Friday, May 13, 2022

இந்தி தெரிந்தவன் தமிழகத்தில் பானிபூரி விற்கிறான் - அமைச்சர் பொன்முடி

 ஆளுநர் முன்னிலையில் தமிழக உயர்கல்வி அமைச்சர் இவ்வளவு அநாகரீகமாகப் பேசி இருப்பது கேவலம்.

மும்பை - தாராவியில் வாழும் தமிழர்கள் எதற்காக அங்கு சென்றனர், என்ன மொழி பேசுகின்றனர், எதை விற்கின்றனர் என்பது இவருக்குத் தெரியுமா?
பேரவைத் தேர்தலின் போது சென்னை - சௌகார்பேட்டையில் திமுக ஹிந்தியில் தான் சுவரொட்டி ஒட்டியது. அது ஏன்? பாணிபூரிக்காரர்களின் ஓட்டுக்காகவா?
மத அடிப்படையில் மட்டுமல்ல, மொழி அடிப்படையிலும் சிறுபான்மையினர் பாதுகாக்கப்பட வேண்டும். எந்த மொழியையும் இகழ யாருக்கும் உரிமையில்லை.





 





’ஹிந்தி கத்துகிட்டா பானிப்பூரிதான் விற்க முடியும்’ என்கிற பேச்சைப் பலரும் பல சந்தர்ப்பத்திலும் பேசியிருக்கிறார்கள். இன்னமும் பேசக் கூடும்.

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்கு அலுவலக வேலைக்காகவும், சுற்றுலாவுக்காகவும் போயிருக்கிறேன். உ. பி., மத்தியப் பிரதேசம், மஹாராஷ்ட்ரா, மேற்கு வங்காளம், ஹரியாணா, ஆந்திரா, கேரளா, அஸ்ஸாம், மேகாலயா, ஹிமாச்சல், கர்நாடகா என்று பல மாநிலங்கள் போயிருக்கிறேன்.
அங்கெல்லாம் கட்டிடத் தொழிலாளிகளாக, லாட்ஜில் சுத்தம் செய்கிறவர்களாக, சந்தையில் மூட்டை தூக்குகிறவர்களாக பல்வேறு கூலித் தொழில் செய்கிற தமிழர்களைப் பார்த்திருக்கிறேன். தமிழ் படித்தால் கூலி வேலைதான் செய்ய முடியும் என்று நான் சொன்னால் அது எப்படிப்பட்ட அறியாமை மிகுந்த கருத்தாக இருக்கும்?
எத்தனையோ தமிழர்கள் தொழிலதிபர்களாக, ஹோட்டல் முதலாளிகளாக, பெரிய கடை அதிபர்களாக, ஐ. ஏ. எஸ்., அதிகாரிகளாக, ஐ. பி. எஸ்., அதிகாரிகளாக அங்கெல்லாம் இருக்கிறார்கள்.
அது போலத்தான் ஹிந்திக்காரர்களும்.
ஜவுளி மொத்த வியாபாரம், ஆட்டோமொபைல் ஸ்பேர்ஸ் கடைகள், சிறிய தொழிற்சாலைகள் என்று செய்கிறவர்கள் இங்கே ஏராளம். ஐ. ஏ. எஸ்., அதிகாரிகள், ஐ. பி. எஸ்., அதிகாரிகள் இருக்கிறார்கள்.
Constitution இன் 153(A) குறிப்பிட்ட மொழியை, மொழிக்காரர்களை இழிவாகப் பேசுகிறவர்களுக்கு மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனையும் அபராதமும் உண்டு என்று சொல்கிறது.
பேச்சில் கவனம் அவசியம்.


இந்தி தெரிந்தவன் தமிழகத்தில் பாணி பூரி விற்கிறான் - அமைச்சர் பொன்முடி ஆளுனர் முன் பேச்சு.

https://www.facebook.com/News18TamilNadu/videos/545850576926433/?__tn__=%2CO

https://www.facebook.com/SunNewsTamil/videos/525117512537020/?__tn__=%2CO

https://www.facebook.com/watch/?v=983079395967336&__cft__[0]=AZWRy5f0yCWSEUV7ePaB7oNl4i_WaBGB62LTiNteQyUE7bYGufPemjiozTgyboFFrKMkczVSgmb1bMhwI8igq45qP5R1relWtXMsaZzqdmmjC4yOMk027jafMjQegO7B_KiLAOK7nvOfmYGPFgtyElkeqYY2m7mibVWrqBCf6gWIgw

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா இன்று நடந்தது. இதில் ஆளுநர் ஆர்.என்.ரவி, உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி , இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன் ஆகியோர் பங்கேற்றனர்.
இந்த விழாவில் பேசிய அமைச்சர் பொன்முடி "இது பெரியார் மண், திராவிட மாடல் அரசு. தமிழகத்தில் மத்திய அரசு இந்தியை திணிக்க கூடாது" என்று பழைய பாட்டை பாடினார்.
அடுத்து பேசிய ஆளுநர்
"மத்திய அரசு தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் இந்தியை திணிக்கிறது என்பது போன்ற தவறான கண்ணோட்டத்தை உருவாக்கியுள்ளனர். புதிய கல்விக் கொள்கையின் முக்கியமான நோக்கமே, பாடங்களை அவரவர்கள், அவர்களது தாய் மொழியில் படிக்க வேண்டும் என்பது தான். தமிழ் மொழி தொன்மையானது.
அதனால் தான் பிரதமர், சுப்பிரமணிய பாரதி இருக்கையை பனாரஸ் பல்கலைக்கழகத்தில் ஏற்படுத்தினார்."
என்று பதிலடி கொடுத்தார்.
இதுவரை தனது அதிகாரத்தின் எல்லைகளையும், அரசியல் சதுரங்கத்தின் ஆட்ட முறைகள் குறித்த தரவுகளும் அறிந்த ஒருவர் ஆளுநராக தமிழகத்திற்கு கிடைத்ததில்லை.
ஆனால் தற்போதைய ஆளுநர் ஆர்என் ரவி அவர்கள் திராவிட கூச்சல்களுக்கு ஆணித்தரமான பதில்களை தந்து அலறவிட்டு வருகிறார். அவர்கள் போடும் பந்துகளை எல்லாம் சிக்ஸர்களாக மைதானத்தை விட்டு வெளியே பறக்கவிடுகிறார்.
அருமையான
ஆளுமை.
ஆனால் இளநிலை சட்டகல்வி, மூன்று முதுநிலை பட்டயங்கள் மற்றும் முனைவர் பட்டமும் பெற்றுள்ள தமிழக உயர் கல்வி துறை அமைச்சர் பொன்முடி இன்னும் இந்தி திணிப்பு என்று உருட்டி கொண்டு திரிகிறார்.
இவர் இந்தி திணிப்பு என்று உருட்டிய இடம்-பன்மொழி புலமை பெற்ற பாரதியாரின் பெயரில் இயங்கும் பல்கலைகழகம்.
ஆளுநரின் பதில் உண்மையே என்பதற்கு சாட்சி
மத்திய அரசு பன் மொழி கலாச்சார அறிவியல் ஆளுமைகளுக்கு எப்போதும் உரிய பெருமையை தரும் என்ற உண்மையை
உலகிற்கு சொல்லும் விதமாக இந்திய விண்வெளி துறையை உச்சத்திற்கு கொண்டு சென்ற இந்தி பேச தெரியாத முன்னாள் இஸ்ரோ தலைவர் சிவன்.
'இந்தியால் தமிழ் அழிய போவதில்லை.
மாறாக தமிழில் ஆங்கில சொற்கள் கலப்பினை தடுத்து தமிழின் மேன்மை காக்கப்படும்."
வாய்மையே வெல்லும்.

வைரவேல் சுப்பையா


தமிழ் தெரிந்தவன் இலங்கையில் சிங்களவனுக்கு அடிமையாக தேயிலை தோட்டத்தில் கூலி வேலை செய்கிறான்.
தமிழ் தெரிந்தவன் மலேசியாவின் ரப்பர் தோட்டத்தில் கூலி வேலை பார்க்கிறான்.
தமிழ் தெரிந்தவன் துபாயில் ஷேக்குகளின் கழிவறைகளை சுத்தம் செய்கிறான்.
தமிழ் தெரிந்தவன் கர்நாடக பண்ணைகளில் விவசாய கூலியாக வேலை செய்கிறான்.
தமிழ் தெரிந்தவன் தில்லியின் பல பகுதிகளில் இட்டிலி கடை நடத்துகிறான்.
இதெல்லாம் கூட பரவாயில்லை, உழைத்து பிழைக்கிறார்கள் என நாம் பெருமையாக சொல்லலாம்.
தமிழ் தெரிந்தவன் மும்பையில் கெட்ட வார்த்தையில் மிரட்டிக் கொண்டு மராட்டியனுக்கு அடியாளாக மாமுல் வாங்குகிறான்.
தமிழ் தெரிந்தவன் ஆந்திராவில் செம்மரம் கடத்துகிறான்.
தமிழ் தெரிந்தவன் மும்பை சிவப்பு விளக்கு பகுதியில் ஆந்திரா, கர்நாடகா என கூவிக் கொண்டு ஆள் பிடிக்கிறான்.
தமிழ் தெரிந்தவன் தொடர் ஊழல்களில் திளைத்து, 2ஜி ராஜா என பெயர் வாங்கி, ஊழல் ராணி என திஹார் ஜெயிலில் அடைப்பட்டு, சந்தி சிரிக்க வைக்கிறான்.
ஆஹா எத்தனை தமிழர்கள் உலகமெங்கும் எத்தனை பெரிய பதவிகளில் இருக்கிறார்கள், எத்தனை பெரிய தொழில்களில் இருக்கிறார்கள் என கேட்க தோன்றுகிறது அல்லவா ?
தமிழ் தெரிந்தவர் இந்தியாவின் நிதி அமைச்சராக, வெளியுறவுத்துறை அமைச்சராக, தெலுங்கானா கவர்னராக, பண்ணாட்டு நிறுவனங்களை நடத்துபவர்களாக, அதன் தலைவர்களாக இருக்கிறார்களே ?
ஆம் அது போலவே இந்தி தெரிந்த பலரும் மிகப்பெரும் தொழில் அதிபர்களாய், உயர் பதவியில் இருப்பவர்களாய் இருக்கிறார்கள்.
டாஸ்மாக்கின் நீண்ட வரிசையில் நின்றுக் கொண்டு, குவாட்டர் வாங்கி கட்டிங் போட்டு, உழைக்காமல், பிழைக்காமல், தெரு ஓரங்களில் உருண்டு கிடக்கும் தமிழனை விட, அரசியல் எனும் பெயரில் மொழியை வைத்து மக்களை பிரித்து பத்து தலைமுறைக்கு கொள்ளை அடிக்கும் கேவலமான குடும்ப அரசியல்வாதிகளை விட, தன் குடும்பத்தை காப்பாற்ற உழைத்து சுய தொழிலாக பாணி பூரி விற்கும் இந்திக்காரன் எனும் இந்தியன் மிக மிகப்பெரியவனே.

வட மாநிலத்தவர்கள் ஹிந்தி கற்றுக் கொண்டு என்ன செய்கிறார்கள்? இங்கே வந்து பானிப்பூரி கடை போடுகிறார்கள் என அமைச்சர் பொன்முடி சொல்கிறார்..
சரி,இங்கிலாந்து - அமெரிக்காவில் எல்லோரும் இங்லீஷ்தான் பேசறான்..பிறகு பிச்சை எடுப்பவர்கள் தொடங்கி அடிமட்ட வேலை செய்யும் எல்லோரும் அதை பேசுபவர்களாகவே உள்ளார்கள்? இங்லீஷ் படித்தால் இதுதான் நிலை என்று பேச முடியுமா?
உலகம் முழுக்கவும்,இந்தியா முழுக்கவும் பிழைப்புக்காக சென்ற எல்லா தமிழரும்,சுந்தர் பிச்சையாகவும்,அப்துல் கலாமாகவுமா அமர்ந்துள்ளார்கள்?
மும்பை,போபால்,அகமதாபாத் என எங்கும் தமிழர்கள் உள்ளார்கள்..அதில் பலர் கூலி வேலை செய்பவர்கள்..ம.பியில் வேலை செய்யும் தமிழர்களுக்கு ரேஷன் கார்டு வேண்டும் எங்களுக்கு இங்கே சிரமமாக உள்ளது என கேட்டு, அதை பாஜக அரசு நிறைவேற்றிக் கொடுத்தது..
ஆக,எந்த வேலை செய்வதும் இழிவல்ல..திருடுவது,கொலை செய்வதுதான் இழிவு.உழைத்து பிழைப்பது இழிவல்ல,அதை ஒரு மொழிக்காரன் மட்டுமே செய்கிறான் நானெல்லாம் பண்ணையார் தெரியுமா! பிறப்பிலேயே என்று பேசுவதுதான் மேட்டிமைவாதம்..
இந்தியாவில் மிகப்பெரிய வணிகர்கள்,தொழில் முனைவோர்கள் வடஇந்தியர்கள்தான்.'வடக்கு வாழ்கிறது,தெற்கு தேய்கிறது' அம்பானி - டாடா - அதானி என்று எப்போதும் கதறுவது யார்?
இங்கே இருந்தால் நீ ஆரியன்,தெலுங்கன்,மலையாளி என்று வசைபாடுவது..ஆனால் இவர்களே வெளியே போய் சுந்தர் பிச்சை போன்றோ அல்லது யார் போலவோ உலகத்தில் வென்றுவிட்டால்..அவர்கள் தமிழர்கள் என்று போலிப் பெருமிதம் கொள்வது..இதை எத்தனை நாள் செய்து நம்மை நாமே ஏமாற்றிக்கொள்ளப் போகிறோம்?..

இப்பொழுது முடி வெட்டுதல், சர்வர், செக்யூரிடி, கட்டிட வேலை எனப் பலதரப்பட்ட வேலை செய்கிறார்கள். மற்ற பலர் டெக்ஸ்டைல், எலக்ட்ரிகல், நகைக்கடைகள் எனப் பலரும் கடை வைத்துள்ளனர். ஐடி நிறுவனங்களின் பட்டியலில் பலரும் வடஇந்தியர்கள். திருப்பூர் பின்னலாடை நிறுவனரின் வாட்ஸ்அப் பதிவை பலரும் பார்க்க வேண்டும். ஆகவே தமிழர்களின் நல்வாழ்வு குறித்து கவலைப்பட வேண்டிய தருணம்.

ஹர்துவார்ல நம்ப மதுரக்காரரு ஸ்பெஷல் தோசை ஊத்துவாரு..
இந்தி படிச்சிருந்தா ரிஷிகேஷ்ல கைடு ஆகிருப்பேன்.. வீணாப்போயிட்டேன்ம்பாரு...
ஆனா செம்மடேஸ்ட்டான மசால்தோசை போடுவாரு..
சாம்பார குடிச்சிகிட்டே சாப்புடனும்..
செம்ம கூட்டமா இருக்கும்..
அங்க ஒருத்தரும் தமிழன் இங்க வந்து தோச ஊத்துறான்னு ஏளனமா சொல்றதில்ல..

இட்லி பூக்கடை பழவண்டி வண்டியில் பலகாரம் விற்பது என்று ரோட்டில் வியாபாரம் செய்பவர்கள் இந்தியா முழுவதும் த நா சேர்ந்தவர்கள் பல லட்சம் பேர். அவர்களை இட்லி கடை ஆயா, பையாவா என்ற கூப்பிட்டால் எப்படி இருக்கும். வரிப்பணம் இந்த மாதிரி பேசுவதற்குத் தான் பயன்படுத்தப்படுகிறது. ரொம்பவும் நன்றாக இருக்கும்.


இங்கே ஹிந்தி தெரியாததால் தான் மொத்த வியாபாரம் குறிப்பாக ஃபேன்ஸி,துணி ஆடை காலணிகள் போன்ற மொத்த வியாபாரம் மார்வாடிக்கள் மற்றும் அமைதிகள் கையில் உள்ளது.
அதிலும் உருதுவை அறிந்த அமைதிகள் மற்ற தமிழர்களை விஷயத்தில் மாற்றி பேசுகிறார்கள். பாயிமுனையில் மொத்த வியாபாரம் முழுவதும் யாரிடம் உள்ளது. அதே நிலை மற்ற மாவட்டங்களிலும். பானிபூரி மட்டுமே இவர்கள் கண்களுக்கு தெரியும் போல.
பாரிமுனையின் டூல்ஸ் மற்றும் இரும்பு வியாபாரம் மொத்தமாக யாரிடம் உள்ளது? சௌக்கார் பேட்டை நிலவரம் எப்படி?


ஹிந்தி படித்தால் பானிபூரி தான் விற்க முடியும் என்று அமைச்சர் பொன்முடி சொன்னது சிந்திக்காமல் ஏதோ முட்டாள்தனமாக சொன்ன கருத்தாக பார்க்க முடியாது. திமுகவினரின் தெளிவான ஸ்ட்ராட்டஜி இது.
இது போன்று பேசினால் வடக்கன்கள் பதிலடி கொடுப்பார்கள். அதிலும் குறிப்பாக வட இந்திய பாஜக தலைவர்கள் எதிர்வினையாற்றுவார்கள். அந்த கருத்துகளை முன்களப்ஸ் மூலம் ஊதி பெரிதாக்கி - பார்த்தீர்களா ஃபாசிச பால் பாயாச சேமியா பாயாச பா.ச.க தமிழர்களுக்கு எதிரான கட்சி. அவர்களிடமிருந்து தமிழர்களை காப்பாற்ற டீம்காவால் தான் முடியும் என்று உருட்டுவதற்கு வசதியாக இருக்கும்.
இது ஏதோ டீம்கா முதல் முறை செய்வதல்ல. 1960, 1970 களில் காங்கிரஸுக்கு எதிராக இதையே செய்தார்கள். அன்றைய சூழ்நிலைக்கும் இன்றைய சூழ்நிலைக்கும் உள்ள ஒற்றுமை என்ன? அன்று திமுக vs காங்கிரஸ். இன்று திமுக vs பாஜக. அதாவது டீம்காவிற்கு நேரடி எதிரியாக தேசிய கட்சிகள் இருக்கும் போது இப்படி உருட்டுவது அவர்கள் வழக்கம்.
அன்றைக்கு நேருவும் இந்திரா காந்தியும் இதர வட இந்திய காங்கிரஸ் தலைவர்களும் டீம்காவின் இது போன்ற பேச்சுக்களுக்கு எதிர்வினையாற்றினார்கள். அதை வைத்து டலீவர் கலீஞர் காங்கிரஸ் கட்சியை தமிழர் விரோதியாக சித்தரித்து அந்த கட்சியையே தடம் தெரியாமல் அழித்து விட்டார்.
எம்ஜிஆர் திமுகவிலிருந்து பிரிந்து தனிக்கட்சி ஆரம்பித்து அவர் காலத்திலும் அவருக்கு பிறகான ஜெயலலிதா அம்மையாரின் காலத்திலும் டீம்கா இது போன்று பெரிய அளவில் வடக்கன் - தெற்கன் அரசியலை செய்ததில்லை. ஏனென்றால் காங்கிரசுடன் சமாதானமாகி வளம் கொழிக்கும் மந்திரி இலாக்காக்களை பெற்று கல்லா பெட்டிகளை நிரப்பும் வாய்ப்பு கிடைத்ததால் பானி பூரி பேச்சுக்களுக்கு தேவையில்லாமல் இருந்தது.
ஜெ அம்மையாருக்கு பிறகு அதிமுக உடைந்து கட்சி இரட்டையர் தலைமைகளில் வலுவிழந்து எதிர்பாராத விதமாக அண்ணாமலையும் என்ட்ரியாகி ஒரு தேசிய கட்சி மீண்டும் தலைதூக்கும் சூழ்நிலையில் வடக்கன், பீடாவாயன், பானிபூரி, ஹிந்தி அரக்கி போன்றவை எல்லாம் மீண்டும் தூசி தட்டி எடுக்கப்படுகிறது. ஆனால் இது 1960கள் இல்லை மக்கள் ஏமாறுவதற்கு என்பதை டீம்கா விரைவில் புரிந்து கொள்ளும்.

No comments:

Post a Comment

காலில் செருப்பு, நெருப்பு இல்லத அடுப்பு பொங்கல் போட்டோ ஷூட் செய்த தமிழர் விரோத்கள்- மனிதர்களா

 காலில் செருப்பு, நெருப்பு இல்லத அடுப்பு பொங்கல் போட்டோ ஷூட் செய்த தமிழர் விரோத்கள்- மனிதர்களா