Sunday, July 17, 2022

சங்க காலம் முதல் தமிழகத்தில் கொத்தடிமை- பலகோடி தன்னார்வ நிறுவன மோசடி நூல்

 'வரலாற்று திரிபு " மா.மாரிராஜன்.

The book has no author name and is available free here as Pdf. from an NGO 40 Crores annual budget, which gets around 4 Crores foreign funding annually.


Bonded labourers of tamilnadu from sangam era to the present. என்னும் ஒரு ஆங்கில நூல்.
இந்நூலில் பக் 72 இல் ஒரு செய்தி.
திருவிடந்தை பெருமாள் கோவில் கல்வெட்டு.கி.பி.1002-12 மீனவக் குடும்பப் பெண்கள் தங்கள் வறுமையின் காரணமாக தங்களை அடிமையாக கோவிலுக்கு விற்றுள்ளனர் .
இதுதான் அந்நூலில் உள்ள கட்டுரையாளரின் செய்தி. 1002 என்பது இராஜராஜர் காலம்.
இந்நூல் குறிப்பிடும் அந்தக் கல்வெட்டை எடுத்துப் பார்த்தால்..கட்டுரையாளர் கருத்துக்கும் இக்கல்வெட்டுச் செய்திக்கும் யாதொரு சம்பந்தமும் இல்லை.
S.i.i.vol 36 no 274.திருவிடந்தை. இராஜராஜரின் 17 ஆம் ஆட்சியாண்டு. கி.பி.1002.

இக்கிராமத்தைச் சேர்ந்த 12 மீனவ குடும்பங்கள்..
தங்கள் கடல்புக்கும் இறையாக 9 கழஞ்சு பொன் முதலீடாக வைத்து இராஜராஜரின் பிறந்த நாளான ஆவணி சதயத்தன்று 7 நாட்கள் விழா நடத்த ஏற்பாடு செய்கின்றனர்..
( இராஜர் பிறந்தது ஐப்பசி சதயம்தான். ஒவ்வொறு மாத சதயமும் அவரது பிறந்தநாளாகக் கொண்டாடப்படும்) விழா நடத்தும் இவ்வுரிமை தங்களது குடும்பத்தார்க்கே என்று ஒப்பந்தமும் போட்டுள்ளனர். இதுதான் இக்கல்வெட்டில் உள்ள செய்தி.

இக்கல்வெட்டு கூறும் செய்தியை எவ்வளவு வன்மமாக திரித்து..ஆய்வு நூலாக வெளியிட்டுள்ளனர்.
வரலாற்றை திரித்து திரித்து எழுதும் இவர்களின் நோக்கம் எதுவோ... இதைப் படித்து கம்புசுற்றும் போராளிகளை சமாளிப்பதுதான் பெரும்பாடாக உள்ளது.
அன்புடன்..
மா.மாரிராஜன்.
கல்வெட்டுப் பிரதி உதவி. திரு.கோபால் பாலகிருஷ்ணன்.

No comments:

Post a Comment