின் குடும்ப வர்த்தக நோக்கத்துக்காக இந்த தனி இணைப்பகம் பயன்பட்டது என்ற மோசடியை சி.பி.ஐ. எப்படி, எதனால் விசாரிக்க நேரிட்டது என்பது தனிக்கதை. அதைத் தெரிந்துகொள்வதற்கு, சில சம்பவங்களை நினைவுகூர்வது அவசியம்.
 திமுக தலைவர் மு. கருணாநிதியின் அக்கா பேரனான தயாநிதி மாறன் 2004 ஜூன் முதல் 2007 மே வரையில் மத்திய அரசில் தகவல் தொடர்புத்துறை அமைச்சராகப் பதவி வகித்தார். கருணாநிதி குடும்பத்தில் ஹிந்தி மொழியில் சரளமாகப் பேசத் தெரிந்த அவர்தான் கருணாநிதிக்கும் சோனியாவுக்கும் இடையில் கண்களாகவும் காதுகளாகவும் - தொடர்பாளராக - செயல்பட்டார். இளமையும் துடிப்பும் மிக்க தயாநிதி மாறன் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் முதல் அரசில் மிகவும் செல்வாக்குடன் திகழ்ந்தார். அந்தக் கூட்டணியில் திமுகவின் ஆதரவு காங்கிரஸ் கட்சிக்கு மிகவும் தேவைப்பட்டது.
 அப்போது மாறன் எவ்வளவு செல்வாக்குடன் திகழ்ந்தார் என்பதற்கு சான்று வேண்டுமா? டி.டி.எச். நிறுவனத்தில் ரத்தன் டாடாவுக்கு இருந்த பங்குகளில் மூன்றில் ஒரு பங்கைத் தங்களுடைய குடும்ப நிறுவனத்துக்குத் தர வேண்டும், இல்லாவிட்டால் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று ரத்தன் டாடாவையே மிரட்டினார் என்று பேசப்பட்டது. அத்தோடு மட்டும் அல்ல, நான் மிரட்டினேன் என்பதை வெளியில் சொல்லக்கூடாது என்று கூடுதலாக வேறு மிரட்டியிருக்கிறார்.
 அப்படி இருந்த மாறன் திடீரென கோபுரத்திலிருந்து குப்பைமேட்டுக்கு வந்துவிட்டார். எல்லாம் குடும்ப ஊடகங்கள் மிதமிஞ்சிய கர்வத்தில் செய்த கோளாறுதான். தமிழக அரசியலில் செல்வாக்கு மிக்க தலைவர்கள் யார் என்று வாசகர்களிடையே கருத்தறியும் வாக்கெடுப்பு நடத்தி, அதில் கருணாநிதியின் மற்றொரு மகனான மு.க. அழகிரிக்கு மு.க. ஸ்டாலினைவிட செல்வாக்கு மிகவும் குறைவு என்று முடிவை வெளியிட்டது.
 இந்த முடிவு வெளியான 9.5.2007-ல் மதுரையில் மிகப் பெரிய வன்முறைச் சம்பவங்கள் நடைபெற்றன. கலாநிதி மாறனின் தினகரன் பத்திரிகை அலுவலகத்துக்குள் அழகிரியின் ஆதரவாளர்கள் என்று கருதப்படும் ஒரு கும்பல் புகுந்து அங்கிருந்த ஊழியர்களைத் தாக்கி, பொருள்களைச் சேதப்படுத்தி வன்முறையில் இறங்கியது. அதில் அப்பாவிகளான 3 பேர் உயிரிழந்தனர். கருணாநிதி உடனே அழகிரிக்கு ஆதரவாகச் செயல்பட்டு தயாநிதி மாறனை மத்திய அரசிலிருந்து விலக்கினார். அந்த நேரத்தில்தான் மத்தியப் புலனாய்வுக் கழகம் (சி.பி.ஐ.) தயாநிதி மாறன் தன்னுடைய குடும்ப வியாபார நோக்கத்துக்குப் பயன்படுத்திய இந்த தனி இணைப்பகம் குறித்த தகவல்களைச் சேகரித்தது.
 மாறன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று 2007 செப்டம்பர் மாதமே சி.பி.ஐ. பரிந்துரைத்தது. ஆனால் அதற்குப் பிறகு கடந்த 44 மாதங்களாக சி.பி.ஐ. இந்த விஷயத்தில் கும்பகர்ண தூக்கம் தூங்கிக் கொண்டிருக்கிறது. தயாநிதி மாறன் துறைக்கு ஆ. ராசா அமைச்சரானார். ஆ. ராசாவிடம் ஒப்புதல் பெற்று மேல் நடவடிக்கைக்கு வழி செய்யுமாறு தொலைத்தொடர்புத்துறை செயலருக்கு சி.பி.ஐ. கடிதம் எழுதியது.
 இதற்கிடையே 2009-ல் மக்களவை பொதுத் தேர்தலைச் சந்திக்க வேண்டியிருந்ததால் கருணாநிதியின் குடும்பத்தில் சமாதானக் கொடி ஏற்றப்பட்டது. மகன்களுக்கும் அக்கா பேரன்களுக்கும் இடையில் சமரசத்தை ஏற்படுத்தி மீண்டும் குடும்பத்தில் ஒற்றுமையை நிலைநாட்டினார் கருணாநிதி. அனைவரும் ஒற்றுமையாக இருக்கும் இக்காட்சியைக் காணும்போது நெஞ்சம் நெகிழ்கிறது, கண்கள் பனிக்கின்றன என்று உருகினார் கருணாநிதி. ஒரு வேளை சி.பி.ஐ.யின் அந்த கடிதத்தைக் காட்டித்தான் அக்கா பேரன்களை வழிக்குக் கொண்டுவந்தாரோ என்னவோ?
 2009 மக்களவை பொதுத் தேர்தலுக்குப் பிறகு மீண்டும் தொலைத்தகவல் தொடர்புத்துறையைப் பெற தயாநிதி மாறன் முயற்சி செய்தார், ஆனால் வெற்றி பெறவில்லை. அதன் பிறகு ஜவுளித்துறை அமைச்சரானார், இன்றுவரை அந்தப்பதவியில் நீடிக்கிறார்.
 குடும்பத்துக்குள் பூசல் தணிந்துவிட்டபடியால் சி.பி.ஐ. கடிதமும் கவனிக்கப்படாமல் தொலைத்தகவல் தொடர்புத்துறையில் எங்கோ தூங்குகிறது. 2ஜி அலைக்கற்றை ஊழல் புகார் காரணமாக 2010 நவம்பரில் ஆ. ராசா பதவியை ராஜிநாமா செய்தார். கபில் சிபல் அத்துறை அமைச்சரானார். அன்றிலிருந்து கபில் சிபலும் சி.பி.ஐ.யின் கடிதம் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் சும்மாவே இருக்கிறார்.
 ஜவுளித்துறை அமைச்சர் என்ற வகையில் தயாநிதி மாறனும் கபில் சிபலோடு சேர்ந்து மத்திய அமைச்சரவைக் கூட்டங்களில் பங்கேற்கிறார். சி.பி.ஐ. கடிதம் எழுதி 44 மாதங்களாகியும் ஒரு நடவடிக்கையும் இல்லை.
 எங்காவது ஊழல் நடந்தால் கணமும் தாமதிக்காமல் மிகத் தீவிரமாக விசாரித்து நடவடிக்கை எடுப்பேன் என்று ஊழலுக்கு எதிராக உண்ணாவிரதம் இருக்கப் போவதாக மிரட்டும் யோகாசன குரு பாபா ராம்தேவுக்குக் கடிதம் எழுதுகிறார் பிரதமர் மன்மோகன் சிங்.
 தயாநிதி மாறனுக்கு மிகவும் நெருக்கமானவர் என்று கருதப்படும் சோனியா காந்தியோ இன்னமும் ஒருபடி மேலேபோய், ஊழலை என்னால் சகித்துக் கொள்ளவே முடியாது - அதாவது மற்றவர்களின் ஊழலை - சகித்துக்கொள்ளவே முடியாது என்பதை அறிவித்துக் கொண்டே இருக்கிறார்.
 ஊழலுக்கு எதிராக சோனியா விடுத்துள்ள போர்ப்பரணியும், காலதாமதம் செய்யாமல் ஊழலை ஒழித்தே தீருவேன் என்று பிரதமர் மன்மோகன் சிங் செய்துள்ள கர்ஜனையும் நம்மை விலா நோகச் சிரிக்க வைக்கின்றன. பி.எஸ்.என்.எல். நிறுவனத்துக்கு கோடிக்கணக்கான ரூபாய் வருவாய் இழப்பை ஏற்படுத்தியவரை எதிரில் வைத்துக் கொண்டே இவர்கள் செய்யும் அட்டகாச அறிவிப்புகளைக் கண்டு வேறு என்னதான் செய்வது?
 பின்குறிப்பு: தயாநிதி மாறன் கடந்த சில நாள்களில் சோனியா காந்தியையும் பிரதமர் மன்மோகன் சிங்கையும் தனித்தனியே சந்தித்து நீண்டநேரம் ஆலோசனையில் ஈடுபட்டதாகத் தெரியவருகிறது. ஊழல் செய்தவரைப் போலவே இவர்களுக்கும் வெட்கம் இல்லை என்று தெரிகிறது.

http://yousufansari.blogspot.com/2011/06/440.html

No comments:

Post a Comment

ஈவெராமசாமியார்- மணியம்மாள் திருமணம் பற்றி அண்ணாதுரையார்

 ஈவெராமசாமியார்- மணியம்மாள் திருமணம் பற்றி அண்ணாதுரையார்   அண்ணா எழுதிய கட்டுரை : பெரியார் மணியம்மை திருமணம்     செப்டம்பர் 20, 2023  https:...