Friday, July 29, 2022

கோவையில் நிகழ்ந்த கொடூரம்… உடல் உறுப்புகள் திருட முயற்சியா? பகீர் சந்தேகங்களை கிளப்பும் சமூக ஆர்வலர்கள்!

 கோவையில் நிகழ்ந்த கொடூரம்… உடல் உறுப்புகள் திருட முயற்சியா? பகீர் சந்தேகங்களை கிளப்பும் சமூக ஆர்வலர்கள்!

முதியோர்கள் மற்றும் ஆதரவற்றோர்களை கடத்திய கும்பல் குறித்த பகீர் தகவல் தற்போது வெளிச்சத்திற்கு வந்து இருப்பது பொதுமக்கள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தி இருக்கின்றன.

ஏழை, எளியவர்கள் மற்றும் ஆதரவற்றோர்க்கு உதவும் நோக்கில் பல்வேறு தொண்டு தமிழகத்தில் செயல்பட்டு வருகின்றன. அந்த வகையில், சிலர் இப்பணியினை உள்ள தூய்மையோடும், நேர்மையோடும் செய்து வருகின்றனர். ஆனால், ஒரு சிலர் ஏழை மக்களின் இயலாமை மற்றும் வறுமையை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கின்றனர். இந்நிலையில், ஏழை மக்களுக்கு உதவுவதாக கூறி மிகப்பெரிய சர்ச்சையில் கிறிஸ்தவ நிறுவனம் ஒன்று சிக்கி இருப்பது தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

’கருணை பயணம்’ எனும் கிறிஸ்தவ காப்பகம் கோவை மாவட்டம், தொண்டாமுத்தூர் அருகே உள்ள அட்டுகல் மலையடிவாரத்தில் செயல்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களாக எங்களை காப்பாற்றுங்கள் என இக்காப்பகதை சேர்ந்தவர்கள் கூக்குரல் எழுப்பி கதறி இருக்கின்றனர். இவர்களின், ஓலக்குரல்கள் தொடர்ந்து வரவே, அருகில் வசிக்கும் பழங்குடியின மக்கள் அந்த காப்பகத்தில் திடீர் ஆய்வினை மேற்கொண்டு இருக்கின்றனர். அங்கு, மொட்டையடித்த நிலையில் சுமார் 50-க்கும் மேற்பட்டவர்கள் இருந்து இருக்கின்றனர். இவர்களிடம், பழங்குடியின மக்கள் பேச்சு கொடுத்த போது காப்பகத்தின் உண்மையான சுயரூபம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதனை தொடர்ந்து, பழங்குடியினத்தை சேர்ந்தவர்கள் கொடுத்த புகார் அடிப்படையில் தாசில்தார் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் நேரடியாக களத்திற்கு வந்து விசாரித்து இருக்கின்றனர்.

முதியோர்கள் மற்றும் ஆதரவற்றோர்களை தான் இங்கு வைத்து இருக்கிறோம். யாரையும் நாங்கள் அடைத்து வைக்கவில்லை என காப்பகத்தை சேர்ந்தவர்கள் கூறி இருக்கின்றனர். ஆனால், காப்பகத்தில் இருந்த அனைவரும் எங்களை கடத்தி வந்து இங்கு கொடுமை செய்வதாக வேதனையுடன் தெரிவித்து இருந்தனர். இக்காணொளி கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு வெளியாகி தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தன. இப்படிப்பட்ட சூழலில், இதுகுறித்தான மேலும் சில காணொளிகள் தற்போது வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கின்றன. ஏழை, எளியவர்கள் மற்றும் ஆதரவற்றவர்களின் உடல் உறுப்புகளை திருட இந்த கிறிஸ்தவ தொண்டு நிறுவனம் செயல்பட்டதா? எனும் ஐயம் தற்போது மக்களிடம் எழுந்து இருக்கின்றன. இதே கேள்வியினை பிரபல அரசியல் விமர்சகர் செல்வகுமாரும் எழுப்பி இருக்கிறார்.

காஞ்சிபுர மாவட்டம் பாலேஸ்வரம் அருகே செயல்பட்டு வந்த காப்பகம் தான் செயின்ட் ஜோசப் கருணை இல்லம். இங்கு பராமரிக்கப்பட்டு வந்த முதியவர்கள் கடந்த மூன்று மாதத்தில் சுமார் 300 பேர் மர்மமான முறையில் உயிர் இழந்தனர். இவர்களின் உடல் உறுப்புகள் மற்றும் எலும்புகள் அயல்நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதாக குற்றச்சாட்டு கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தையே உலுக்கி இருந்தன. அந்த பட்டியலில், இந்த ’கருணை பயணம்’ உள்ளதோ எனும் சந்தேகம் தற்போது எழுந்து இருக்கிறது. கோவை மாவட்டத்தில் இச்சம்பவம் நிகழ்ந்து இருப்பதால், அருகில் இருக்கும் காருண்யாவையும் விசாரணை செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து இருக்கின்றனர். இக்கொடூர, சம்பவம் வெளியான உடன் களத்தில் நின்று போராடியவர்கள் பா.ஜ.க.வினர் என்பது குறிப்பிடத்தக்கது. கிறிஸ்தவ தொண்டு நிறுவனத்தின் பெயர் அடிபடுவதால் வழக்கம் போல ஊடகங்கள் கப்சிப். இதே, சம்பவம் ஈஷாவில் நிகழ்ந்து இருந்தால் தி.மு.க. உட்பட அனைத்து ஊடகங்களும் ஒருவாரம் ஒப்பாரி வைத்து இருப்பார்கள் என்பது நெட்டிசன்களின் கருத்து.

Image
சராசரியாக 3 பேர் மரணம்
காப்பாற்றுங்கள் என கதறிய முதியவர்
உறுப்புகள் திருட்டு
செயின்ட் ஜோசப் கருணை இல்ல வாகனத்தில் இருந்து முதியவரை மீட்ட ஊர் மக்கள்.
கொலையா?

No comments:

Post a Comment

‘France earns $400-$500B annually from Africa as colonial tax’

  Zahid Oruj: ‘France earns $400-$500B annually from Africa as colonial tax’ Foreign policy April 18, 2024   13:18 https://report.az/en/fore...