Thursday, May 12, 2022

சென்னை பல்லாவரம் 1400 ஆண்டுகள் பழமையான பஞ்சபாண்டவ மலை குகைக் கோவில் தர்காவாக மாற்றப்பட்டு உள்ளது

சென்னை பல்லாவரம் 1400 ஆண்டுகள் பழமையான பஞ்சபாண்டவ மலை   குடவரை (குகை) கோவில் முதலாம் மகேந்திர வர்மர் (பொஆ600- 630) கட்டியது, தமிழகத்தின் முதல் குடவரை கற்றளி கடந்த 70 ஆண்டுகளில் அரேபியக் குர்ஆன் கதை முஸ்லிம் தர்க்காஹ் என மாற்றப் பட்டுள்ளது. 

தஞ்சாவூர் போன்ற கோவில்களின் தொன்மை காக்க, தொல்லியல் துறை மட்டுமே எல்லா பணிகளும் செய்யும், இந்த தர்காஹ்வில் தமிழன் தொன்மை அடையாளம் முழுமையாகக் சிதைய விட்டது ஏன்


கிபி 600 காலகட்டத்தை சேர்ந்த இக்கோவில் மாமல்லபுரத்தில் இருக்கும் குகைக்கோவில்களுக்கு முன்னோடியாக திகழ்கிறது. இதை கட்டிய மஹேந்திரவர்மன்தான் தென்னிந்திய கோவில் கட்டிடக்கலையின் தந்தையாக திகழ்கிறார். 
ASI புத்தகத்தில் பல்லாவரம் குடைவரையின் படம்
1950 வரை அது பாழடைந்த கோவிலாக, மேற்பாரிவை கீழ் இருந்தது எனச் செய்திகள் கூறுகின்றன‌.  தற்போது அதன் தொன்மை இறைத்தன்மை அழித்து தர்க்காஹ் என உள்ளது.
1909ல் ஆர்.எச் கிருஷ்ணா சாஸ்திரி எழுதிய “எஃபிகிராஃபியா இண்டிகா” என்ற புத்தகத்தில் இக்கோவில் மாற்றப்படுவதற்கு முன்புள்ள புகைப்படம் இடம்பெற்றிருக்கிறது. இக்கோவில் இரண்டு வரிசை தூண்களுடன், 5 துவாரங்கள் கொண்டு அமைக்கப்பட்டிருக்கிறது. இதில் சிற்பங்களோ வடிவங்களோ எதுவும் இல்லாததால் இது யாருக்காக கட்டிய கோவில் என்று சீரான குறிப்புக்கள் இல்லை. இக்காலகட்டத்தில் உள்ள மற்ற கோவில்களை வைத்து, இதில் சிவலிங்கம் இருந்திருக்கக்கூடும் அல்லது உருவபடமாக வரையப்பட்டிருக்கும் என்றும் நம்பப்படுகிறது. ஐந்து துவாரங்கள் இருந்ததால், இக்கோவில் பஞ்சபாண்டவர்களுக்கு கட்டியதென்று கருதி பஞ்சபாண்டவ கோவில் என பெயர் வந்திருக்கூடும். 
 பல்லவ கிரந்த எழுத்துகளில், மன்னனுக்கு சூட்டப்பட்ட வெவ்வேறு பெயர்களை குறிப்பிட்டுள்ளனர். அதிலிருக்கும் முதல் பெயர் “ஸ்ரீ மகேந்திர விக்கிரமா”. இக்குறிப்புகளின் ஒரு தனித்தன்மை என்னவென்றால், இதில் இடம்பெற்றிருக்கும் சில பெயர்கள் தெலுங்கு மொழியின் தோற்றம் கொண்டுள்ளது. மற்ற பெயர்கள் தமிழ் மற்றும் சமஸ்க்ரிதத்தில் உள்ளது. இதில் உள்ள சில பெயர்கள் திருச்சியில் உள்ள மேல் குகை கோவிலிலும் இடம்பெற்றுள்ளது . இவை மகேந்திர வர்மனின் சுபாவம் மற்றும் சுயவிருப்பங்களை வெளிப்படுத்துகின்றது.

பல்லாவரம் பஞ்சபாண்டவ மலையில் உள்ள இக்குடைவரை சிறப்பானது , பொதுவாக குடைவரைகள் மூன்று பாகங்களாக (அறைகளாய்) அமைந்திருக்கும் ஆனால் தென்திசை நோக்கி அமைந்த இக்குடைவரை ஐந்து பாகங்களாய் (அறைகள்) பிரிக்கப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளது. மூன்று பாகங்கள் மும்மூர்த்திகளுக்கும் மற்ற இரண்டு பாகங்கள தூவர பாலகர்களுக்காவும் அமைக்கப்பட்டிருக்கலாம் 
குடைவரைகள் – பாறைகளை குடைந்தெடுத்து கோவில்களையோ, மண்டபங்களையோ உருவாக்குவதின் பெயர் தான் குடைவரைகள் 
பல்லவர் குடைவரை 
இந்த குன்றின் மீது இருந்த இரண்டு மிகப்பெரிய குத்துப் பாறைகள் வெடி வைத்து தகர்க்கப்பட்டு இன்று அங்கு பாறை படிமங்களில் சதுர சதுரமாய் பள்ளங்கள் உள்ளன,
பல்லவர் காலத்திலேயே பல்லவபுரம் எனும் பெயர் பெற்றிருக்க வேண்டும் பழம்பெருமைமிக்க இவ்வூரின் பெயர் திரிசூலத்திலுள்ள  முதலாம் குலோத்துங்க சோழரின் கல்வெட்டுகளில் ” பல்லவபுரமான” எனும் பெயரைத்தாங்கியே வருகின்றது 
இக்குடவரையின் முகப்பு பகுதியில் இக்குடைவரையை உருவாக்கிய மகேந்திரவர்ம பல்லவரின் பட்ட பெயர்கள்  பல்லாவரம் பல்லவர் குடைவரையின் பின்புறம்  இடம்பெற்றிருந்ததாக இந்திய தொல்லியல் துறையின் ஏடுகள் கூறுகின்றன
சித்திரக்காரப்புலி : ஒவியக்கலையில் வல்லவன்
குணபரன் : சிறந்த குணவான்
விசித்திரசித்தர் : கலைகளில் புதுமை புகுத்தியவன்.
சத்ருமல்லன் : எதிரிகளுக்கு மல்லனாக விளங்கியவன்.
கலஹபிரியன் : எதிரிகளின் நாட்டின் கலகம் எற்படுத்தி வெற்றி காண்பவன்
மத்தவிலாசன் : மத்தவிலாசம் என்கிற நூலினை இயற்றியவன்.
சேதக்காரி- குடைவரைக் கோயில்களை அமைத்தவன்.
ஸங்கீர்ணஜாதி :  இசையில் நிபுணன் (இவர் இசை குறித்து நூல் இயற்றியது  குறிப்பிடத்தக்கது)
பகாபிடுகு : பகா என்றால் பிரிவில்லாதவன். பிடுகு என்பதற்கு  இடியுடன் கூடிய மின்னல் என்று பொருள். இரண்டையும் சேர்த்து கிளைகளில்லாத ஒரே ஒரு கூரிய மின்னல் என்று பொருள் கொள்ளலாம்.
இவர் ஒவியக்கலையை முன்னிறுத்தி ஒரு நூல் இயற்றிருக்கிறார் என்பதை மாமண்டூர் குடைவரைக் கல்வெட்டு மூலம் அறிகிறோம். அந்த நூலானது  "தக்ஷிண சித்திராக்யம் " என்கிற தென் இந்திய ஒவியக்கலைப்பற்றிய நூலின் உரை என்று அறியப்படுகிறது. அந்த நூலும் நமக்கு கிடைக்காதது  வருந்தத்தக்கது. 

முஸ்லிம் நண்பர் அழைத்து கவர் + பிரியாணி கொடுத்தால் தமிழக முன்கள்ப்ஸ் மீடியாவில் காணொளி

The Pallava temple was built on the southern slope of a hillock among the excavation hills east of the present day settlement. The hillock is known as 'Panchapandava Malai' by the Hindus and the Muslims call it 'Maula Ka Pahad'. This temple was constructed in typical Pallava style with huge pillars. The Pallava temple consists of five sanctums or cells cut into the back wall. The central sanctum of the temple is slightly projected in the front. The gods Brahma, Siva and Vishnu are supposed to stay in the middle three cells and the two corner cells were meant for other deities. All the five sanctums of the temple face south and any other direction and it is one of the unique features of the temple.

 The temple is being used as a Muslim dargah. It has been painted and renovated in recent years beyond any recognition. 

If any body goes through these details, tries to locate and visit, definitely will get  disappointed.  The cave has been taken over the Muslims, a Mogul architecture Dargah (ASTHANA-E-MOULA ALI (A.S) DARGAH (WAKF) has been constructed abutting the cave temple. Floors and walls has been fixed with tiles and the front elevation looks like a Mosque or Dargah. The road leading to the cave temple also has been changed as Dargah Road.

ஆனால் தற்போது மசூதியாக மாற்றப்பட்டு விட்ட இக்குடைவரையில் அக்கல்வெட்டுகள் அழிக்கப்ட்டுவிட்டன. 
குடைவரையின் தூண்களில் ஒட்டப்படுள்ள வண்ண ஒடுகள்
குடைவரையின் தூண்களில் கூட அழகிற்கா(?) வண்ண ஒடுகள் ஒட்டப்பட்டு அதன் பழமை மறைக்கபட்டுவிட்டது மேலும் நடுவில் உள்ள பகுதியில் ஆவூடையாருக்கான இடத்தில் கைப்போன்ற  அமைப்பு பொருத்தப்பட்டுள்ளது 

 
 


இவ்விடத்தை மௌலா-கா-பாஹத் என்றுதான் அழைக்கிறார்கள். “சந்தனக்கூடு” எனப்படும் இஸ்லாமிய விழாவன்று, மொஹமத் நபியின் உடை மற்றும் முடி பக்தர்களின் பார்வைக்கு வைக்கப்படுமாம். 

 

 

குடவரை கோவில் தற்போதைய ஜமீன் பல்லாவரத்தில் இருப்பதையறிந்து சென்றேன். தற்போது  “ஆஸ்தானா – இ- மௌலா அலி” தர்காவாக இருக்கும் இவ்விடத்தை, இஸ்லாமியர்கள் 200 வருடம் பழமையானதென்று நம்புகிறார்கள். இக்கோவிலின் இஸ்லாமிய கட்டமைப்பை கட்டியவர்களின் குறிப்புகள் ஏதும் இல்லை. கையின் ஐவிரல்களை வணங்குவதால், இக்கோவிலிற்கு பஞ்சபாண்டவர் கோவில் என்ற பெயர் வந்ததாக நம்பப்படுகிறது. தர்காஹ்வின் உள்ளே பல்லவர்கள் குடைந்த குடைவரையின் கட்டமைப்பானது தற்போது சுண்ணாம்பால் பூசப்பட்டு அடையாளம் தெரியாமல் உள்ளது . இக்குகையின் ஒரு பகுதி முழுமையாக மூடப்பட்டிருக்கிறது, மூடப்பட்ட இவ்விடத்தில்தான், பல்லவ கிரந்த எழுத்துக்கள் செதுக்கப்பட்டிருக்கிறது.

ஆன்கில விக்கியில் உள்ள செய்தி, படங்கள் எதுவுமே தமிழில் இல்லை ஏன்

Panchapandava Cave Temple, Palavaram 

Architecture :
The Panchapandava Temple was constructed in typical Pallava style, with six huge pillars in front. Cut into the mother rock was a sanctum sanctorum featuring five cells, one for each member of the Trimurti, the presiding deities. The two cells on the outer sides were for subsidiary deities, whose identity is unknown. All five shrines face south. The sanctum as a whole projects outward, carved from a protruding section of the main rock. In the picture below, we see that at one point, a roof covered the sanctum and a narrow porch area. As was typically the case with Mahendra rock-cut temples, the number of shrines correspond to the number of pillars, so that each niche would be approached by stepping between a pair of pillars.
To the Vaisnavas and Saivites, the hill at Panchapandava Cave Temple is known as Panchapandava Malai. To the Muslims who have taken it over, it is known as Maula Ka Pahad. Muslims believe that Pallavaram Hill is home to a relic of Prophet Mohammad. In the evening during Ramadan (called Ramzan in India), Muslim pilgrims walk to the top of the hill where the cave temple ruins are found.
https://slharshini.com/2018/07/09/pallavaram-from-palaeolithic-age/

https://www.facebook.com/pswhatsapp/photos/a1696522623911101/2085066135056746/?__cft__[0]=AZUVWgywMDkQC3OoMzNUG-SEgr98dUiJIxiY2R_cePoso6DMGY7BbP4mETXQJ19FYlL2XbJkdgBZt4KhybYyU8xp3R8j4ycPRggIvk0v2CmTs056oFxkzkTEFj_PmXlTdrRVMDA3DiblPJ-u0WcWLbzG&__tn__=%2CO*F

https://en.wikipedia.org/wiki/Panchapandava_Cave_Temple
https://nattramilzvalavan.wordpress.com/2020/04/12/%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0/

No comments:

Post a Comment

மதுரையில் மாநகராட்சி இளம் பெண் ஊழியரிடம் 4 வருடம் உல்லாசமாக இருந்து குழந்தை பிறந்த பின் கழட்டிவிட்ட திருமணமான பாஸ்டர் மீது புகார்.

மதுரையில் பாஸ்டர் செய்த வேலை.. "கணவன் மனைவியாய் வாழ்ந்தோமே".. கமிஷனர் ஆபீசுக்கு ஓடிய மாநகராட்சி பெண்  By Hemavandhana Updated: Wed...