Thursday, July 14, 2022

பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா

பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பை சார்ந்த முன்னாள் காவல் துறை அதிகாரி, ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த முகமது ஜலாலுதீன் மற்றும் தடை செய்யப்பட்ட சிமி இயக்கத்தில் பணியாற்றி பின்னர் தற்போதைய பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா மற்றும் எஸ் டி பி ஐ இயக்கத்தை சேர்ந்த அத்தர் பர்வேஸ் ஆகிய இருவர், பீகார் மாநிலத்தில் தற்காப்பு கலைகளை பயிற்றுவிப்பதாக கூறி நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து இளைஞர்கள் பலரை வரவழைத்து, '2047க்குள் கோழை ஹிந்துக்களை அடிபணிய வைப்பதே குறிக்கோள்' என்றும் 'இந்த இலக்கை எட்டுவதற்கு 10 விழுக்காடு இஸ்லாமியர்கள் பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பில் இணைய வேண்டும்' என்றும், மத ரீதியான பல்வேறு கோஷங்களை முன் வைத்து ஹிந்துக்களுக்கு எதிராக இளைஞர்களை தூண்டிவிட்டதாகவும், அதற்காக ஆயுத பயிற்சி அளித்ததாகவும் குற்றம்சாட்டப்பட்டு, நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாக பீகார் காவல்துறை தெரிவித்துள்ளது.

அத்தர் பர்வேஸ் என்ற நபரின் சகோதரன் பீகாரில் 2001 ம் ஆண்டு நடைபெற்ற குண்டுவெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட தீவிரவாதி என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கான பல்வேறு ஆதாரங்களையும், ஆவணங்களையும் காவல்துறை கைப்பற்றியுள்ளது. மேலும், துருக்கி நாட்டின் துணையோடு, இந்தியாவை எதிர்த்து முழுமையான ஆயுத போராட்டத்தை நடத்த படையை தயார்படுத்த திட்டமிட்டிருப்பதாகவும், மேலும் இதர இஸ்லாமிய நாடுகள் இந்தியாவையும், ஹிந்துக்களையும் அடிபணிய வைக்க உதவுமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இதே போன்று கடந்த 6ம் தேதியன்று,பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பை சேர்ந்த ஷேக் ஷாதுல்லா(40), முகமது இம்ரான்(22) மற்றும் முகமது அப்துல் மோபின் (27) ஆகிய மூவரை தேசத்திற்கு எதிராக போரிட இஸ்லாமிய இளைஞர்களுக்கு பயிற்சி அளித்ததாக சட்ட பிரிவு எண் 120-A, 120-B, 153-A, 141, மற்றும் 13 (1)(b) (சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டம் UAPA) உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு தொடர்ந்து தெலுங்கானா, நிஜாமாபாத் போலீசார் கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பு உள்ளூர் இளைஞர்களுக்கு ஷரியத் சட்டத்தையும், இஸ்லாமிய அடிப்படைவாதத்தையம் போதித்து இந்தியாவிற்கு எதிராக யுத்தம் புரிய ஆயுத பயிற்சியை அளிக்கிறது என்றும், அம்மாநிலத்தில் ஜிகாத் புரிய பல இளைஞர்களை சேர்க்கிறது என்றும் கைது செய்யப்பட்டவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளது அதிர்ச்சியளிக்கிறது.
தமிழகத்திலும், கேரளாவிலும் கூட பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா மற்றும் எஸ் டி பி ஐ அமைப்பை சேர்ந்தவர்கள் ஹிந்து இயக்கங்களை சார்ந்த சசிகுமார், ராமலிங்கம் உள்ளிட்ட பல்வேறு படு கொலைகள் மற்றும் ஐ எஸ் அமைப்புக்கு ஆதரவளிப்பது உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தொடர்புடையவர்கள் என்று கைது செய்யப்பட்டு ள்ளார்கள். இது குறித்து நாம் தொடர்ந்து எச்சரித்து வந்த போதிலும் தமிழக காவல்துறை தக்க நடவடிக்கைகளை எடுக்காதிருப்பது கண்டனத்திற்குரியது. தமிழக ஆளுநர் அவர்களும் இது குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளதை தமிழக காவல்துறை கவனத்தில் கொள்ள வேண்டும்.

தடை செய்யப்பட்ட சிமி இயக்கத்தில் இருந்தவர்களையும், பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா மற்றும் எஸ் டி பி ஐ இயக்கங்களை சார்ந்த மத அடிப்படைவாதிகளையும் தமிழக காவல்துறை உன்னிப்பாக கண்காணிக்க வேண்டும். அந்த இரு அமைப்புகளையும் தடை செய்வதன் மூலமே, தமிழகத்தில் மதநல்லிணக்கத்தை பேணி காக்க முடியும். மத அடிப்படைவாதத்தை முற்றிலும் ஒடுக்க போலி மதசார்பின்மை கொள்கையை கொண்டு, ஓட்டுக்காக ஒரு சில மதங்களுக்கு மட்டும் வால் பிடிக்கும் ஹிந்து விரோத கட்சிகள், இனியாவது நாட்டு மக்களின் நன்மை கருதி மத அடிப்படைவாதிகளை முற்றிலும் ஒழிக்க முன் வர வேண்டும். முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள், நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து மத அடிப்படைவாதத்தை முன்னெடுக்கும் பயங்கரவாதிகள் மற்றும் இயக்கங்கள் மீது இரும்பு கரம் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.





 

No comments:

Post a Comment

திருக்குறளை இழிவு படுத்தும் மு.கருணாந்தி உரை

வள்ளுவத்திற்கு உரை எழுதுவர் மூல வெண்பாவிற்கு பொருள் தராமா தான் ஏற்ற நாத்தீக மூட நம்பிக்கைக்கு ஏற்ப பிதற்றுவது பைத்தியக்காரத்தனம் இதோ ஓர் உத...