Wednesday, July 27, 2022

சிஎஸ்ஐ பாதிரி.மில்டன் கனகராஜ் மாணவியை காதலித்து ஏமாற்றி கைது

திருநெல்வேலி சிஎஸ்ஐ விவிலிய மாவட்ட KTC நகர் சர்ச் பாதிரி 2 வருடமாக மாணவியை காதலித்து நெருக்கமாக பழகிய ரெவரண்ட். மில்டன் கனகராஜ்.கைது 

https://m.dinamalar.com/detail.php?id=3087040

பாதிரி மில்டன் வேறு பெண்ணை திருமண சம்பந்தம் பேச மாணவி அழுது மிரட்டல் செய்தார்.மாணவியை உயிரோடு எரித்து கொல்வேன் என மிரட்டிய பாதிரி கைது.

https://www.dailythanthi.com/News/State/the-person-who-threatened-the-girl-was-arrested-755006

திருநெல்வேலி: மாணவியை காதலித்து ஏமாற்றிய சி.எஸ்.ஐ., பாதிரியார் கைது செய்யப்பட்டார்.

திருநெல்வேலி போலீஸ் ஆயுதப்படை மைதானம் பகுதியை சேர்ந்த இன்பராஜ் மகன் மில்டன் கனகராஜ் 26. இறையியல் படிப்பு முடித்து கே.டி.சி. நகர் சி.எஸ்.ஐ.,  சர்ச்-ல் பயிற்சி பாதிரியாக உள்ளார்.

இவரது வீட்டிற்கு அருகில் வசித்த ஒரு மாணவியுடன் ஒன்றரை ஆண்டாக நெருங்கி பழகி உள்ளார். திருமணம் செய்வதாக கூறி நெருக்கமாக இருந்துள்ளார். ஆனால் பாதிரியாரின் பெற்றோர் அவருக்கு வேறு இடத்தில் பெண் பார்த்துள்ளனர்.

மாணவி சென்று கேட்டபோது அவதூறாக பேசியதோடு எரித்து கொன்று விடுவதாக மிரட்டி உள்ளார். மாணவியின் புகாரின் பேரில் தாலுகா போலீசார் 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து மில்டன் கனகராஜை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

No comments:

Post a Comment

உரிமை இல்லாத இடத்திற்கு இழப்பீடு கேட்க முடியாது - சென்னை உயர் நீதிமன்றம்

  உரிமை இல்லாத இடத்திற்கு இழப்பீடு கேட்க முடியாது - சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு! - PANDIYAN LODGE COMPENSATION புறம்போக்கு இடத்தில் கட்டப...