நல்ல அரசாட்சி செய்யும் மன்னவர் வழிகாட்டும் வள்ளுவர் அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்
நின்றது மன்னவன் கோல். குறள் 543: செங்கோன்மை
அந்தணர்கள் வேதங்களிற்கும், அதனின் செயல் வழி காட்ட எழுந்த நீதி நூல்களிற்கும் அடிப்படையாக இருக்க வேண்டியதே நல்ல அரசாட்சி செய்யும் மன்னவர் செங்கோல்\
மோசமான கொடுங்கோல் மன்னவன் ஆட்சியின் மோசமான தீமை என்ன
ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர்
காவலன் காவான் எனின். குறள் 560: கொடுங்கோன்மை
மன்னவன் சரியானபடி ஆட்சி செய்யவில்லை எனில் பசுக்கள் பலன் தராமல் குறையும், பிராமணர்கள் வேதம் ஓதாமல் மறந்து விடுவர்.
பூமாதேவியை திருவள்ளுவர் "நிலம் என்னும் நல்லாள்" எனப் போற்றுகிறார்.
இறைவன் வணக்கம் செய்வது போலே பஞ்ச பூதங்களை போற்றுவது மெய்யியல் மரபு. இறைவனை சிறப்பாக பூஜைகள் செய்து திருவடியை தன் தலையால் வணங்காதவன் ஐம்பொறிகள் பயன் இல்லாதது போல என்கிறார்
சங்க இலக்கியம் போற்றும் சனாதன வழி
பூவினுள் பிறந்தோன் நாவினுள் பிறந்த
நான்மறைக் கேள்வி நவில் குரல் எடுப்ப
ஏம ஆன் துயில் எழிதல் அல்லதை,
வாழிய வஞ்சியும் கோழியும் போலக்
கோழியின் எழாது, எம் பேர் ஊர் துயிலே. பரிபாடல்-திரட்டு 8:7-12
பூவினுள் பிறந்தோன்- பிரம்மா; நான்மறைக் கேள்வி நவில் குரல் எடுப்ப- ரிக், யஜுர், சாம அதர்வண வேதங்களின் முழக்கம் அந்தணர் ஓத; வஞ்சியும் -சேர தலைநகர்- வஞ்சி; கோழியும்- உரையூர்- சோழ தலைநகர்; கோழியின் எழாது- சேவல் கூவலில் எழ
பாண்டி நாட்டு தலைநகர் மதுரைவாசி சொல்கிறார்: சேர தலைநகர்- வஞ்சி வாழ்மக்களும், சோழ தலைநகர் உரையூர் வாழ்மக்களும் தினமும் அதிகாலை சேவல் கூவலில் எழுகின்றனர். நாங்கள் அதிகாலையில் அந்தணர் ரிக், யஜுர், சாம அதர்வண வேதங்களின் ஓதும் முழக்கம் கேட்டு எழுகிறோம் என பெருமை கொள்கின்றார்.
வள்ளல் பாரி மகள் திருமணத்தில் கலந்து கொண்ட சேர-சோழ &பாண்டிய மூவேந்தர் பற்றி ஔவையார்
அரசு விழாவில் பூமி பூஜை நடக்கவிருந்த சமயத்தில் அந்த எம்.பி நடந்து கொண்ட விதம் பல கேள்விகளை எழுப்புகிறது.அவர் கடுமையாக சினந்து கொண்டது ஒரு உயரதிகாரியை.அந்த அதிகாரி பொதுப் பணித் துறையில் ஒரு செயற்பொறியாளர் என்று தெரிகிறது.அந்த நிலையில் உள்ள ஒரு அதிகாரியை மக்கள் பார்த்துக்கொண்டிருக்க இப்படி கடுமையாக பேசியதும்,நடந்து கொண்டதும் மிகவும் தவறான செயல்.ஒரு மக்கள் பிரதிநிதி இப்படி நடந்து கொண்டிருக்கவே கூடாது.தமிழக அரசின் ஊழியர் சங்கங்கள் இதற்கு கடுமையாக எதிர்வினை ஆற்ற வேண்டும்.ஆனால், எப்போதுமே, பெரும்பாலும்,திமுக சார்பாகவும்,இடது சாரிகள் சார்பாகவும் இருக்கும் அவர்களது சங்கங்கள் அப்படி செய்வார்களா என்பது கேள்விக்குறிதான்.
இப்போது இந்த பூஜை விஷயத்துக்கு வருவோம். இது இப்படித்தான் பல காலமாக நடந்து கொண்டிருக்கிறது. ஆனால், அந்த எம்.பி. உங்களுக்கு இப்படி செய்யக்கூடாது என்று Instructions இருக்கா இல்லையா என்று கேட்கிறார். அந்த Instructions பூஜையே நடக்க கூடாது என்றா அல்லது நடந்தால் எல்லா மதத்தவரையும் அழைக்க வேண்டும் என்றா என்று தெரியவில்லை. ஆனால், அந்த எம்.பி. கிறித்தவர்கள் எங்கே இமாம் எங்கே என்றும் கேட்கிறார். ஒருவேளை அங்கே அந்தத் துறையில், அந்த ஊரில் கிறித்துவர்களும் இஸ்லாமியரும் இல்லை என்றால் என்ன செய் வது?அழைத்திருந்தும் வரவில்லை என்றால்?இதுஒரு புறம்.பின் திராவிடர் கழகத்தவர் எங்கே என்று கேட்கிறார். எப்போதிருந்து அரசு விழாக்களுக்கு திராவிடர் கழகத்தவரை அழைக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது என்று தெரியவில்லை.சரி,அதென்ன திகவினர் மட்டும்? அவர்களை அழைத்தால் பிறகு அவர்களைப் போன்ற பிற அமைப்பினரையும் அழைக்க வேண்டும் என்று யாராவது குரல் எழுப்பினால், அது சரியானது தானே.அப்படி ஒவ்வொருவரையும் அழைக்க வேண்டும் என்பதெல்லாம் நடக்கிற காரியமா?அப்படியெல்லாம் ஒரு அரசாணை வெளியிட முடியுமா?
நான் மாநில அரசில் பல காலம் பணியாற்றியிருக்கிறேன். நான் பணியாற்றிய அலுவலகங்களில் எல்லாமே ஆயுதபூஜை புரோகிதரை வைத்து மிக விரிவாகக் கொண்டாடப்படும்..அதைத் தவிர அநேகமாக ஒவ்வொரு வெள்ளியன்றும் காலையில் /மாலையில் இந்து கடவுட் படங்களை வைத்து பூஜை செய்யும் வழக்கமும் உண்டு. இவையிரண்டையுமே யாரும் எதிர்த்ததில்லைஅங்கு பணியாற்றும் மாற்று மதத்தவரும் ஒன்றும் எதிர்த்து சொன்னதில்லை.பெரும்பாலும், கிறித்தவர்கள் அங்கேயே நின்று அதில் பங்கு கொள்வார்கள். இஸ்லாமியர்களில் ஒரு சிலர் அதில் கலந்து கொள்வார்கள். பெருபான்மையினர், வெளியே சென்று விடுவார்கள். பெரும்பாலான பெரிய அரசு வளாகங்களில் இந்துக்கோவில்கள், கிறித்தவ இஸ்லாமிய வழிபாட்டிடங்கள் மூன்றுமே இருக்கும்.அவரவர் வழி அவரவர்க்கு என்று போய்க் கொண்டேதான் இருப்பார்கள்.எனவே மாநில அரசு அலுவலகங்களில் இந்தப் பூஜைகள் நடப்பது எல்லாம் எல்லாம் ஒரு பெரிய விஷயமே இல்லை.
இதெல்லாம் எல்லோருக்கும் தெரிந்ததுதான்..இதெல்லாம் தெரியாமலா அந்த .எம்.பி அங்கே நடந்து நடந்து கொண்டார் என்பது ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. Merely Playing to the Gallery செயலாகத்தான் தோன்றுகிறது. சரி இன்றைய ஆளும் கட்சி,இது மத சார்பற்ற நாடு, இந்த மாதிரி பூஜை எல்லாம் வேண்டாம் என்று நினைத்தால்,இனி எந்த அரசு விழாக்களிலும் கால் கோள் விழாக்களிலும் இந்த மாதிரிப் பூஜைகள் எதுவும் நடக்க கூடாது,அரசு அலுவலகங்களில் ஆயுத பூஜை வெள்ளிக்கு கிழமை பூஜை போன்றவையும் நடக்கக் கூடாது என்று ஒரு அரசாணையை வெளியிடலாம். மீறுபவர்களை கடுமையாக தண்டிக்கலாம். அப்படியெல்லாம் செய்யாமல்,மக்கள் பிரதிநிதிகளாக இருப்பவர்கள்,அரசின் அதிகாரிகளை இப்படி மரியாதைக் குறைவாக பொது வெளியில் ஏசுவது அழகல்ல..
ஒரு எம் பி பூமி பூஜை விழாவிற்கு ஏன் இமாமை அழைக்க வில்லை, ஏன் பாதிரியாரை அழைக்க்கவில்லை ஏன் திராவிடர் கழகத்துக்காரனை அழைக்கவில்லை வசனத்துக்கு அதிகாரியிடம் பேசும் காணொளியை காண நேர்ந்தது. அவர் கூறிய இன்னொன்று இது திராவிட மாடல் ஆட்சியாம் அனைவருக்கும் ஆனதாம்.
நடந்தது பூமி பூஜை. அதில் மந்திரங்கள் கூறுவார்கள். ஒரு இமாமோ அல்லது பாதிரியாரோ வந்து என்ன சொல்ல முடியும்? இமாம் பூமியை இறைவனாக எண்ணி வணங்க அந்த மதம் அனுமதிக்குமா? அல்லது பூமி பூஜை கிறிஸ்துவ மதத்தில் தான் உண்டா? எல்ல்லாம் இருக்க அது என்ன திராவிட கழக காரனை பூஜை நேரத்தில் கூப்பிட வேண்டும் ?.அந்த எம்பியின் கட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்ட பூஜையின் புகைப்படம் ஒன்று கிடைத்தது அதில் இமாமையும் காணோம் பாதிரியையும் காணோம். இதை பற்றி அவருடைய கருத்து என்ன ???.
தர்மபுரியின் எம்பி ஏதோ ஒரு அரசு விழாவில் பூஜை செய்வதை கேள்வி கேட்கும் வீடியோ ஒன்று சுற்றிக் கொண்டிருக்கிறது.
பொதுவாக இது போன்ற பூஜைகள் அனைத்து அரசு அலுவலகங்களிலும் சாதாரணமாக நடப்பது தான், பூமி பூஜை என்பதும் சர்வசாதாரணம். அதற்கு ஏற்பாடு செய்த அதிகாரி தன் வரம்பிற்கு உட்பட்டே செயல்பட்டு இருப்பார்.
இந்த எம்பி வரும்போது, இவரை சரியாக கவரப் செய்து வீடியோ எடுத்து, அவர் பேசும்போது மிகத் தெளிவாக முகம் தெரியும்படியும், உச்சரிப்பு கேட்கும்படி வீடியோ எடுத்து வெளியிடுவது திட்டமிட்டு செய்யப்பட்டது போல தான் தெரிகிறது.
இது ஒரு வெற்று சீன், அவ்வளவுதான். தீவிர திராவிடாஸ் இதனைப் பகிர்ந்து போலி உச்சங்களை (fake orgasams) சிறிது தொடலாம்!
திமுகவிற்கு தைரியம் இருந்தால், வரும் விநாயகர் சதுர்த்தி பண்டிகையில் தெருக்களில் விநாயகர் சிலை வைப்பது, ஊர்வலம் செல்வது இரண்டையும் முழுமையாக தடை செய்து ஆணை வெளியிடட்டும். நவராத்திரியின் முடிவில் நடக்கும் சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜைகளை அரசு அலுவலகங்களில், குறிப்பாக போக்குவரத்துத் துறைகளில் முற்றிலுமாக தடை செய்து ஆணை வெளியிடட்டும், பார்க்கலாம்!
புறநானூறு - 367. வாழச் செய்த நல்வினை! -ஔவையார்
சிறப்பு: சேரமான் மாரி வெண்கோவும், பாண்டியன் கானப்பேர் தந்த உக்கிரப் ருவழுதியும், சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளியும் ஒருங்கிருந்தாரைப் பாடியது.
367 ஔவையார்
நாகத்து அன்ன பாகு ஆர் மண்டிலம்
தமவே ஆயினும் தம்மொடு செல்லா
வேற்றோர் ஆயினும் நோற்றோர்க்கு ஒழியும்
ஏற்ற பார்ப்பார்க்கு ஈர்ம் கை நிறைய
பூவும் பொன்னும் புனல் பட சொரிந்து 5
பாசிழை மகளிர் பொலம் கலத்து ஏந்திய
நார் அறி தேறல் மாந்தி மகிழ் சிறந்து
இரவலர்க்கு அரும் கலம் அருகாது வீசி
வாழ்தல் வேண்டும் இவண் வரைந்த வைகல்
வாழ செய்த நல்வினை அல்லது 10
ஆழும்_காலை புணை பிறிது இல்லை
ஒன்று புரிந்து அடங்கிய இருபிறப்பாளர்
முத்தீ புரைய காண்_தக இருந்த
கொற்ற வெண்குடை கொடி தேர் வேந்திர்
யான் அறி அளவையோ இதுவே வானத்து 15
வயங்கி தோன்றும் மீனினும் இம்மென
பரந்து இயங்கும் மா மழை உறையினும்
உயர்ந்து மேந்தோன்றி பொலிக நும் நாளே
367 ஔவையார்
நாகலோகத்தைப் போன்ற வளமான பகுதிகளையுடைய நாடு
தம்முடையதாகவே இருந்தாலும், இறக்கும்பொழுது அது அவர்களுடனே செல்வதில்லை;
அது அவனுக்குப் பின்னர் வரும் வேற்று நாட்டவராயினும், வலிமையுடையோர்க்குப் போய்ச் சேரும்;
பொருளை வேண்டி இரந்த பார்ப்பனர்களுக்கு, அவர்களின் ஈரக்கை நிறைய
பூவும் பொன்னும் நீர்வார்த்துக் கொடுத்து,
நல்ல அணிகலன்களை அணிந்த மகளிர் பொற்கலங்களில் கொண்டுவந்து கொடுக்கும்,
நாரால் வடிகட்டப்பட்ட கள்ளின் தெளிவை அருந்திக் களித்து,
இரவலர்க்கு அரிய அணிகலன்களைக் குறையாது கொடுத்து,
இவ்வுலகில் நீங்கள் வாழ்வதற்காக வரையறுக்கப்பட்ட நாட்கள் முழுதும் வாழவேண்டும்;
நீங்கள் வாழும்பொழுது இவ்வுலகில் செய்த நல்வினைகளைத் தவிர,
நீங்கள் இறக்கும்பொழுது உங்களுக்குத் துணையாக வருவது வேறொன்றுமில்லை.
வீடுபேறு ஒன்றையே விரும்பிப், புலன்களை அடக்கிய அந்தணர்கள் வளர்க்கும்
முத்தீயைப் போல காண்பதற்கினிமையாய் வீற்றிருக்கும்
வெண்கொற்றக் குடையையும், கொடிகட்டிய தேரையும் உடைய மூவேந்தர்களே!
நான் அறிந்த அளவில் முடிவாகத் தெரிந்தது இதுவேயாகும்; வானத்தில்
ஒளிர்ந்து தோன்றும் விண்மீன்களையும் இம்மென்ற ஒலியுடன்
பெய்யும் பெரிய மழைத்துளிகளையும் விட
மேம்பட்டு விளங்குவன ஆகுக, நும்முடைய வாழ்நாட்கள்.
வானத்து மீன்களின் எண்ணிக்கையைக் காட்டிலும் பெருக வேண்டும். ‘இம்’ என்று பொழியும் மழையில் உள்ள நீர்த்துளிகளின் எண்ணிக்கையைக் காட்டிலும் பெருகவேண்டும். நில உலகினைச் சூழ்ந்துள்ள மண்டிலம் தேவருலகம் போல இனிமையானது. அது ஞாயிறு, திங்கள் இரண்டுக்கும் உரிமையானது. என்றாலும் இந்த இரண்டு சுடர்களும் இணைந்து செல்வதில்லை. நீங்களோ மூவரும் இணைந்து காட்சி தருகிறீர்கள். இந்த உலகம் ஆளும் உங்களுடையதுதான். என்றாலும் அது நோன்பு இயற்றியவர்களுக்கே உரியது. நீங்கள் பார்ப்பார்க்கு வழங்க வேண்டும். ஏந்தி நிற்கும் அவர்களின் கையில் பூவும் பொன்னும் வழங்க வேண்டும். நீர் ஊற்றித் தாரை வார்த்து வழங்க வேண்டும். மகளிர் பொன்-கிண்ணத்தில் தரும் தேறலைப் பருகவேண்டும்.இரவலர்களுக்கும் அரிய அணிகலன்களை வழங்கவேண்டும். தனக்கென வைத்துக்கொள்ளாமல் வழங்கவேண்டும். உங்களுக்கு வழங்கப்பட்ட வாழ்நாள் எல்லாம் வழங்கவேண்டும்.இவ்வாறு வாழ்ந்து உங்கள் வாழ்நாள் பெருகவேண்டும். பிறரை வாழச்செய்வதுதான் நல்வினை. இந்த நல்வினை உங்களை ஏற்றிச் செல்லும் மிதவையாக உதவும். வாழ்க்கைத் துன்பத்தில் மூழ்கும்போது உதவும். இந்த நல்வினை போல வாழ்க்கைக்கு இன்பம் தந்து உதவக்கூடியது வேறு ஒன்றும் இல்லை.
இன்று தருமபுரி அருகில் நடந்த விஷயம்.. என் பார்வையில்.
கார்பரேட் என விளிக்கப்படும் நிறுவனங்களில் அடிப்படையாக அறிவுறுத்தப்படும் விஷயங்களில் தலையாயது..
Respect for individual - அதாவது தனி மனிதனுக்கு கொடுக்கப்படும் மரியாதை
எவ்வளவு மேல் நிலையில் இருந்தாலும் கடை நிலை ஊழியர் ஆக இருந்தாலும் மதிப்போடு நடத்த வேண்டும் என்பது.
HR மக்கள் மிக கடுமையாக பார்க்கும் விஷயங்களில் இது முதல். புகார் வந்தால் வேலைக்கே உலை தான்
பாராட்டுவதை பொதுவில் செய், சிறிதளவே கடிந்து கொள்வது ஆனாலும் தனியே செய் என்பது மீற முடியாத விதி. அப்படி தனியே பேசும் போது கூட கத்துதல் (Yelling) என்பது தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று.
இன்று திமுக மாநிலங்கள் அவை உறுப்பினர் நடந்து கொண்ட விதம் மிகவும் கேவலம் ஆனது. அவருக்கு இஷ்டம் இல்லை, அல்லது இது சரி அல்ல என்று இருந்தாலும் விழா முடிந்த பிறகு அந்த அதிகாரியை கூப்பிட்டு சொல்லி இருக்க வேண்டும். அவர் பொதுவில் ஒரு அதிகாரியை கத்தியது மிகவும் தவறு.
தன்னுடைய இந்த செய்கைக்கு அந்த MP குறிப்பிட்ட அதிகாரியிடம் நிபந்தனை அற்ற பொது மன்னிப்பு எழுத்து மூலம் கோர வேண்டும்.
இதை மற்ற கட்சிகள் பாராளுமன்ற அவை தலைவரிடம் எடுத்து சென்று உறுப்பினர் அவையில் தன் நடவடிக்கைக்கு பதில் அளிக்க செய்ய வேண்டும்
குறிப்பு - MP அந்த நிகழ்ச்சியை பாதியில் நிறுத்தி எழ வைததும் தவறு தான். அதை தனியே பார்ப்போம்.
No comments:
Post a Comment