Sunday, July 17, 2022

தஞ்சை பெரிய கோவிலை சிதைத்த கிறிஸ்துவ ஆங்கிலேயர் கொடூரம்

மா.மாரிராஜன்.

 1858 ல்.. ஆங்கில கிழக்கிந்திய கம்பெனியின் ஆட்சி இந்தியாவில் முடிவுக்கு வந்து, பிரிட்டனின் நேரடி ஆங்கிலேயர் ஆட்சி இந்தியாவில் ஏற்பட்டது.

 
அப்போதைய ஆங்கில அரசால் 1886 ல் இந்தியத் தொல்லியல் துறை உருவாக்கப்பட்டது. Archaeological survey of india ( ASI) .

இத்துறையின் சென்னை மாகாண கல்வெட்டியல் துறை அதிகாரியாக நியமிக்கப்பட்டவர், ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த Dr. Euger julius theodor Hultzsch.
சுருக்கமாய்.. E.ஹூல்ஸ்..இவர்தான் தஞ்சைப்பெரியகோவிலில் உள்ள கல்வெட்டுகளை படியெடுத்து ஆவணப் படுத்தியவர். நூலாக வெளியிட்டவர். இதுதான் இவரது பணி. இதற்காகவே நியமிக்கப்பட்ட அரசு அதிகாரி இவர். ஹூல்ஸ் செய்த பணிகள் நிச்சயம் போற்றுதலுக்குரியது. பாரட்டுக்குரியவர்தான்.
கொண்டாடப்படவேண்டிய அளவு ஒன்றுமில்லை. அவரது வேலையை சரியாகச் செய்தார். அவருக்கு கீழ் பணியாற்றிய ஆய்வாளர்கள் நம்மவர்கள்தான். ஹூல்ஸ் இதை செய்யாவிடில் .. வேறு யாராவது செய்திருப்பார்கள்..அதற்காக வரலாற்றை வாழ்விக்க வந்தவர்கள் என்ற புகழ்ச்சி அர்த்தமற்றது. ஹூல்ஸ் செய்ததை கொண்டாடும் அன்பர்கள் ஹூல்ஸ் காலத்திலிருந்து ஒரு 80 வருடங்களுக்கு முன்பு பெரியகோவிலில் என்ன நடந்தது என்பதை அறிவார்களா.?
அந்த வரலாற்று மீட்பர்களின் கொடூர செயல் தெரியுமா..?
தஞ்சைப் பெரியகோவிலை சீரழித்த புன்னியவான்களும் இவர்கள்தான்.
கி.பி.1773 முதல் 1776 வரை மூன்று வருடங்கள்.. ஆங்கிலேயர்களின் படைவீடாக பெரியகோவில் இருந்தது. இரானுவவீரர்களின் பயிற்சி முகாமாக பெரியகோவில் இருந்தது.
கோவில் வளாகத்தில் பீரங்கிகள் நிலைநிறுத்தப்பட்டன. வீரர்களுக்கு துப்பாக்கிச் சுடும் பயிற்சி முகாமும் கோவிலினுள் செயல்பட்டது..
இரானுவவீரர்களின் அணிவகுப்பு. பீரங்கிமுழக்கம். சீறிப்பாய்ந்தத் தோட்டாக்கள் கோவிலின் சுவற்றில் பட்டுத் தெறித்தன. ஏராளமான சிற்பங்கள் சேதமுற்றன.
இரண்டு தளங்களாக இருந்த கோவில் வளாகம்;மேல்தளம் முழுவதும் இடிந்து விழுந்தன.
கல்வெட்டு பொறிக்கப்பட்டத் தூண்கள் பூமிக்குள் புதைந்தன. சிதைந்துபோன அந்த அமரச்சிற்பங்களின் இன்றைய கோலத்தை கண்டால் கண்ணீர்விட்டு கதறத்தோறும்.
தெறித்த தோட்டாக்களின் எச்சத்தை இன்றும் நாம் காணலாம்.
கை ஒடிந்த அக்னிபகவான்.
பாதிக்குமேல் சிதைக்கப்பட்ட ஈசானசிவர்,
தோட்டாக்கள் தடம்பதிந்த சூரியன் சிற்பம்..
இன்றும் ஒரு கொடூர நிகழ்வுக்குச் சான்றாக பெரியகோவிலில் உள்ளன.
பெருவுடையார் இருக்கும் கருவறைதான் வீரர்களின் தங்குமிடம் ஆனது. கருவறை வாசலில் ARP பாதுகாப்பிடம் என்னும் எழுத்துப்பொறிப்பாக இரானுவக்குறியீடை இன்றும் பெரியகோவிலில் நாம் காணலாம்.
விட்டுப்போன எச்சங்களின் மிச்சமாய் ஒரு பீரங்கி ஒன்று இன்றும் பெரியகோவில் வளாகத்தில் உள்ளது.
216 அடி உயர விமானத்தின் காலடியில் ஒரு சிறு இரும்புத்துண்டாக அந்த பீரங்கி இருக்கிறது.
அந்த பீரங்கியின் குண்டுகளோ .. வாயில் கோபுரத்தின் பூட்டிய அறைக்குள் உள்ளது.
ஒரு மிகப்பெரும் வரலாற்று பண்பாட்டு கோவில் ஒன்றில் ஒரு படைப்பிரிவை தங்கவைத்து அவ்விடத்தை உருக்குலைத்து சீரழித்த ஆங்கிலேயர்கள்தான் வரலாற்று மீட்பர்களாம் இவர்கள்தான் வரலாற்றை
வாழவைக்க வந்த இறை தூதர்களாம்..
இன்னும் எங்களைப் பைத்தியக்காரனாகவே நினைத்துக் கொண்டிருந்தால் எப்படி..?
அன்புடன்...
மா.மாரிராஜன்.
( புகைப்பட உதவி..
திரு. பாபு மனோ.
திரு.விஜய்பட்)



இது பற்றி முழுதாக தெரியவில்லை.. ஆனால் கருவறை கோபுரத்தின் மேல்தளத்தில் உள்ள அறைகளில் ஓவியங்கள் பல இருப்பதாகவும் அங்குள்ள தூண்களில் நவரத்தினங்கள் பதிக்கப்பட்டிருந்தன அவற்றை பரங்கியர்கள் கொள்ளையடித்தனர் என்றும் தஞ்சைவாசிகள் சொல்லக் கேட்டிருக்கிறேன்.. மேலும் பெருவுடையார் ஆலயம் கோட்டை அமைப்பில்.. சுற்றிலும் அகழி.. கோட்டை சுவர்.. சுவரில் பீரங்கி மேடைகளுடன் தான் இருக்கும்.. பிற்கால மன்னர்கள் ஆலயத்தை போர்க்காலத்தில் பயன்படுத்தி இருக்கலாம்..
தஞ்சையில் பல இடங்களில் பீரங்கிகளை காணலாம்.. பீரங்கி மேடு என்று ஆங்காங்கே (நான்கு திசைகளிலும் உள்ள அலங்கங்களில்) இருக்கும்..
ஆலயத்தை பரங்கியரும் படைக்கலன் சேமிக்கவே பயன்படுத்தி இருப்பார்கள்..
பிரதான கோபுரத்தின் வடக்கு பக்க முகத்தில் கீழிருந்து மூன்றாவது அடுக்கின் மத்தியில் தொப்பி அணிந்த அயல்தேச மனிதரின் மார்புயர புடைப்பு சிற்பம் காணலாம். அது (யுவான் சுவாங் ) சீன யாத்ரீகன் என்று கூறுவார்கள்.. அது ஆரம்ப காலத்தில் இருந்ததா பிற்காலத்தில் திணிக்கப்பட்டதா என தெரியவில்லை..

No comments:

Post a Comment

ALARMING RISE IN INDIA'S MUSLIM POPULATION in India

  ALARMING RISE IN INDIA'S MUSLIM POPULATION AND WHY STOPGAP MEASURES WON'T WORK https://x.com/ByRakeshSimha/status/201491021020967...