Sunday, July 17, 2022

தர்மபுரி MP, செந்தில் குமார்- பேசியது தவறு - இனி இதுபோல நடக்காது

திருவள்ளுவர் பூமாதேவியை நிலம் என்னும் நல்லாள் நகும் எனக் கூறுவார், அகழ்வாரைத் தாங்கும் நிலம் போல எனப் பொருமைக்கு உதாரணம் காட்டுவார்.
 
உலகைப் படைத்த இறைவனை வணங்கும் தமிழர் மெய்யியல் சனாதன மரபில், இயற்கையையும் போற்றுவோம், திருவள்ளுவர் வான்சிறப்பு என இரண்டாவது அதிகாரம் மழையைப் போற்றுவார்.
பூமியைத் தோண்டி சேதப் படுத்தி அதன் மேல் கட்டிடம், அணை போன்ற திட்டங்கள் முன்பாக் பூமாதேவியிடம் அனுமதி பெற்வும், இவ்விடத்தில் விபத்து ஏதும் ந்நடக்கக் கூடாது எனவும் வேண்டி செய்வதே பூமி பூஜை.  https://tamil.asianetnews.com/politics/i-will-not-do-this-mistake-again-dmk-mp-senthilkumar-revock-hes-openion-on-hindu-formalities--rf7iwx
இந்து கோயில் வருமானத்தை இந்த அரசு எடுத்துக்குதுங்க.. இனிமே இந்த தப்பு பண்ண மாட்டேங்க... பல்டி அடித்த திமுக MP

இந்து கோவில் வருமானங்களை அரசு  பிடுங்கிக் கொள்கிறது அப்படி இருக்கும்போது ஒரு அரசு நிகழ்ச்சியில் இந்து முறைப்படி பூஜை செய்வதில் என்ன தவறு இருக்கிறது என இந்து முன்னணி கட்சி பிரமுகர் எழுப்பிய கேள்விக்கு இனி இப்படி தவறு செய்யமாட்டேன் 

இந்து கோவில் வருமானங்களை அரசு  பிடுங்கிக் கொள்கிறது அப்படி இருக்கும்போது ஒரு அரசு நிகழ்ச்சியில் இந்து முறைப்படி பூஜை செய்வதில் என்ன தவறு இருக்கிறது என இந்து முன்னணி கட்சி பிரமுகர் எழுப்பிய கேள்விக்கு இனி இப்படி தவறு செய்யமாட்டேன் என திமுக எம்பி செந்தில்குமார் பின் வாங்கி உள்ளார். இதற்கான ஆடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

திமுக ஆட்சிக்கு வந்தது முதல் அரசியல் ரீதியாகவும் சட்ட ரீதியாகவும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அது மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பையும் பாராட்டையும் பெற்று வருகிறது, அதே நேரத்தில் பாஜக- அதிமுக அரசின் நடவடிக்கைகளை கடுமையாக விமர்சித்து வருகின்றன. குறிப்பாக பாஜக மற்றும் இந்து இயக்கங்கள் திமுக இந்துக்களுக்கு எதிராகவும்,  இந்து மதத்திற்கு எதிராகவும் செயல்பட்டு வருவதாக தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றன.

இந்நிலையில் தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த தாராபுரம் ஏரியல் நடந்த அரசு விழாவில் இந்து முறைப்படி நடத்தப்பட்ட பூஜை நிகழ்ச்சிக்கு அத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அது சமூகவலைதளத்தில் வைரலான நிலையில் தற்போது தன் செயலுக்கு அவர் வருத்தமும் தெரிவித்துள்ளார். 

முழு விவரம் பின்வருமாறு:- தர்மபுரி மாவட்டம் ஆலங்குளம் ஏரியில் 1.38 லட்சம் மதிப்பில் ஏரி புனரமைக்கும் பணி நடைபெற உள்ளது, இப்பணியில் துவக்கவிழாவில் தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார் கலந்து கொண்டார். அப்போது பொதுப்பணித்துறை அதிகாரிகள்  பூஜைக்கு ஏற்பாடு செய்திருந்தார்.

அப்போது ஒரு புரோகிதரை வரவழைத்து இந்து முறைப்படி சாங்கியம் செய்யப்பட்டது. இதை கண்டு கொதிப்படைந்த  நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார், தற்போது தமிழகத்தில் நடப்பது திராவிட மாடல் ஆட்சி, இது இந்து மாடல் ஆட்சி அல்ல, அரசு விழாவில் இதுபோல மத சம்பிரதாயங்கள் செய்யக் கூடாது என்பது உங்களுக்குத் தெரியாதா என அதிகாரிகளிடம் ஆவேசம் அடைந்தார்.

இது போன்ற மத அடையாளத்துடன் அரசு நிகழ்ச்சிகள் செய்யலாம் என எந்த இடத்திலும் விதிமுறைகள் இல்லை, அப்படி இருக்க நீங்கள் ஏற் இப்படி செயல்படுகிறீர்கள். நீங்கள் இப்படி ஒரு மதத்தை மட்டும் வைத்து வழிபாடு செய்தால் மற்ற இரு மதங்கள் எங்கே, கிறிஸ்தவ மதத்தையும் இசுலாமிய மதத்தையும் ஏன் அழைக்கவில்லை கிறிஸ்தவ மதத்தையும், இஸ்லாமிய மாதத்தையும் இங்கு அழைத்திருக்கவேண்டுமே, ஏன் இந்து மதத்தை மட்டும் அழைத்தீர்கள் என அவர் நிகழ்சிக்கு ஏற்பாடு செய்த  அதிகாரியை சரமாரியாக  கேள்வி எழுப்பு திக்குமுக்காட வைத்தார். அப்போது அந்த அதிகாரி எம்.பியிடம் மன்னிப்பு கோரினார். 

பின்னர் அங்கு பூஜைக்கு செய்யப்பட்டிருந்த ஏற்பாடுகளுப் அகற்றப்பட்டது. மத நல்லிணக்கம் குறித்து எம்.பி செந்தில்குமார் பேசிய வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது. அதில் பல இந்து அமைப்பினர் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த வரிசையில் இந்து முன்னணியின் நீலகிரி மாவட்ட செயலாளர் குட்டி என்பவர் செந்தில்குமார் எம். பியை தொலைபேசியில் தொடர்புகொண்டு, சில கேள்விகளை முன்வைத்துள்ளார். அவரின் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் திணறிய  எம்பி, இப்போது புரிந்து கொண்டேன் இனிமேல் இப்படி நடக்காது என அவரிடம் வருத்தம் தெரிவித்துள்ளார். அந்த ஆடியோவில் கூறியிருப்பதாவது:- 

திராவிட இயக்கத்தைச் சேர்ந்த உங்களுக்கு ஆன்மீகத்தின் மீது நம்பிக்கை இல்லை என்று சொல்வதில் தவறு இல்லை, அறநிலைத்துறை என்ற ஒரு துறை உள்ளது, அந்த துறையில் வரும் வருமானம் முழுவதையும் அரசு தின்கிறது, அதுபோல கோயில்களை அரசா கட்டியது, இல்லை நமது முன்னோர்கள் கட்டிய கோவில், இந்த கோவில் வருமானத்தை அரசு எடுத்துக்கொள்கிறது, ஆனால் மசூதியில் அல்லது  கிறிஸ்தவ ஆலயங்களில் இருந்து வருகிற வருமானத்தை அரசு எடுப்பதில்லையே என அவர் கேள்வி எடுப்பினார்.

இதற்கு மாற்றுக் கருத்த பேசாத எம்பி செந்தில்குமார், எனக்கு கோவிலுக்குப் போகும் பழக்கம் இல்லை, ஆனால் இனிமேல் இதுபோன்ற தவறு நடக்காமல் பார்த்துக் கொள்கிறேன் எனக்கூறி தான் முன்பு தெரிவித்த கருத்தில் இருந்து பின் வாங்கியுள்ளார். இதற்கான ஆடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. 

இஸ்ரேலின் எபிரேயர்களீன் பைபிள் கதைகள் மற்றும் அரேபியரின் குர் ஆன் கதை வழியிலோ அந்தக் கதை தெய்வ கதாபாத்திர வழிபாடு தான், பூமி -இயற்கை மதிப்பது கிடையாது

பூமி பூஜை எதற்கு போடுறாங்க..?
பூமியை தாயாய் வணங்கி.. அதன் மீது தோண்டுற பள்ளம், ரணத்தை தாங்கிட்டு இடர்பாடு எதுவும் இல்லாம எடுத்த வேலை நல்லபடியா முடிய வேண்டும் என தான்..இது நம்பிக்கை..
வயல்ல அறுவடை பண்றப்பவும் எந்த வேலை தொடங்குனாலும் இறைவனை கும்பிட்டு தொடங்குறது தான் இந்துமதத்தவர்கள் செயல்..
இயற்கையை வணங்குறது மதம் இல்லைன்னு ஒப்பாரி வைப்பானுங்க..
இயற்கை கடவுளுக்கு நிகரானது என அதனையும் கடவுளாய் முன்னிறுத்துவது இந்து மதம் தான்.
வேற எந்த மதத்துல பூமியை வணங்க சொல்லுது.. இல்ல அவன் கடவுளா தான் பூமியை கும்பிடுவானா..?
தொல்காப்பியத்துல கூட வருணன் என நீர் கடவுளை வணங்குற கடவுள் வர்றாப்ல..
இதை பெரும்பாலும் கான்டிராக்டர், அல்லது அந்த பணியை எடுத்து செய்றவன் தான் இந்த பூஜையை நடத்துவாங்க.. அது கான்டிராக்டர் அல்லது அந்த வேலையை எடுத்தவன் செலவுல செய்றதுக்கு இந்தாளுக்கு ஏன் மூக்கு வேர்க்குது..அது அவனவன் விருப்பம்..
மக்கள் இவனை மாதிரி அரைகுறை அறிவாளி ஆட்களை தேர்ந்து எடுத்தா என்னாகும் என்பதற்கு இவனே உதாரணம்..
அரசியலமைப்பு சட்டம் வழிபாட்டு உரிமையை தந்திருக்கிறது..
சென்னை நீதிமன்றத்தில் ஏற்கனவே இதை பற்றி வழக்கு நடந்தது.. பூமி பூஜை, ஆயுத பூஜை கொண்டாட கூடாதுன்னு சொல்லி எவனோ வழக்கு போட.. நீதிமன்றம் அந்த வழக்கை நிராகரித்து விட்டது..
அந்த வழக்கின் விவரத்தை கமெண்டில் காணலாம்..
மதசார்பற்ற என்ற பதம் எல்லா மதத்தையும் ஒரே மாதிரி பார்த்தல் அல்லது மதங்களே இல்லை என எதிலும் கலந்து கொள்ளாது இருத்தல் என கூறுகிறது.
அதன் அடிப்படையில் பதவி ஏற்று கொண்டு அதற்கு மாறாக ஒரு மதத்தை மட்டும் விமர்சித்து வரும் சிலர் பதவியை தேர்தல் ஆணையம் பறிக்காமல் வைத்திருப்பது விசித்திரமானது..
நாத்திகனுக்கு மதம் இல்லை அவன் எந்த மதத்திலும் இருக்க முடியாது.. மதமில்லாததால் தான் அவன் நாத்திகன்.. அப்படி இருக்க அவன் ஏன் நான் இந்த மதம் என்ற அடிப்படையில் தேர்தலில் சீட் பெற வேண்டும்..?
முரண்..

No comments:

Post a Comment

Egmore 1800 Crore Land - Kirk church is Indian Govt Defence Land

St. Andrew's Church claim on land rejected https://www.thehindu.com/news/national/St.-Andrews-Church-claim-on-land-rejected/article16147...