கிறிஸ்தவ மத போதகர் உட்பட மூவர் மீது வழக்கு: கள்ளக்காதலி கணவனைத் தாக்குதல் வீடு புகுந்து பொருட்கள் சூறை
கோவை : கள்ளக்காதல் விவகாரத்தில் ஏற்பட்ட மோதலில் வீடு புகுந்து பொருட்களை சூறையாடிய மத போதகர் உட்பட மூவர் மீது போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
கோவை, சரவணம்பட்டி, சிவஇளங்கோ நகரை சேர்ந்த செல்வராஜ் என்பவர் மகன் ஜெரீன், 32. இவரது மனைவி சுசித்ரா, 29.அதே பகுதியை சேர்ந்த சர்ச் போதகர் ஜோஷ்வா, 36, என்பவருக்கும், சுசித்ராவுக்கும் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்ததாக தெரிகிறது.இதையறிந்த ஜெரீன் தன் மனைவியை கண்டித்தார். இரு குடும்பத்தாரும் கண்டித்தும் இருவரும் தொடர்ந்து நெருக்கமாக இருந்து வந்தனர்.
இதனால், மனவேதனை அடைந்த ஜெரீன் தன் மனைவியை பிரிந்து, சரவணம்பட்டியில் உள்ள பெற்றோர் வீட்டில் வசிக்கிறார்.இந்நிலையில், நேற்று முன்தினம் ஜெரீன் வீட்டுக்கு சுசித்ரா, அவரது தந்தை அழகேசன் மற்றும் போதகர் ஜோஷ்வா ஆகியோர் சென்றனர்.அப்போது அவர்கள் சமரசம் பேசி ஜெரீனை, சுசித்ராவுடன் சேர்ந்து வாழ வற்புறுத்தினர். ஆனால், ஜெரீன் மனைவியை ஏற்க மறுத்துவிட்டார்.
இதனால் ஆத்திரமடைந்த மூவரும் சேர்ந்து ஜெரீனை தாக்கினர். பின் வீட்டில் இருந்த பொருட்களை சூறையாடி சென்றனர்.இதுகுறித்து சரவணம்பட்டி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. மத போதகர் ஜோஷ்வா, சுசித்ரா, அவரது தந்தை அழகேசன் மீது, போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
https://www.dinamalar.com/news_detail.asp?id=3085810
No comments:
Post a Comment