Tuesday, July 26, 2022

மோடி 'அல்லா அனுப்பிய என் தம்பி'

மோடி  / அல்லா அனுப்பிய என் தம்பி //

என் முஸ்லிம் தோழி ஒருத்தியிடம் கேட்டேன். கடந்த சில ஆண்டுகளில் பார்த்தால் முஸ்லிம்கள் அதிகம் உள்ள தொகுதிகளில் கூட ...
தமிழகத்திலும் சரி மற்ற மாநிலங்களிலும் சரி பாஜக கணிசமான வாக்குகள் வாங்குகிறதே அந்த ரகசியம் என்ன ? உனக்கு தெரியுமா?அவள் சொன்னது,
நான் சொல்லப் போவது வேறு மத ஆண்களுக்கும், பெண்களுக்கும் புரியாத விஷயம். ஏன் நிறைய முஸ்லிம் ஆண்களுக்கே புரியாது. அது பல நூறு ஆண்டுகளாக நாங்கள் அனுபவித்து வரும் கொடுமை.
எங்கள் எந்த முஸ்லிம் வீட்டிலும் பார்த்தீர்களானால் குடும்பம் இல்லாமல் ஒரு முஸ்லிம் பெண் வாழ்ந்து வருவாங்க. 30 வயதும் இருக்கும். 40, 50 , 60 எந்த வயசிலும் இருப்பாங்க. இவர்கள் எங்களுக்கு அக்கா முறையோ, அத்தை முறையோ, சித்தி, பெரியம்மா முறையோ, பாட்டி முறையோ இருப்பாங்க. இவர்கள், தான் வசிக்கும் அந்த வீட்டில் முடிந்த வரையான வீட்டு வேலைகளை செய்து கொடுத்து ...
தன் உறவுகளோடு, உணவு பகிர்ந்து உண்டு அமைதியாக வாழ்ந்து வருவார்கள். குடும்பம்- குழந்தைகள் இல்லாத, அவர்களுடைய மனதிலே வெளியில் சொல்ல முடியாத, தாங்க முடியாத துயரம் வேதனை கவலை கெட்டியாக காங்கிரிட் மாதிரி இறுகிப் போயிருக்கும். இவங்க ஏன் இப்படி இருக்கிறார்கள் தெரியுமா?
காலம் காலமாக, ஆண்டுகள் ஆண்டுகளாக உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமிய பெண்கள் அனுபவித்து வரும் கொடுமை அது. முத்தலாக் விவகாரத்துக் கொடுமை.
ஒரு ஆணுக்கு மனைவியை பிடிக்காவிட்டால் மூன்று முறை தலாக் சொல்லிவிட்டால் போதும். இனி அவள் மனைவி கிடையாது. எந்த காவல், நீதி மன்றமும் எந்த நாட்டு சட்டமும் ஒன்னும் செய்ய முடியாது. பெண்ணைப் பெற்றவர்கள் கதறி அழுதாலும் காலில் விழுந்தாலும் ஒன்னும் நடக்காது
இதிலிருந்து பெண்களை மீட்க எத்தனையோ போராட்டங்கள் நடந்தாலும் ஒன்றும் பயனில்லை . இதற்கு விடிவு இல்லை என்று தான் நாங்கள் வாழ்ந்து வந்தோம். சில முஸ்லிம் ஆண்கள் அதை மனதால் எதிர்த்தாலும் வெளிப்படையாகத் தெரிவிக்க முடியாத சூழல்
நாங்கள் முஸ்லிம் பெண்களே கூட இதை எல்லா வீட்டு ஆண்களிடமும் வெளியில் சொல்ல முடியாது. சிலர் புரிந்துக் கொள்வர்கள் சிலர் புரிந்து கொள்ள மாட்டார்கள். குடும்ப உறவில் விரிசல் ஏற்படும். ஆகவே வாய் திறந்து கூட இதை சொல்லாமல் நேரில் கண்டும் மனம் வெதும்பித் தான் வாழ்ந்து வந்திருக்கிறோம்.
ஆனால் மோடி அவர்கள் இத்தனை ஆண்டுகாலம் யாரும் செய்ய பயப்பட்டதை துணிச்சலாக ஒரே நாளில் இந்த முத்தலாக் செல்லாது என்று ஒரு சட்டம் போட்டு இந்திய முஸ்லிம் பெண்களின் வாழ்வில் ஒளியேற்றி வைத்திருக்கிறார்.
இந்த சட்டத்தை முதல் முதலில் கேட்ட பொழுது எங்கள் சின்ன பாட்டி மொபைலில் மோடி படத்தை வைத்துக் கொண்டு அழுதார். 'அல்லா அனுப்பிய என் தம்பி' என்றார்.
அவர் முத்தலாக் சொல்லி விரட்டப்பட்ட போது வயது 17. யோசித்துப் பாருங்கள் பதினாலு வயதில் திருமணமாகி 17 வயதில் ஆதரவில்லாமல் எங்கள் வீட்டிற்கு வந்தவர்.
அவர் அன்றைக்கு அடைந்த மகிழ்ச்சியை வார்த்தையில் சொல்ல முடியாது. அவ்வளவு ஆனந்தமாக இருந்தார்.
பதிலுக்கு இவனுக்கு நாம எந்த உதவியும் செய்ய முடியாதா? ன்னார்.
நாம அவங்களுக்கு என்ன செய்ய முடியும் எலக்ஷன் வந்தா அவங்கள மதிச்சு நன்றியா ஓட்டு தான் போடமுடியும்னு சொன்னேன்.
கண் கலங்கி என் ரெண்டு கையையும் புடிச்சு 'சாகற வரைக்கும் அத மாறாம செய்யு'ன்னா. இப்ப பாட்டி இல்லை.
நான் அப்படி தான் செய்யறேன். எல்லா தேர்தல்லயும் என் ஓட்டு அவருக்கு தான். இந்தியா முழுசும் இருக்கிற பெரும்பாலான முஸ்லிம் பெண்கள் நிலை இது தான்.
என்னை மாதிரி யாரும் ஓபனா சொல்ல மாட்டாங்க. ரகசியமா இதை மனசுல வெச்சு ஓட்டு போடற நிமிஷம் மோடிய நினைச்சு பாஜகவுக்கு ஓட்டு போடுவாங்க.
இந்த சுதந்திரம் இந்திய முஸ்லிம் பெண்களுக்கு மட்டும் தான்.
பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான், ஈராக், ஈரான் போன்ற நாடுகளிலும் இந்தக் கொடுமை தொடருது. என முடித்தாள்.
கண்டிப்பாக மோடிக்கு முன், மோடிக்கு பின் என காலம் இந்தியாவை கொண்டாடும் நாள் தொலைவில் இல்லை.
புதிய இந்தியாவின் தந்தை மற்றும் சிற்பி நமது மோடிஜி.
Wattsup

No comments:

Post a Comment

‘France earns $400-$500B annually from Africa as colonial tax’

  Zahid Oruj: ‘France earns $400-$500B annually from Africa as colonial tax’ Foreign policy April 18, 2024   13:18 https://report.az/en/fore...