கடந்த ஒரு வருடத்தில் தினமும் 5 கோவில்களை திமுக ஆட்சி வந்த பிறகு 1859 கோயில்களை இந்து சமய அறநிலையத் துறை கையகப் படுத்தியுள்ளது.
https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=763712 09-05-2022
வருவாய் இல்லாத கோவில்களை அரசு ஏற்பதில்லை, ஆனால் அரசு ஏற்ற கோவில்களில் 12,959 கோவில்கள் முறையான பூஜை, பராமரிப்பு இல்லாமல் மோசமான நிலைமையில் உள்ளது. அதை சரி செய்ய ஒரு வேளை பூஜை என அறிவிப்பு12,959 கோயில்களில் தலா ஒரு பூசாரி நியமனம் |
ஆனால், பெரும்பாலும் அவ்வாறு மாதம் தோறும் இந்த கோயில் நிர்வாகம் கணக்குகளை தாக்கல் செய்வதில்லை. அப்படிப்பட்ட கோயில்களின் நிர்வாகத்தை அறநிலையத்துறை எடுத்து கொள்கிறது அதன்படி, அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இல்லாத கோயில்ளில் ஒவ்வொரு ஆண்டும் குறைந்தது 15 கோயில்கள் வரை அறநிலையத்துறை கையகப்படுத்தி வருவது தொடர்கதையாகி வந்தது. இதனால், அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் வரும் கோயில்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது. கடந்த ஆண்டு மே மாதத்தில் 44121 கோயில்களாக இருந்தது.
தொடர்ந்து பல கோயில்கள் மீது புகார் இருந்த நிலையில் கடந்த ஆட்சிக் காலத்தில் பெரிய அளவில் புகார்கள் மீது விசாரணை நடத்தப்படவில்லை. இந்த நிலையில் திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு சொத்துகள் அபகரிப்பு மற்றும் வருவாய் முறைகேடு தொடர்பாக, முறைகேடு புகார் தொடர்பாக அறநிலையத்துறை விசாரணை நடத்தியது. இந்த விசாரணையின் முடிவில் 1859 கோயில்களை அறநிலையத்துறை கையகப்படுத்தியுள்ளது. இதில், புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கோயில்களும் அடக்கம்.
இந்த கோயில்களில் செயல் அலுவலர் நிலையிலான அதிகாரிகளை நியமனம் செய்யப்பட்டு அவர்கள் மூலம் அந்தந்த கோயில்கள் நிர்வாக பணிகளை கவனிக்கப்பட்டு வருகிறது.
இந்த கோயில்களில் செயல் அலுவலர் நிலையிலான அதிகாரிகளை நியமனம் செய்யப்பட்டு அவர்கள் மூலம் அந்தந்த கோயில்கள் நிர்வாக பணிகளை கவனிக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களின் எண்ணிக்கை தற்போது 45 ஆயிரத்து 980 ஆக அதிகரித்துள்ளது என்று அறநிலையத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment