Saturday, July 16, 2022

முகலாய அரசர்கள் (ஒளரங்ஸிப் உட்பட) சுன்னத் செய்துகொள்ளவில்லை!

 முகலாய அரசர்கள் (ஒளரங்ஸிப் உட்பட) எதற்காக சுன்னத் செய்துகொள்ளவில்லை?

(World Vedi Heritage by P.N. Oak, Page 1176)
ஒவ்வொரு முஸ்லிமும் "சுன்னத்" (Circumcision) செய்து கொள்ளவேண்டும் என்பது பிஸ்லாமிய பாரம்பரிய மார்க்க சடங்குகளில் ஒன்று. முகலாய அரசவையில் இருந்த வரலாற்று ஆசிரியர்கள் தங்களின் பாதுஷா ஒரு பெரிய சூப்பர்மேன் எனக் காட்டுவதில் விருப்பமுடையவர்கள். அதற்கும் மேலாக த்ங்களின் பாதுஷாக்கள் எவ்வாறு பிஸ்லாமிய பாரம்பரியச் சடங்குகளைத் தொடர்ந்து பின்பற்றினார்கள் என்பதனைக் குறித்துப் பீற்றுவதில் தவறாதவர்கள். இதன் காரணமாக் மொகலாய இளவரசர்கள் அனைவரும் சுன்னத் செய்து கொண்டதாகக் கட்டுக்கதைகளையும் எழுதிச் சென்றிருக்கிறார்கள்.
ஆனால் உண்மையை எத்தனை நாட்களுக்குத்தான் மறைத்து வைக்கமுடியும்? பிரிட்டிஷ் ஆட்சியாளர்களால் பதவியிறக்கம் செய்யப்பட்ட கடைசி முகலாய அரசியான ஜீனத் மஹால் என்பவள், அக்பர் காலம்தொட்டு எந்த முகலாய அரசர்களும் சுன்னத் செய்து கொள்ளவில்லை எனத் தன் கையால் எழுதிய குறிப்பு ஒன்றினை பிரிட்டிஷ் ஆட்சியாளர்களிடம் அளித்தாள். அதாகப்பட்டது, முகலாய அரசவையில் இருந்தவர்கள் இம்மாதிரியான சடங்குகள் தொடர்ந்து முகலாய இளவரசர்களுக்குச் செய்யப்பட்டு வந்தது எனக் கூறும் அரசவைக் குறிப்புகள் அனைத்தும் தவறானவை என்பது இதன் மூலம் தெரிய வருகிறது. இருந்தாலும் நமது இன்றைய வரலாற்று "அறிஞர்கள்" அதனை உதாசீனப்படுத்தி முகலாய அரசர்களைத் தூக்கிப் பிடித்துக் கொண்டிருக்கிறார்கள்.
முகலாய அரசி ஜீனத் மஹாலின் (கடைசி முகலாய அரசன் பகதூர்ஷாவின் மனைவிகளில் ஒருத்தி) இந்த முக்கியமானதொரு குறிப்பினை Keay என்பவர் எழுதிய Spot on the Motiny என்னும் புத்தகத்தில் காணலாம்.
மேற்படி Keay 1857-ஆம் வருடம் இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக நிகழ்ந்த சிப்பாய்க் கலகம் குறித்த ஆவணங்களைப் படித்துக் கொண்டிருக்கையில் ஜீனத் மஹால் எழுதிய குறிப்பினை எதேச்சையாகக் காண நேரிடுகிறது. அதனைக் குறிப்பு எனச் சொல்லுவதனை விடவும், பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கு விடுத்த பெட்டிசன் (மனு) என்று சொல்லுவதே சரியானதாக இருக்கும். கடைசி முகலாய அரசனான பகதூர்ஷாவின் மூத்த மகன் ஃபக்ருதீன் "சுன்னத் செய்து கொண்டிருப்பதால்" அவனை முகலாய அரசின் வாரிசாகக் கருதக் கூடாது எனவும், அக்பரின் காலம் முதலாக எந்த முகலாய அரசனும் சுன்னத் செய்து கொள்ளவில்ல்லை எனவும் அந்த மனுவில் அவள் குறிப்பிடுகிறாள்.
எனவே அந்தப் பாரம்பரிய வழக்கத்தினை மாற்றி, சுன்னத் செய்து கொண்ட ஃபக்ருதீனை எந்தக் காரணத்தினாலும் முகலாய அரசின் வாரிசாக பிரிட்டிஷ் அரசாங்கம் அறிவிக்கக் கூடாது என மிக உருக்கமாக அந்த மனுவில் வேண்டுகிறாள் ஜீனத் மஹால்.
இதனைப் படிக்கிற Keay திகைத்துப் போகிறார். இருந்தாலும் சுன்னத் குறித்தும், பிஸ்லாமில் அதன் முக்கியத்துவம் குறித்தும் அவருக்கு அதிகம் தெரியாததால் சர் சையத் முகம்மத் என்பவரிடம் ஆலோசனை கேட்கிறார். இந்தச் சையத் முகமத் என்பவரே அலிகர் முஸ்லிம் பல்கலைக் கழகத்தை உருவாக்கியவர் என்பதினை இங்கு கவனிக்க வேண்டும். அந்த ஆள் எல்லா விவரங்களையும் அவருக்கு எடுத்துச் சொல்லுகிறார். அதன் மூலம் அவருக்குப் பல தகவல்கள் தெரிய வருகின்றன.
அக்பரின் தந்தை ஹுமாயூன் போரில் தோல்வியுற்று சிந்து மாகாணத்தின் பாலைவனப் பகுதிகளில் திரிந்து கொண்டிருந்த காலத்தில் அக்பர் பிறந்தார். எனவே குழந்தப் பருவத்திலேயே அக்பருக்கு சுன்னத் செய்யும் வாய்ப்பு இல்லாமலாகியது.
பின்னர் அக்பர் அரியணை ஏறியபோது அவருக்கு 13 வயது. அந்த வயதில் சுன்னத் செய்து கொள்வது மிகவும் வலி மிகுந்த ஒன்றாக இருக்கும். அதற்கும் மேலாக அக்பரின் உயிருக்கு ஆபத்தும் வரக்கூடும் என்பதால் அவருக்கு சுன்னத் செய்யப்படவில்லை. அதற்கும் மேலாக "பாதுஷா" அக்பரை சுன்னத் செய்து கொள்ளும்படி சொல்ல எவனுக்கும் துணிச்சலில்லை. அப்படிச் சொல்லுபவனின் உயிர் அவனிடத்தில் இருக்காது என்பதால்.
அதன் பின் அக்பரின் மகன்கள் பிறந்தபோதும் அக்பர் அவர்களில் எவருக்கும் சுன்னத் செய்ய அனுமதிக்கவில்லை. ஏனென்றால் அதற்கான அவசியம் இல்லை எனவும், அது இல்லாமலேயே தான் மிகவும் முன்னேறியதாகவும் அக்பர் நினைத்தார். அதாகப்பட்டது தான் சுன்னத் செய்யாமல் இருக்கையில் தன் பரம்பரையும் சுன்னத் செய்து கொள்ளக்கூடாது என்பது அக்பரின் எண்ணம். அதனால் ஜஹாங்கீருக்கு சுன்னத் செய்து கொள்ள அனுமதி மறுக்கப்பட்டது.
அதற்கும் மேலாக சுன்னத் செய்து கொண்டால் தன்னுடைய பதவிக்கு ஆபத்து வந்துவிடும், தான் சீக்கிரம் இறக்க நேரிடலாம் என்கிற மூட நம்பிக்கை ஒவ்வொரு முகலாய பாதுஷாவையும் பிடித்து ஆட்டத் துவங்கியது. ஷாஜஹான் பதவிக்கு வருகிற காலத்தில் இந்த நம்பிக்கை மிகவும் இறுகிப் போயிருந்தது. சுன்னத் செய்து கொண்ட பாபர் வெறும் நான்கு வருடங்களுக்கு மட்டுமே பாதுஷாவாக இருந்த வரலாறும் அவர்களை வாட்டியது. அதற்கும் மேலாகா சுன்னத் செய்து கொண்ட பாபரின் மகனான ஹுமாயூன் போர்களில் தோல்வியடைந்து இந்தியாவை விட்டு விரட்டியடிக்கப்பட்டிருந்ததும் முகலாய அரசர்கள் மத்தியில் சுன்னத் குறித்தான அச்சத்தை ஏற்படுத்தியிருந்தது. எதிரிகளை வெற்றி கண்டு இந்தியா திரும்பிய ஹுமாயூன் வெறும் ஆறு மாதங்களுக்குள்ளாகவே இறந்து போன கதையையும் அவர்கள் அறிந்திருந்தார்கள்.
எனவே சுன்னத் செய்யாமலிருப்பதே தங்களுக்கும், தங்களின் எதிர்கால வாரிசுகளுக்கும் நல்லதூ என நம்பிய முகலாய அரசர்கள் எவருமே பின்னர் சுன்னத் செய்து கொள்ளவில்லை என்பதே உண்மை. எனவே, அக்பர், அவரைத் தொடர்ந்த ஜஹாங்கீர், ஜஹாங்கிரின் மகனான ஷாஜஹான் என எவரும் சுன்னத் செய்து கொள்வதைத் தவிர்த்தார்கள்.
அதற்கெல்லாம் மேலாக, இந்தியாவில் பிஸ்லாமிய மதத்தை நட்டுக் குத்தலாக நிறுத்தவந்த ஒளரங்ஸீப்பும் அவனது மகன்கள் அத்தனைபேர்களும் சுன்னத் செய்து கொள்ளவில்லை என்பதை நாம் இங்கு கவனிக்க வேண்டும். இதே வழக்கம் தொடந்து கடைசியில் பகதூர்ஷா வரையில் நீடித்தது. இந்த வழக்கத்தை மாற்றி சுன்னத் செய்து கொண்டவன் பகதூர்ஷாவின் மூத்த மகனான ஃபக்ருதீன். இதன் காரணமாக ஃபக்ருதீனால் முகலாய ஆட்சிக்கட்டிலில் இறுதிவரையில் அமர முடியவில்லை. ஆனால் முகலாய வழக்கத்தை அறிந்திருந்த அவனது சிற்றன்னையான ஜீனத் மஹால் அவளது மகனுக்கு சுன்னத் செய்யாமலேயே வைத்திருந்தாள். சுன்னத் செய்யாத ஒருவனால் மட்டுமே முகலாய ஆட்சிக்கட்டிலில் ஏறி ஆட்சி செய்ய முடியும் என்கிற நம்பிக்கை அவளுக்குள் இருந்துவந்தது. எனவே தன் மகனுக்கே அந்த வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என பிரிட்டிஷ் ஆட்சியாளர்களிடம் மனு அளித்திருந்தாள் அவள்.
இந்த ரகசியத்தை பிஸ்லாமிய வரலாற்றாசிரியர்கள் ரகசியமாக வைத்திருந்தாலும் இறுதியில் உண்மை எதிர்பாராமல் வெளிவந்துவிட்டது. தாங்கள் சுன்னத் செய்து கொள்ளாமல் இருப்பது வெளியில் தெரிந்துவிடக் கூடாது என்பதற்காக போலியான சுன்னத் விழாக்களையும் முகலாய அரசர்கள் கொண்டாடியிருக்கிறார்கள்.
பிஸ்லாமிய வரலாற்றாசிரியர்கள் எழுதி வைத்திருக்கும் முகலாய அரசர்களின் வரலாறுகள் எத்தனை போலியானவை என்பதற்கு இது ஒரு உதாரணம்.

No comments:

Post a Comment

ஏசு ஜெபம் செய்வதாக கூறி பெண்ணிடம் பாலியல் வன்கொடுமை முயற்சி -கிறிஸ்தவ மத போதகர் கெனிட்ராஜ் கைது

  ஞாயிறு தோறும் ஜெபித்துவிட்டு பாஸ்டரை சந்திக்க நேரிடும் போது இடையில் வந்துள்ள சாத்தானை என்னவென்று சொல்வது தெரியாமல் இருவரும் திகைத்தனர் htt...