Sunday, July 24, 2022

பாம்பன் சுவாமிகள் வார்ட் சென்னை அரசு பொது மருத்துவமனை

1923 வது வருஷம், 

பாம்பன் சுவாமிகள் சென்னைல ஒரு ரோட்டில் நடந்து செல்லும் போது  பாதையில் எதிர்பாராத விதமா ஒரு குதிரை வண்டி அவர் மேல் மோதுகிறது..

அவரோட கால் எலும்புல முறிவு ஏற்படுகிறது.

அவர் சென்னை அரசு பொது மருத்துவமனைல சேர்கப்படுகிறார்..

73  வயது ஆனதால இனி இவரோட எலும்பு கூடுறது ரொம்ப சிரமம் னு டாக்டர் சொல்றாங்க..

இவர் ரொம்ப காலமா உப்பு போடாத  பச்சரிசி பச்சைப்பயறு பொங்கல் மட்டுமே சாப்பிட்டு வந்ததால், ரொம்ப பலகீனமாக இருக்காருன்னு சொல்றார் மருத்துவர்..

அடுத்த நாள்ல இருந்து அவர் இயற்றிய சன்முக கவசம் தொடர்ந்து ஆறு நாட்கள் பாடிட்டே இருக்கார். ஆறாவது நாள் அவர் கனவுல சேவல், மயிலோட காட்சியளிக்கிறார் குழந்தைவேலன்.

மறுநாள் எழுந்து நடக்கிறார் பாம்பன் சுவாமிகள்.

டாக்டர்களுக்கு ஒன்னுமே புரியல...X ray எடுத்து பாத்த டாக்டர்களுக்கு மிகப்பெரிய ஆச்சரியம்.அவரோட எலும்புகள் கூடி இருந்துச்சு.

நம்பாதவர்கள்..இன்றும் சென்னை அரசு பொது மருத்துவமனையில மான்ரோ வார்ட் னு ஒரு வார்ட்  இருக்கு.

அங்க  இவருக்கு நடந்த அதிசயங்கள்  அவரோட x ray வோட  ஆவணப்படுத்தப்பட்டிருக்கும் சென்று காணலாம்...

  1. அமுதசுரபி தீபாவளி மலர் 2004; ஸ்ரீ பாம்பன் சுவாமிகள்; பக்கம் 150,151,152

  1923-ஆம் ஆண்டு திசம்பர் 27 அன்று சென்னை, தம்பு செட்டி வீதியில் சென்று கொண்டிருந்த சுவாமிகள் மீது, குதிரை வண்டிச் சக்கரம் இடது கணைக்கால் மீது ஏறியதால் கால் எலும்பு முறிந்து சுவாமிகள் பொதுமருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார். இந்த விபத்து நடந்த போது பாம்பன் சுவாமிகளின் வயது 73. ஆங்கிலேய மருத்துவர்களால் குணமடைவது கடினம் என்று கூறிக் கை விடப்பட்டார். அங்கு தொடர்ந்து சண்முகக் கவசம் பாடிவந்தமையால் மயில் வாகனத்தில் வந்த முருகன் அருளால் கால் எலும்பு சேர்ந்ததால் அந்நாள் மயூர சேவன விழா என ஆண்டுதோறும் மார்கழி மாதத்தில் சிறப்பாக நடை பெறுகிறது. சென்னை மருத்துவமனையில் "மன்ரோ வார்டில்" பாம்பன் சுவாமிகளின் திருவுருவப் படம் மாட்டப்பட்டு நோயாளிகளால் வழி படப்படுகிறார்.

No comments:

Post a Comment

காலில் செருப்பு, நெருப்பு இல்லத அடுப்பு பொங்கல் போட்டோ ஷூட் செய்த தமிழர் விரோத்கள்- மனிதர்களா

 காலில் செருப்பு, நெருப்பு இல்லத அடுப்பு பொங்கல் போட்டோ ஷூட் செய்த தமிழர் விரோத்கள்- மனிதர்களா